வெளியிடப்பட்ட நேரம்: 01:58 (18/02/2017)

கடைசி தொடர்பு:12:44 (18/02/2017)

தமிழக சிறைக்கு மாற சசிகலா திட்டம்?

சொத்துக்குவிப்பு வழக்கில்  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலா, சென்னைச் சிறைக்கு மாற முயல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இந்த மாறுதல் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்குப் பின்னால், தமிழக சிறையில் இருந்தால்தான் தமிழக அரசியலைக் கட்டுப்படுத்த முடியும். கர்நாடக சிறையில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது கடினமான செயல். கர்நாடக நீதிமன்றத்தில் தனக்கு சலுகைகளுக்காகப் போராடவேண்டியிருக்கும் என்பது உள்ளிட்ட பல காரணங்கள்  இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க