முதல்வர் வந்து சந்தித்தால் போராட்டம் வாபஸ்: அய்யாக்கண்ணு அறிவிப்பு!

தமிழக முதல்வர் நேரடியாக வந்து சந்தித்தால் விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படும் என டெல்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

ayyakannu

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து 40-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக விவசாயிகள். இந்நிலையில் தமிழக முதல்வர் வந்து சந்தித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து சந்தித்து உறுதி அளித்தால் போராட்டத்தைக் கைவிடுவோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி வரும் தமிழக முதல்வர் எங்களை சந்திப்பார் என நம்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

டெல்லிக்கு வரவிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல விவசாயிகளின் தேசியக் கடன்களை தமிழக அரசும் ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!