தங்கம் (மினி)
தங்கத்தின் விலைப்போக்கு சென்ற வாரம் சொன்னது…
“தொடர்ந்து இறங்கிக்கொண்டு இருக்கும் தங்கம் 29400 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்யலாம். முன்பு ஆதரவாக இருந்த 29700 என்ற எல்லை இப்போது தடைநிலையாக மாறலாம்.’’

தங்கம், ஒட்டுமொத்தத்தில் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்துவருவதைப் பார்க்கிறோம். நடுநடுவே சிறிய ஏற்றங்கள் வந்துபோவதையும் பார்க்கிறோம். அந்த சிறு ஏற்றத்தை புல்பேக் என்கிறோம். அந்த ஏற்றத்திற்குப் பதிலாக சிலசமயம் பக்கவாட்டு நகர்வாகக்கூட இருக்கலாம். சென்ற வாரம் அப்படிப்பட்ட பக்கவாட்டு நகர்வதைதான் பார்த்தோம். சென்ற வாரம் முழுவதுமே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 29400-ஐ உடைத்துக் கீழே இறங்கவும் இல்லை; மேலே கொடுத்திருந்த தடைநிலையான 29700-ஐ உடைத்து ஏறவும் இல்லை. வாசகர்கள் இந்த எல்லைக்குள்ளாகவே வியாபாரம் செய்தும் லாபம் பார்த்திருக்க முடியும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி என்ன நடக்கலாம்? தங்கம் இன்னும் 29400-ஐ ஆதரவாகவும், மேலே 29700-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது. எந்தப் பக்கம் உடைத்தாலும் அது ஒரு பலமான நகர்வாக இருக்கலாம்.
வெள்ளி (மினி)
வெள்ளியின் விலைப் போக்கு குறித்து சென்ற வாரம் நாம் சொன்னது...
“வெள்ளி 37700 என்ற புள்ளியை ஆதரவாகக்கொண்டு, ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்யலாம். மேலே 38300 என்பது உடனடித் தடைநிலை யாக உள்ளது.’’
வெள்ளியும், தங்கத்தைப்போலவே, சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த ஆதரவான 37700-ஐ உடைத்து இறங்கவும் இல்லை, மேலே தந்திருந்த தடைநிலையான 38300-ஐ தாண்டவும் இல்லை. தொடர்ந்து இந்த 500 புள்ளிகளுக்கிடையே கீழும் மேலும் நகர்ந்து வியாபார வாய்ப்பைத் தந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? வெள்ளி இன்னும் அதே 37700-ஐ ஆதரவாகவும், மேலே 38300-ஐ தடைநிலையாகவும் கொண்டு இந்த நிலையில், ஒரு பலமான நகர்வுக்குத் தயாராகிறது. மேல் எல்லை உடைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் (மினி)
கச்சா எண்ணெய் பற்றி சென்ற வாரம் நாம் சொன்னது…
‘‘இன்னும் சற்றே இறங்கிய நிலையிலும், அடுத்தகட்ட பக்கவாட்டு நகர்வுக்கு மாறலாம். கீழே ஆதரவு 4590, மேலே உடனடித் தடைநிலை 4800 ஆகும்.’’

