மானாவாரியில் மகத்தான லாபம் பார்க்கலாம் வாங்க…! | How to achieve success with Rainfed agriculture in Tamilnadu - Five Farmers share their success tips

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (25/01/2019)

கடைசி தொடர்பு:14:43 (25/01/2019)

மானாவாரியில் மகத்தான லாபம் பார்க்கலாம் வாங்க…!

மானாவாரியில் லாபம் அள்ளிய ஐந்து விவசாயிகளின் சக்சஸ் சீக்ரெட்களை இங்கே படிக்கலாம்!

மானாவாரியில் மகத்தான லாபம் பார்க்கலாம் வாங்க…!

மானாவாரியில் நல்ல மகசூல் எடுப்பதற்கு இயற்கையும் கை கொடுக்க வேண்டும் என்றாலும், நாம் சரியான திட்டமிடலுடன் நிலத்தில் இறங்கினால், கூடுதலான மகசூல் நிச்சயம்!
இப்படி கச்சிதமான பிளானிங்குடன் களத்தில் இறங்கி, மானாவாரியில் லாபம் அள்ளிய ஐந்து விவசாயிகளின் சக்சஸ் சீக்ரெட்கள் இங்கே!


 


முதலில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சாத்தாவு. குடற்புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட அதலைக்காயை மானாவாரி நிலத்தில் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார். அதலைக்காயை வைத்து அரை ஏக்கர் நிலத்தில் இவர் அற்புதமான லாபம் பார்க்கிறார். இதில் இவருக்கு செலவே இல்லை என்பதுதான் செம்ம!
தலைக்காய்ச் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சாத்தாவு கூறிய தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்!
 

 
ரண்டாவதாக  ‘ஆடிட்டர்’ அருளானந்தம். சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தில் குதிரைவாலியை பயிரிட்டு வருகிறார். கட்டாந்தரையாகக் கிடந்த அந்த நிலத்தின் மண்ணை வளப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். பின்னர், குதிரைவாலியைப் பயிரிட்டவருக்கு இப்போது 10 ஏக்கரிலேயே 3,540 கிலோ அளவுக்கு மகசூல் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் 75,000 ரூபாய்க்குமேல் லாபம் கிடைக்கும் என்கிறார். இந்த விஷயத்தில் பணத்தைத் தாண்டிய இன்னொரு விஷயமும் இவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள்!
 
 


மூன்றாவதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கருப்பசாமி. இளைய தலைமுறையினர் அதிகம் பார்த்திருக்காத காடைக்கண்ணியை மானாவாரியாக பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார். ``இது குறுகிய காலச் சிறுதானியப் பயிர். இதுக்கு ஒரு மழை கிடைச்சாலே போதுமானது. கடுமையான வறட்சியிலகூட, கணிசமான மகசூல் கிடைச்சுடும். ஒரு ஏக்கர் நிலத்தில் 600 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தானியமா விற்பனை செய்தால் ஒரு கிலோ 30 ரூபாய் வரை விற்கும். இதையே அரிசியாக்கி வித்தா ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விக்க முடியும்” என்கிறார் கருப்பசாமி நிறைவாக!
 
காடைக்கண்ணியைச் சாகுபடி செய்யும் விதம் குறித்துக் கருப்பசாமி சொல்லும் நுணுக்கமான தகவல்களை இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்!

 


 
 

நான்காவதாக  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எத்திராஜ். இறவைப்பாசனத்தோடு புன்செய் நிலங்களில் பருவம் தவறாமல் மானாவாரி சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகளில் இவரும் ஒருவர். உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள வி.வல்லக்குண்டாபுரம் கிராமத்தில்தான் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். 11 ஏக்கர் நிலத்தில் பனிக்கடலை (கொண்டைக்கடலை), நாட்டுக்கொத்தமல்லி ஆகியவற்றை மானாவாரியாக சாகுபடி செய்து வருகிறார். 

“பெரும்பாலும் கடைகள்ல கிடைக்கிற மல்லித்தழையெல்லாம் வீரிய ரகம்தான்.அதுலயெல்லாம் இந்த நாட்டு ரக அளவுக்கு வாசனை இருக்காது. இந்த இலையைக் கிள்ளிப்போட்டு ரசம் வெச்சா தெருவே மணக்கும். முன்னெல்லாம், விசேஷ வீடுகள்ல... கருப்பட்டி, கொத்தமல்லி போட்டுக் காய்ச்சுன தண்ணீரைத்தான் சுடச்சுட கொடுப்பாங்க. அதெல்லாம் இப்போ மாறிப்போச்சு” என்கிறார் எத்திராஜ். பனிக்கடலை, நாட்டுக்கொத்தமல்லி இரண்டையும் பயிரிட்டு இவர் 1,80,000 ரூபாய் லாபமாக பார்த்திருக்கிறார். இவருடைய வெற்றி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள்!



 
ந்தாவதாக சிவகாசியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி. சிவகாசியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, புலிப்பாறைப்பட்டி எனும் கிராமம். இங்குதான் அழகர்சாமியின் மானாவாரி நிலம் இருக்கிறது.
 
``மானாவாரி விவசாயத்துல குதிரைவாலி, கம்பு, தினை, சோளம், கேழ்வரகு, எள், பாசிப்பயறு, கொள்ளு, உளுந்து, துவரைனு சாகுபடி செய்றோம். மாட்டுக் குப்பையைத்தான் அடியுரமாகக் கொடுப்போம். சிறுதானியங்கள்ல பெருசா பூச்சித்தாக்குதல் இருக்காது. அதனால, பயிரைப் பராமரிக்கிறதுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. அதனால, அதிகளவுல சிறு தானியங்களைத் தான் சாகுபடி செய்திட்டிருக்கேன். சிறு தானியங்கள்லயும் அதிகளவு பாடில்லாத பயிர் தினை. அதனால, வருஷம் தவறாம அதைச் சாகுபடி செய்திடுவேன்” என்கிறார். 
 
``எந்த மெனக்கடலும் இல்லாம கிடைச்ச வருமானம் தினைப்பாயசம் போலவே இனிப்பாத்தான் இருக்கு” என்றபடி இவர் சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்டை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள். இங்கு க்ளிக் செய்யுங்கள்!