குக்கர் கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை! அதிரும் ஆர்.கே.நகர் தொகுதி #RKNagarAtrocities

ராயபுரத்தில் இருக்கும் குக்கர் கடையில் வருமான வரித்துறையும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையும்  திடீர்  சோதனையை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நடத்தப்பட்ட குக்கர் கடை

ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, பல்வேறு வழிகளில் பணப்பட்டுவாடா நடப்பதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. டோக்கன் முறையிலும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வருவதையடுத்து, தேர்தல் ஆணையம், அதிகாரிகளை உஷார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், ராயபுரத்தில் இருக்கும் குக்கர் கடையில் டோக்கன் வழங்குவதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து வருமான வரித்துறையும் மாநிலத் தேர்தல் ஆணையப் பறக்கும் படையும் திடீர் சோதனையை நடத்தியுள்ளது.

சோதனை நடத்தும் அதிகாரிகள்
 

அதிக அளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!