ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி அவசரமாக டெல்லி பயணம்

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாகுறித்த சோதனைக்குப் பின்னர், இன்று டெல்லிக்குப் பயணமாகியுள்ளார், தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா.

விக்ரம் பத்ரா

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் தேடுதல் பணியில் மும்முரம்காட்டிவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆர்.கே.நகர் முழுவதும் ஆய்வுப் பணியிலிருந்த தேர்தல் அதிகாரி, தனது சோதனையின்போது பல கட்சி ஆதரவாளர்களிடமிருந்தும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்செய்தார்.

பணப்பட்டுவாடா சோதனையின்போது, போதிய போலீஸ் இல்லாததால் தேர்தல் உயரதிகாரி விக்ரம் பத்ரா உத்தரவில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் அங்கே அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான நிலை காணப்பட்டதால், தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா,  எல்லா கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளையும் இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு சந்திப்புக்கு வரவழைத்திருந்தார். அதில் தமிழிசை, ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பணப்பட்டுவாடா குறித்துப் புகார் அளித்தனர். 

இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையைத் தயார் செய்த தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, அதை சமர்ப்பிக்க டெல்லி விரைந்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!