வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (24/12/2017)

கடைசி தொடர்பு:18:15 (24/12/2017)

#LiveUpdates 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி #RKNagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் 89,013 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார். 

தற்போதைய நிலவரம்..

r.k.nagar

தினகரன்

ஐந்தாவது சுற்றில் இருந்து 12வது சுற்று வரை 51% வாக்குகளை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன்.  அதிமுகவை விட 31 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கும், பெரியார் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு சென்னை மெரினா அருகே தினகரன் தொண்டர்கள் பாட்டு நடனம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த அதிமுக ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளர்களை அடித்து விரட்டினர். செருப்புகளை தூக்கி தினகரன் ஆதரவாளர்கள் மீது தூக்கி வீசினர்.  

தினகரன்

dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 11வது சுற்றுமுடிவில் 54,316 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலையில் உள்ளார். தினகரன் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இதனிடையே எம்.ஜி.ஆரின் 30வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மலர் தூவி செலுத்தினார். இதனையடுத்து பெரியாரின் நினைவுதினத்தையொட்டி பெரியார் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் 34,346 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனன் 18,241 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 9206 வாக்குகள் பெற்றுள்ளார். தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். இதனால் அதிமுக தொண்டர்கள் உச்சக்கட்ட கோவத்தில் உள்ளனர். ஆர்.கே.நகரில் இனிப்பு வழங்கி கொண்டாடி வரும் தினகரன் ஆதரவாளர்களை பார்த்து அதிமுக ஆதரவாளர்கள் “இன்னும் கொருக்குப்பேட்டை உட்பட நிறைய பகுதிகள் இருக்கு. வாக்கு எண்ணிக்கை முடியட்டும்.. அப்போதுத் தெரியும் யார் முன்னணி என்பது” என்று பேசி வருகின்றனர்.  ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டும், கிண்டல் செய்து கொண்டும் இருக்கின்றனர். 

தற்போதைய நிலவரம்..

rknagar

நான்காவது சுற்றிலும் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 

மூன்றாவது சுற்று முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 15868 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை தினகரனுக்கு 10,421 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனனுக்கு 4,521 வாக்குகள் கிடைத்துள்ளது. தினகரனுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரசாரத்தின் போது தினகரன் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தை கையில் எடுத்ததே இந்த அபார வாக்குக்களை குவிக்க காரணம் என்று கூறப்படுகிறது. மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. 

 

 

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அங்குள்ளவர்களை தாக்கி வருகின்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையமான சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது. 

 

ஆர்.நகர்

 

 

வாக்கு எண்ணிக்கை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தினகரன், அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. நாற்காலிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தினகரன்  7000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதால் மதுசூதனன் ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளர்களை அடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரி பிரவீன்  நாயர் வெளியே வந்துவிட்டார். போலீஸார் அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் தினகரன். தற்போதைய நிலவரப்படி 5339 வாக்குகள் தினகரனுக்கு பதிவாகியுள்ளன. மதுசூதனன் 646 வாக்குகள் பெற்றுள்ளார். 

தினகரன்

இன்று எம்.ஜி.ஆருக்கு 30வது நினைவுதினம். ஆர்.கே.நகர் தற்போதைய நிலவரப்படி தினகரன் முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் சமாதியில் மரியாதை செலுத்தினர். 

madhusuthanan
 

தற்போதைய நிலவரப்படி தினகரன் 412 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனன் 257 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 93 வாக்குகள் பெற்றுள்ளார். 

தற்போதைய நிலவரப்படி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றார் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன். 

ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 4 தபால் வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. பதிவான ஒரே ஒரு தபால் ஓட்டும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான 1,76,885 வாக்குகளை எண்ணும் பணித் தொடங்கியது.  இன்னும் சற்று நேரத்தில் முதல் சுற்று நிலவரம் வெளியாகும்.

rknagar

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவிடும். இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. ஜெயலலிதா தொகுதியை கைப்பற்றப்போவது யார்? அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் என்று மூன்று பேருமே வெற்றி தங்களுக்குத்தான் என்று சொல்லி வருகிறார்கள்.இந்தத் தேர்தலில் பெறும் வாக்குகள்தாம் தமிழக அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது என்றுக் கூட சொல்லலாம்!

rk nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும். மொத்தம் 256 பெட்டிகள் இருந்தாலும் யார் வெற்றி பெறுவார் என்ற சாதக பாதக நிலவரம் மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

RK Nagar Election Result