தங்கம் விலை மீண்டும் உயரும் என்கிற பேச்சு கிளம்பி யிருக்கிறது. தற்போது ரூ.24,952-ஆக இருக்கும் 24 காரட் தங்கம், வரும் தீபாவளிக்குள் ரூ.34,000-த்தை எட்டக்கூடும் என்கிற செய்தி, எல்லோரையும் பரபரப்புள்ளாக்கி இருக்கிறது. இனிவரும் நாள்களில் தங்கம் விலை உயருமா, அப்படி உயரும் எனில், எந்த அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்கிற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது.

நம்மில் பலருக்கும் தங்கத்தை வாங்கிச் சேர்ப்பதில் அலாதி ஆர்வம் இருந்தாலும், சமீப காலமாக பலரும் வாங்க விரும்பாத ஒரு பொருளாகவே தங்கம் மாறியிருக்கிறது. கடந்த ஐந்து வருட காலத்தில் சர்வதேச சந்தையில் அதன் விலை பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால்தான், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்ததே தவிர, உள்ளபடி பார்த்தால் அதன் மதிப்பு உயர்ந்துவிடவில்லை. எனவே, வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்துவரும் தங்கத்தின் அளவு கடந்த சில ஆண்டு களாகக் குறைந்துகொண்டு வருகிறது.

கடந்த 2010-ல் நாம் 1000 டன் தங்கத்தை இறக்குமதி செய்தோம். பிற்பாடு இது குறையத் தொடங்கி, 2016-ல் 666 டன் என்கிற அளவுக்குக் குறைந்தது. இந்த ஆண்டில் 800 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற ஆண்டில் தனிநபர் நுகர்வு 2010-ம் ஆண்டிற்குப்பிறகு 0.6 கிராமாகக் குறைந்துள்ளது. இதனால், தங்க நகை வாங்க நினைப்பவர்கள் முதலீட்டு நோக்கத்தில் இல்லாமல், தேவைக்கு வாங்கி வருகிறார்கள்.

என்றாலும், சமீப காலமாக சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகள் தங்கத்தின் விலையை இனி மேலே கொண்டு செல்லும் வாய்ப்பினை உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. தங்கத்தின் விலை இனி உயரும் என்று சொல்வதற்கு அடிப் படையாக சர்வதேச அளவில் பல சாதகமான விஷயங்கள் நடந்துள்ளன.

சாதகமான செய்திகள்

தங்கத்துக்கான உலகத் தேவையானது வருடாந்திர அடிப் படையில் 9% என்ற அளவில் உயர்ந்து வருகிறது. சமீப காலமாக தங்கச்சுரங்களின் மீதான முதலீடுகள் குறைந்தும், தொழிலாளர்களின் ஊதியம் அதிகரித்து வருகிறது. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப்போர் காரணமாக ஒரு விதமான பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதும் தங்கத்துக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த காலத்தில் அமெரிக்க ஃபெடரலின் வட்டி விகிதத்தை உயர்த்தும் சுழற்்சி எப்போ தெல்லாம் முடிவடைகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்வதைப் பார்க்க முடிகிறது. (பார்க்க, மேலே உள்ள க்ராப்) 2015-ம் ஆண்டு துவங்கி இதுவரை ஏழு முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அமெரிக்க பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள், ஃபெடரல் ரிசர்வ் எதிர்பார்க்கும் வகையில் இருப்பதால், தங்கத்தின் விலை இனி உயரலாம்.

நம் நாட்டில் குறிப்பிட்ட காலத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால், வரும் மாதங்களில் கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரித்து, தங்கத்துக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்கிற எதிர்பார்க்கலாம்.

தங்கத்தின் விலை உயரும் என்பதற்கு இப்படிச் சில காரணங்கள் இருந்தாலும், பாதகமான பல செய்திகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

எதிர்மறையான செய்திகள்

அமெரிக்க ஃபெடரல் எடுத்து வருகிற வட்டி விகித உயர்வு நடவடிக்கைகள் டாலரின் மதிப்பு உயர்வதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்த வருடத்தில் மேலும் இரண்டு முறை வட்டியை உயர்த்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்வதைத் தடுக்கலாம்.

இந்தியாவில் உள்நாட்டுத் தேவை குறைந்து வருகிறது. அதாவது, தனிநபர் பயன்பாடு குறைந்து காணப்படுகிறது. உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து காணப்படுகிறது.

விலை அதிகரிக்குமா?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்பட்சத்தில், தங்கத்தின் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வருட இறுதிக்குள் 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ3,300 - ரூ.3400 வரை செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, தங்கம் விலையைத் தினமும் கவனிப்பது நல்லது!