'கேட்ட எதுவுமே கிடைக்கல'சிறையில் சோகத்தில் சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், "சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும்  ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி,உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்," எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கேட்ட அனைத்தையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். கடைசியாக சசிகலா தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், தனியாக மருத்துவரை அமர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாய கோரிக்கையை வைக்க, அதை  நிராகரித்த நீதிபதி, வீட்டிலிருந்து எடுத்து வந்த மருந்துகளை மட்டும் சிறைக்குள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். இதனை சற்றும் எதிர்பாராத சசிகலா சோகமாகவே காணப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!