Published:Updated:

இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடிக் கும்பல்!

உரத்தின் பெயரில் விற்கப்பட்ட களிமண்
News
உரத்தின் பெயரில் விற்கப்பட்ட களிமண்

தூத்துக்குடியில் இயற்கை உரம் எனக்கூறி விவசாயிகளிடையே களிமண்ணை விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடிக் கும்பல்!

தூத்துக்குடியில் இயற்கை உரம் எனக்கூறி விவசாயிகளிடையே களிமண்ணை விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Published:Updated:
உரத்தின் பெயரில் விற்கப்பட்ட களிமண்
News
உரத்தின் பெயரில் விற்கப்பட்ட களிமண்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு காரணமாகக் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், இந்தாண்டு முன்கூட்டியே டி.ஏ.பி மூட்டைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விற்பனை செய்யப்பட்ட போலி உர மூட்டை
விற்பனை செய்யப்பட்ட போலி உர மூட்டை

இந்த நிலையில், கடந்த 10 நாள்களாகக் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், கடலூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வந்த சிலர் டி.ஏ.பி உரத்துக்கு இணையான `இயற்கை கடல்பாசி உரம்’ என்ற பெயரில் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,300 எனக் கூறி விற்பனை செய்துள்ளனர். விவசாயிகள் அந்த உர மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது அதில் வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப் பரிசோதனை செய்ததிலும் அது வெறும் களிமண்தான் எனத் தெரிய வந்துள்ளதாகவும் விவசாயிகள் சொல்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியும் 5 முதல் 20 உர மூட்டைகளை அவர்களிடமிருந்து வாங்கியுள்ளனர். இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``ரெண்டு மூணு வருஷமாவே உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுச்சு. இந்த வருஷமும் தட்டுப்பாடு ஆயிடக் கூடாதுன்னுதான் பல விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கி வைத்துள்ளனர். இந்தப் பகுதி விவசாயிகளோட உரத்தேவையைப் புரிஞ்சுகிட்டுதான் `இயற்கை உரம்’ எனச்சொல்லி வெறும் களிமண்ணை மூட்டைகள்ல நிரப்பி ஏமாற்றியிருக்காங்க. உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி இது போன்ற கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

களிமண்
களிமண்

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீனிடம் இதுகுறித்துப் பேசினோம், ``இது தொடர்பாக புகார் வந்துள்ளது. ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் அதிக அளவு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தினோம். தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அங்குள்ள வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்” என்றார்.