ஸ்டாலின் வேட்டியில் கொட்டிய தேநீர், பதறிய வைகோ!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வ.உ.சி.நகரில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும். அதற்கான ஆயத்தத்தை இந்த ஆர்.கே. நகரில் மருதுகணேஷ் வெற்றியின்மூலம் தொடங்க வேண்டும்" என்றார்.

இதுவரை ஸ்டாலினும் வைகோவும் எதிரெதிர் துருவங்களாகவே அடையாளம் காணப்பட்டுவந்தனர்.  கலைஞரை வீட்டில் போய்ப் பார்த்து, அவரின் உடல்நலத்தை விசாரித்தபோதே வைகோவும், ஸ்டாலினும் நெருங்கிவிட்டனர்.  

மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களில் அவர்களின் அடுத்த சந்திப்புகள் நடந்தன. அப்போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டனர்.  வ.உ.சி.நகர் கூட்ட மேடையில் முத்தரசன், திருநாவுக்கரசர், காதர்மொகைதீன், ஜவாஹிருல்லா, தொல்.திருமா, ஈஸ்வரன், எஸ்றா சற்குணம் உள்ளிட்ட தலைவர்கள் முன்பாக நேற்றிரவும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் கையிலிருந்த டம்ளரிலிருந்து டீயில் ஒருதுளி அவர் வேட்டியில் பட்டுவிட்டது.  அதைப் பார்த்த வைகோ, சட்டென அதைத் துடைக்கத் தொடங்கிவிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!