Published:Updated:

’மக்களை திருத்துவோம்!’ - பா.ஜ.க வேட்பாளர் நாகராஜன் சூளுரை #RKNagar 

அஸ்வினி.சி
’மக்களை திருத்துவோம்!’ - பா.ஜ.க வேட்பாளர் நாகராஜன் சூளுரை #RKNagar 
’மக்களை திருத்துவோம்!’ - பா.ஜ.க வேட்பாளர் நாகராஜன் சூளுரை #RKNagar 

’இது தேர்தலே கிடையாது’  என்று பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

’மக்களை திருத்துவோம்!’ - பா.ஜ.க வேட்பாளர் நாகராஜன் சூளுரை #RKNagar 


 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் பிரதான கட்சிகளையும் அதிர்ச்சியும் ஆழ்த்தியுள்ளது. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதனிடையே நோட்டாவுக்கு 935 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பா.ஜ.கவுக்கு கிடைத்துள்ள வாக்குகளை விட அதிகம். 

இதுகுறித்து பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நாகராஜன் “தினகரன் தரப்பு மக்களுக்கு அதிக பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிட்டது. திமுக குறைவான பணம் கொடுத்ததால் குறைவான வாக்கு கிடைத்துள்ளது. இது தேர்தலே கிடையாது. ஆர்.கே.நகரை ஏலம் விட்டிருக்கிறார்கள். பா..ஜ.க தமிழக மக்களை வஞ்சிப்பது போல் தவறான செய்தி பரவுகிறது. இதனால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த நிலையை மாற்றுவோம்.  எங்கள் வாக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம். மக்களை திருத்துவோம். பா.ஜ.கவின் நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.