ஆர்.கே.நகரில் பதற்றம்... கடைகள் அடைப்பு! #RKNagarAtrocities | Dinakaran supporters holds protest in RK Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (16/12/2017)

கடைசி தொடர்பு:16:16 (16/12/2017)

ஆர்.கே.நகரில் பதற்றம்... கடைகள் அடைப்பு! #RKNagarAtrocities

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று முதல் பணம்பட்டுவாடா நடைபெற உள்ளதாகத் தகவல் கசிந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

rknagar
 

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான ரவி என்பவர் தொகுதி மக்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் ரவியைத் தண்டையார்பேட்டை போலீஸார் விசாரித்தனர். தகவல் அறிந்த தினகரன் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த ஒரு மணி நேரமாகப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆர்.கே.நகரில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே மதுசூதனன் தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு தினகரன்மீது புகார் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் ‘ஆர்.கே.நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். குக்கருக்கான தொகையைத் தேர்தல் கணக்குச் செலவில் சேர்த்து தினகரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.