கடந்த 03-04-2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘ஒரே ஆண்டில் நான்கு மடங்கு லாபம்... இது திருச்சி தில்லாலங்கடி!’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில், ‘பி.ஏ.சி.எல், எம்.ஆர்.டி.டி என மோசடி நிறுவனங்களின் பட்டியலில் திருச்சியில் இயங்கிவரும் செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனமும் சேர்ந்தால் ஆச்சர்யமில்லை’ என்று எச்சரித்திருந்தோம். அது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.

திருச்சியில் செயல்பட்டுவந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம், இரண்டு மடங்கு பணம் தருவதாகச் சொல்லி, வாடிக்கையாளர்களிடம் 35,500 ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்தது. முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் வீதம் வழங்குவதாகக் கூறி இந்தத் தொகையை வசூல் செய்திருக்கிறது இந்நிறுவனம். ஆனால், சொன்னபடி தொகையை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. மேலும் அலுவலகத்தையும் இடம் மாற்றுவதாகக் கூறி வந்தது செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம். இந்த நிலையில்தான், கடந்த ஜூன் 29-ம் தேதி, இந்த நிறுவனத்துக்குள் நுழைந்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், சோதனை நடத்தி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்ததுடன், அலுவலகத்துக்கும் சீல் வைத்தனர்.

இதுதெரியாமல், வாடிக்கையாளர்கள் செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் முகவரி மாற்றம் செய்யப்பட்டதாக நினைத்து, சீல் செய்யப்பட்ட அலுவலகம் முன்பு கூடினர். அவர்களிடம் பேசினோம். “இரு மடங்கு பணம் கிடைக்கும் என்று அவர்கள் சொன்னதை நம்பி பணம் கட்டினோம். தெரிந்தவர்களையும் இங்கு சேர்த்துவிட்டோம். சில மாதங்கள் அவர்கள் சொன்னபடி பணம் தந்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாகப் பணம் கிடைக்கவில்லை. தொடர்ந்து கேட்டபோது அடுத்த வாரம் தருவதாகக் கூறினார்கள். இப்போது வந்து பார்த்தால், அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது. புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்த அலுவலக முகவரியைச் சொல்லவில்லை. நான் 50 லட்சம் ரூபாய் கட்டியிருந்தேன். 32 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டேன். மீதிப் பணத்தை எப்படி வாங்குவது என்று தெரியவில்லை” என்று புலம்பினார் ஒருவர்.

இதற்கிடையே செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தின் சி.இ.ஓ முத்துராமலிங்கம், “சில வாரங்களாக வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்குவதில் சிக்கல் இருந்தது உண்மைதான். அனைத்தையும் சரிசெய்ய முயற்சி செய்துவந்தோம். ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்தும் சரியாகிவிடும் என்று முதலீட்டாளர்களுக்குச் சொல்லிவிட்டோம். ஆனால், அதற்குள் போலீஸார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அலுவலகத்துக்குச் சீல் வைத்துள்ளனர். அனைத்தையும் சட்டப்படி சந்திப்போம்’’ என்று பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திருச்சி குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசனிடம் கேட்டோம். “அந்த நிறுவனம் மீது மோசடி புகார் வந்ததால் நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வெளியிட்ட ஆடியோவை நாங்களும் கேட்டோம். நாங்களும் சட்டப்படிதான் செயல்படுகிறோம்” என்றார்.