தங்கம் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “செப்டம்பர் கான்ட்ராக்ட்டில் 30,000 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாகவும், கீழே 29,700 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது.’’

தங்கம், ஒரு தொடர் சரிவில் இருந்து வருகிறது. சென்ற வாரம் திங்களன்று 29,870-ல் ஆரம்பித்து, 29,857-ல் பெரிய மாற்றம் இல்லாமல் முடிந்தது. செவ்வாயன்று நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 29,700-ஐ உடைத்து 29,655 வரை இறங்கினாலும், பின்முடியும்போது 29,789-ல் முடிந்தது. ஆனால், காளைகளின் இந்த முயற்சி ஒரு தற்காலிக வெற்றியே. அடுத்து, புதன் அன்று 29,770 என்ற புள்ளியில் துவங்கினாலும், கரடிகள் விலையைப் பலமாக இறக்கி, 29,585 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொடவைத்தன.

இனி என்ன நடக்கலாம்?

தொடர்ந்து இறங்கிக் கொண்டிருக்கும் தங்கம் 29,400 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து, ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்யலாம். முன்பு ஆதரவாக இருந்த 29,700 என்ற எல்லை இப்போது தடைநிலையாக மாறலாம்.

வெள்ளி (மினி)

வெள்ளியானது தங்கத்தைப் போன்றே அதே திசையில் நகர்ந்தாலும், அதன் நகரும் விதமும், வீச்சும் சற்று காளைகளின் பக்கம் சாய்ந்திருந்தது. சென்ற வாரம் திங்களன்று 38,270 என்ற புள்ளியில் துவங்கிய வெள்ளி, முடியும்போது 38,375 என்ற புள்ளியில் முடிந்தது. அடுத்த நாள், கரடிகள் வெள்ளியின் விலையை 38,021 என்ற புள்ளிவரை இறங்கினாலும், காளைகள் 38,359 வரை உயர்த்தி முடித்தனர். ஆனால், புதனன்று கரடிகள், ஒட்டுமொத்த பலத்தையும் பிரயோகித்து வெள்ளியை 37,920,வரை இறக்கி, தங்கள் பலத்தை நிரூபித்தனர். பின்பு, வெள்ளி விலை மெள்ள மெள்ளச் சரியத் துவங்கியது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி 37,700 என்ற புள்ளியை ஆதரவாகக்கொண்டு, ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சிக்கலாம். மேலே 38,300 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘கச்சா எண்ணெய் நெருக்கமான பக்கவாட்டு நகர்வில் உள்ளது. கீழே இன்னும் அதே 4,650 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 4,820 தடைநிலை ஆகும்.’’

கச்சா எண்ணெய், பெரிய இறக்கத்திற்குப்பின் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. சென்ற வாரம் ஏற முயற்சி செய்தபோது நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4,820-ஐ சற்றே தாண்டி 4,840 வரை சென்று, கீழே திரும்பிவிட்டது. அடுத்து செவ்வாயன்று சற்றே இறங்கினாலும், புதனன்று ஆதரவான 4,650-ஐ உடைத்து இறங்கி 4,611-ஐ தொட்டது. ஆனால், வியாழனன்று குறைந்தபட்சமாக 4,593-ஐ தொட்டாலும், வீறுகொண்டு எழுந்து 4,761 என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? இன்னும் சற்றே இறங்கிய நிலையிலும், அடுத்தகட்ட பக்கவாட்டு நகர்வுக்கு மாறலாம். கீழே ஆதரவு 4,590, மேலே உடனடித் தடைநிலை 4,800 ஆகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளதாகக் கடந்த இதழில் கூறியிருந்தோம். அதுவே இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் தற்போது 1,600-ஐ தடைநிலையாகவும், கீழே 1,520-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த 1,600 என்ற தடைநிலையைத் தாண்ட முடியாமலேயே வாரம் முடிந்துவிட்டது. புதனன்று ஏற்றத்திற்கான முயற்சி நடந்து, உச்சமாக 1,584-ஐ தொட்டாலும், தடைநிலையான 1,600-ஐ தாண்டமுடியவில்லை. அதேபோல, ஆதரவாகத் தரப்பட்ட 1,520-ஐ அவ்வப்போது சோதித்துப் பார்த்தாலும், மீண்டும் 1,520-க்கு மேல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

மென்தா ஆயில் இன்னும் பக்கவாட்டில் இருப்பதால், ஆதரவு 1,490 என்ற எல்லையிலும், மேலே தடைநிலை 1,590 என்ற எல்லையிலும் உள்ளது.

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “காட்டன், இறங்குமுகமாக உள்ளது. இது ஒரு புல்பேக் ரேலியாக மாறலாம். மேலே 23,700 தடையாகவும், கீழே 23,300 ஆதரவு நிலையாகவும் இருக்கலாம்.”

காட்டன், இதுவரை பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தாலும், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 23,700-ஐ பலமாக உடைத்து ஏற ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்களன்று தடையை உடைத்து ஏறி, 23990 என்ற உச்சத்தைத் தொட்டது. செவ்வாயன்று தொடர்ந்து ஏறி, 24,160 என்ற அடுத்தகட்ட உச்சத்தைத் தொட்டது. புதனன்று ஒரு கேப்டவுனில் துவங்கினாலும், சந்தை முடியும்போது 24,200 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறிவிட்டது.

இனி என்ன செய்யலாம்?

பக்கவாட்டில் இருக்கும் காட்டன், 23,870 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 24,160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

சென்னா

சென்னா, என்.சி.டி.இ.எக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்னது... “ரீட்ரேஸ்மென்டில் உள்ளது. மேலே 4,250 என்பது உடனடித் தடைநிலை ஆகும். கீழே 4,000 என்ற எல்லை ஆதரவு ஆகும்.’’

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 4,000 என்பதைத் தக்கவைத்துக்கொண்டு மெள்ளமெள்ள ஏற ஆரம்பித்தது. அப்படி ஏற ஆரம்பித்தாலும், சென்ற வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாள்களும் தடைநிலையான 4,250-ஐ தாண்ட முடியவில்லை. ஆனால், வியாழனன்று 4,250 என்ற தடைக்கு அருகில் முடிந்தது. வெள்ளியன்று 4,280 என்று ஒரு கேப் அப்பில் துவங்கி மெள்ள மெள்ள இறங்கியது.

இனி என்ன செய்யலாம்?

சென்னா இன்னமும் பக்கவாட்டு நகர்வில்தான் உள்ளது. படிப்படியாக உயர்ந்த நிலையில், தடைநிலையாக 4,300 உள்ளது. கீழே ஆதரவு நிலை 4,160 ஆகும்.