கச்சா எண்ணெய், கடந்த மூன்று வாரங்களாக ஒரு குறுகிய எல்லைக்குள்ளாகவே சுழன்று வந்தது. சென்ற வாரம்கூட திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும், மேல் எல்லையான 4800-ஐ தொட்டுத் தொட்டு இறங்கியது. ஆனால், புதனன்று 4765 என்ற எல்லையில் இருந்து இறக்கம் ஆரம்பித்து, கீழே ஆதரவு எல்லையான 4590-ஐ உடைத்து, 4553 வரை சென்றது. அதன்பின் 4550 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துள்ளது.
இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் 4550-ஐ ஆதரவாக எடுத்த நிலையில், மெள்ள ஏறலாம். உடனடித் தடைநிலையான 4670-ஐ தொடலாம். ஆனாலும், 4800 என்பது இன்னமும் முக்கியத் தடைநிலையாகவே உள்ளது.
மென்தா ஆயில்
மென்தா ஆயில் தொடர் பக்கவாட்டு நகர்வுக்கு பிறகு, தற்போது மேல்நோக்கி ஏற ஆரம்பித்துள்ளது.
சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் இன்னும் பக்கவாட்டில் இருப்பதால், ஆதரவு 1490 என்ற எல்லையிலும், மேலே தடைநிலை 1590 என்ற எல்லையிலும் உள்ளது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், ஆரம்பத்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று தொடர் பக்கவாட்டு நகர்வில்தான் இருந்தது. ஆனால், புதனன்று சற்றே ஏற ஆரம்பித்து, நாம் தந்திருந்த தடைநிலையான 1590-ஐ வலிமையாக உடைத்தது. வியாழனன்று அந்த ஏற்றம் தொடர்ந்து உச்சமாக 1644-ஐ தொட்டுக் காளைகளின் பலத்தைக் காட்டியது. வெள்ளியன்று, ஒரு சிறிய கேப் அப்புடன் தொடங்கி, பக்கவாட்டில் நகர்ந்து, உச்சமாக 1675-ஐ தொட்டது. அதன்பின் தொடர்ந்து ஏற முடியாமல் தடுமாறி, கொஞ்சம் இறங்கி 1633-ல் முடிந்துள்ளது.
இனி என்ன செய்யலாம்? தற்போதைய தடைநிலை 1675 ஆகும். இதைத் தாண்ட முடியவில்லையென்றால் இறக்கம் தொடரலாம். கீழே ஆதரவு முந்தைய தடை நிலையான 1590 ஆகும்.

காட்டன்
சென்ற வாரம் சொன்னது... “பக்கவாட்டில் இருக்கும் காட்டன், 23870 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 24160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’

காட்டன், சென்ற வார நகர்வு என்பது சற்றே சிக்கலான நகர்வு ஆகும். ஆனாலும், நாம் கொடுத்த எல்லைகளை உபயோகப்படுத்தி தினசரி வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லவாய்ப்பே. திங்களன்று ஆதரவு எல்லையான 23870-ஐ உடைத்து 23750-ஐ தொட்டது. செவ்வாயன்று, ஆதரவான 23870-ஐ கீழே இருந்து உடைத்து ஏறி 23950 வரை சென்றது. (இதை ஒரு வலுவான வாங்குதல் என்று சொல்வோம்.) புதனன்று மேலும் ஏறி, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 24160-க்கு அருகில் வந்து தடுக்கப்பட்டு இறங்கி 23920-ஐ தொட்டது. மீண்டும் வெள்ளியன்று ஏறி, தடைநிலையான 24160-ஐ உடைத்து, 24280-ஐ தொட்டு இறங்கியுள்ளது.
இனி என்ன செய்யலாம்? காட்டன் தற்போது 24010 என்பதை ஆதரவாகவும், மேலே 24300-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.
சென்னா
சென்னா, என்.சி.டி.எக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலை யான 4160-ஐ திங்களன்று உடைத்து வலிமையாக இறங்கி 4082-ஐ தொட்டது.

செவ்வா யன்று மீண்டும் ஏறி 4160-ல் தடுக்கப்பட்டது. புதன் மற்றும் வியாழனன்று 4160 என்ற எல்லையை உடைக்க சிரமப்பட்டது. வெள்ளியன்று 4160-ஐ (இதை வலிமையான வாங்குதல் என்போம்) உடைத்து ஏறி 4257 என்ற உச்சத்தைத் தொட்டது.
இனி என்ன செய்யலாம்? சென்னா தற்போது மீண்டும் 4300-ஐ தடைநிலையாகவும், கீழே 4160-ஐ ஆதரவு நிலை யாகவும் கொண்டுள்ளது.