”மக்கள் பிரதிநிதியாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன்” : நடிகர் விஷால்

”மக்கள் பிரதிநிதியாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன்” என எம்.ஜி.ஆர் இல்லத்தில் நடிகர் விஷால் பேட்டியளித்தார்.

விஷால்

நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல்செய்ய உள்ள விஷால், காலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், காலை 10 மணி அளவில் ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லம் சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து, காலை 11 மணிக்கு அண்ணா நினைவிடம், 11.15 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் விஷால், 12.30 மணி அளவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல்செய்ய உள்ளார்.

ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால்,  “இந்தத் தேர்தலில் நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறேன். குறிப்பாக, ஆர்.கே.நகர் மக்களின் தைரியத்தை ஆதரவாக எடுத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறேன். இதில் நான் 100 சதவிகித வெற்றிபெற வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!