ஆர்.கே.நகரை உளவுபார்க்க முதல்வர் உத்தரவு! | Chief Minister order to spy RK Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (09/12/2017)

கடைசி தொடர்பு:19:11 (09/12/2017)

ஆர்.கே.நகரை உளவுபார்க்க முதல்வர் உத்தரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிக்காக, உளவுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ரகசியமாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

RK nagar

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் கட்சியினருடன் சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிராகக் களமிறங்கிய டி.டி.வி.தினகரன், பிரஷர் குக்கர் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு சூறாவளிப் பிரசாரம் செய்துவருகிறார். அவருக்குப் போட்டியாக மருதுகணேஷ், மதுசூதனன் படைசூழ ஆர்.கே.நகரை வலம் வருகின்றனர். 

இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது என்பதைக் கண்டறியவும், எதிர்க்கட்சிகளை உளவுபார்க்கவும் ஆளுங்கட்சி தரப்பில் போலீஸ் டீம் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உளவுப்பிரிவைச் சேர்ந்த இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார்,  ஆர்.கே.நகரில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் தினகரன், மருதுகணேஷ் என எதிர்க்கட்சி வேட்பாளர்களின் நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கண்காணித்து, உடனுக்குடன் ரிப்போர்ட் அனுப்பிவருகின்றனர். இதற்கிடையில், கடந்தமுறை பணப் பட்டுவாடா காரணமாகத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதேபோல இந்த முறையும் நடந்துவிடக்கூடாது என்பதில் ஆளுங்கட்சியினர் கவனமாக இருக்கின்றனர். அடுத்து, தேர்தலில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று நடத்திய சர்வேயில், ஆளுங்கட்சிக்கு எதிராகவே ரிப்போர்ட் வந்துள்ளதாம். இந்தத் தகவல் முதல்வர், துணை முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாம். இதனால், பிரசாரத்தில் அதிரடி காட்ட ஆளுங்கட்சி தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


[X] Close

[X] Close