Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டெபாசிட் வாங்கினால் சின்னம் வரும்!' - தினகரனிடம் 'கறார்' காட்டிய சசிகலா

தினகரன்

Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெறக்கூடிய வாக்குகளை மிக முக்கியமாகக் கருதுகிறார் சசிகலா. 'கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் நம் பக்கம் வர வேண்டும் என்றால், கணிசமான வாக்குகளைப் பெற வேண்டியது அவசியம்' எனக் குடும்ப உறுப்பினர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் சசிகலா. 

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரதான போட்டியாளர்களாகத் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் களத்தில் நிற்கின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், டி.டி.வி.தினகரன் உட்பட 72 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்தகால தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க-வும் தி.மு.க-வுமே வெற்றி பெற்று வந்துள்ளன. கடந்தமுறை தொப்பி சின்னத்தில் களமிறங்கிய தினகரன், அதே சின்னத்தைக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்குச் சாதகமாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. 'சின்னம் ஒதுக்கீடு செய்வதைத் தேர்தல் நடத்தும் அதிகாரியே உறுதி செய்வார்' என நீதியரசர்கள் கூறிவிட்டனர். தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளைப் பிரித்து, நல்ல வாக்குகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 'டி.டி.வி.தினகரனோடு நல்ல நட்பில் இருக்கும் விஷால், அ.தி.மு.க வாக்குகளைக் கவர்வதற்காகவே களமிறங்கினார். அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை டி.டி.வி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எனவே, அ.தி.மு.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னிறுத்தி தீவிரமாகக் களமிறங்க இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். 

சசிகலாஆர்.கே.நகர் தேர்தலைப் பொறுத்தவரையில், சசிகலாவின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரைச் சந்திக்கச் சென்ற மன்னார்குடி உறவுகள், 'நம் கையில் இருந்த கட்சியை 100 சதவிகிதம் அழித்த பெருமை டி.டி.வி-க்கே சேரும். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்த அதேநேரத்தில் செங்கோட்டையனையும் கட்சிப் பதவியில் முன்னிறுத்தியிருந்தால், இப்படியொரு வீழ்ச்சியை நமது குடும்பம் சந்தித்திருக்காது. 'செங்கோட்டையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். கட்சிக்கு விரோதமாக என்னவெல்லாம் செய்தார் தெரியுமா' என முட்டுக்கட்டை போட்டதே தினகரன்தான். அதன் பலனை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இப்போது ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இனி கட்சிப் பணிகளில் திவாகரனை முன்னிறுத்துங்கள். கள நிலவரத்தை அவர் மாற்றிக்காட்டுவார்' என ஆதங்கப்பட,

அப்போது இடைமறித்த சசிகலா, 'இடைத்தேர்தலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் டெபாசிட் இழந்துவிடக் கூடாது. ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கட்சியும் இரட்டை இலையும் உள்ளது. இவர்களுக்கு மத்தியில் நாம் இரண்டாம் இடத்தைப் பெற்றாக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டாவது வாங்கிவிட வேண்டும். அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் நம் பக்கம் இருக்கின்றார்கள் என்ற கருத்தை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும். அடுத்து வரக்கூடிய நாள்களில் இரட்டை இலைச் சின்னமும் நமக்கு வந்து சேரும். இதை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளைக் கவனியுங்கள். உங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்துங்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை தினகரன் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர் குடும்ப உறவுகள். 

"குடும்பத்துக்குள் நடக்கும் பூசல்களைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறார் தினகரன். தனது ஆதரவாளர்களை மட்டும் திரட்டிக்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருகிறார். நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி, வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டுமே ஆர்.கே.நகரில் வலம் வருகின்றனர். கார்டன் கணக்கு வழக்குகளை விவேக் ஜெயராமன் கையாண்டு வருவதால், ஒவ்வொருமுறையும் அவரை நேரில் சந்தித்துப் பேசுவதை தினகரன் விரும்பவில்லை. கடந்தமுறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைமுகமாகத் தேர்தல் பணிகளைக் கவனித்தார் விவேக். இந்தமுறை திவாகரன், விவேக் உள்ளிட்டவர்கள் ஒதுங்கியிருப்பதை சசிகலா விரும்பவில்லை. 'தனக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பும் தினகரன், இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கிக் காட்டட்டும்' எனக் கொந்தளிக்கின்றனர். சசிகலாவின் அறிவுரைகளை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை" என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

இடைத்தேர்தல் பிரசாரத்தை கலவர ரேகையோடு எதிர்கொண்டு வருகிறார் டி.டி.வி.தினகரன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement