காவல்துறையை நினைத்தால் அசிங்கமாக உள்ளது..! டி.டி.வி.தினகரன் காட்டம்

காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்த்தால் அசிங்கமாக உள்ளது. காவல்துறை அல்சேஷன் போல செயல்படுகிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன், அதில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவின் நாயரிடமிருந்து பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், 'எனது, தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா விட்டுசென்ற பணிகளை, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வேன்.

ஆளும் கட்சியின் வெற்றிக்கு தேர்தல் ஆணையம், காவல்துறை சேர்ந்து முயற்சி செய்தது. இருப்பினும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஆளும்கட்சி என்பதால் டெபாஸிட் இழப்பதிலிருந்து தப்பித்தது. மக்களின் கணிப்பு, ஊடகங்களின் கணிப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. நான், ஒன்றும் அரசியலில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.

கட்சி குறித்து முடிவுகளை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கமாட்டேன். தேர்தல் வெற்றிக்காக, சசிகலாவை சந்தித்து ஆசிபெறுவேன். காவல்துறை, ஏவல்துறை போன்று செயல்படுகிறது. காவல்துறையை நினைத்தால் அசிங்கமாக உள்ளது. காவல்துறை அல்சேஷன் போல செயல்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி மக்களைச் சென்று சந்திப்பேன். எனக்கு, இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த ஆர்.கே.நகர் மக்களை மறக்கமாட்டேன். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ஸ்லிப்பர் செல்கள் வெளியே வருவார்கள்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!