'எனக்கும் தொப்பிதான் வேணும்' - அடம்பிடித்த தேர்தல் மன்னன் பத்மராஜன் | Pathmarajan urges EC to allocate hat symbol in RK Nagar by election

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (05/12/2017)

கடைசி தொடர்பு:15:55 (05/12/2017)

'எனக்கும் தொப்பிதான் வேணும்' - அடம்பிடித்த தேர்தல் மன்னன் பத்மராஜன்

தேர்தல் மன்னன் பத்மராஜனும் தொப்பி சின்னம் கேட்பதால், ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுவரை 145 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் மனுக்கள் மீதான சரிபார்ப்பு இன்றுமுதல் தொடங்குகிறது. வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள், மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். "போட்டியிட தேர்வுபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள், தலா மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒன்றை ஒதுக்கிக் கொடுக்கும்படி கோரலாம். ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் கோரினால், குலுக்கல் முறை கொண்டுவருவோம்" என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நம்மிடம் பேசிய பத்மராஜன், "பலூன், ஹெல்மெட் மற்றும் தொப்பி ஆகிய மூன்றில் ஒன்றை ஒதுக்கக் கோரியுள்ளேன். தொப்பி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார். பத்மராஜன் போலவே சுயேச்சைகளில் பலர் விருப்ப சின்னமாக "தொப்பி"யைக் கேட்டுள்ளனர். "டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காமல் தடுக்க யார் முயன்றாலும் தினகரனின் வெற்றியைத் தடுக்க முடியாது" என்கிறது தினகரன் தரப்பு. இரட்டை இலை யாருக்கு என்பது முடிந்து, தொப்பி யாருக்கு என்பது தொடங்கியுள்ளது.