Published:Updated:

ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar

அஸ்வினி.சி
ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar
ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது.  சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.  

ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலேயே இழுப்பறி நீடித்தது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் கூட்டணிக்கு கிடைத்தது. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று இரு அணிகளும் நம்பியது. ’நாங்கள்தான் ஜெயிப்போம் என்று அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர். குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தையும் ஒருபுறம் நடத்திவந்தார். தேர்தலுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். 

இத்தனை களேபரங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885. அதில்  தினகரன் பெற்றது 89013 வாக்குகள். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48,306. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பெற்ற வாக்குகள் 24652.  40,707  வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளார் தினகரன்.

ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar

ஒரு குட்டி ரீவைண்ட்... 

கடந்த 2015 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரனை விட  1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனைப் படைத்தார். அப்போது ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள் 9,710. 

கடந்த 2016ம், ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா  97, 218 வாக்குகள் பெற்றார்.  தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனைவிட  39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 57,673 வாக்குகளே மட்டுமே பெற்றார். நடந்து முடிந்த 2017 ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதாவது இந்த வித்தியாசம் கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிகம்.