"எல்லோரும் தைரியமாக இருங்கள்" - சசிகலா பரபரப்பு பேட்டி!

சசிகலா

கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த வந்த சசிகலாவுக்கு பூ தூவி வரவேற்றார்கள் அவரது ஆதரவாளர்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "நீங்கள் எல்லோரும் தைரியமாகவும் கட்டுக்கோப்புடனும் இருக்க வேண்டும். அனைவரும் சிங்கம் போல இருக்க வேண்டும். என் இதயத்தில் இருந்து அதிமுகவைப் பிரிக்க முடியாது. நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவினர் பயணத்தைத் தொடர வேண்டும். நான் எங்கு இருந்தாலும் கட்சிப் பணிகளையும், உங்களையும் பற்றி கேட்பேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். பேரறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார். அந்த இதயம் எனக்கு இருக்கிறது" என்றார். நாளை காலை பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரண் அடைவார் எனவும் சொல்லப்படுகிறது.

படம் - சொ.பாலசுப்பிரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!