போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி? | In Sasi 4 o'clock in the morning from home get ready for out?

வெளியிடப்பட்ட நேரம்: 01:03 (15/02/2017)

கடைசி தொடர்பு:15:34 (15/02/2017)

போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி?

சசிகலா பயணம்

கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார், சசி.  அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை  4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க