’கட்சி யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை!’ - செய்தியாளர்களிடம் கலகலத்த தினகரன் #RKNagar | TTV Dinakaran about rk nagar election

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (24/12/2017)

கடைசி தொடர்பு:11:17 (24/12/2017)

’கட்சி யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை!’ - செய்தியாளர்களிடம் கலகலத்த தினகரன் #RKNagar

”தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே.நகர் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

dinakaran

 

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை தினகரனுக்கு 10,421 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனனுக்கு 4,521 வாக்குகள் கிடைத்துள்ளது. தினகரனுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரசாரத்தின் போது தினகரன் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தை கையில் எடுத்ததே இந்த அபார வாக்குக்களை குவிக்க காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ’தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே நகர் மக்கள் வெளிபடுத்தியுள்ளனர். வெற்றிக்கும் பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி. அராஜகத்தின் மொத்த உருவம் மதுசூதனன். கட்சியோ சின்னமோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. மக்கள் எங்கள் பக்கம்’ என பேசினார்.

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனடி அப்டேட்ஸுக்கு... RKnagar Live Updates

நீங்க எப்படி பீல் பண்றீங்க