Published:Updated:

ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சென்னை பெங்களூராக மாறியிருந்தது. லேசான மழையில் சென்னை நனைந்து, குளுகுளுவென் இருந்தது. வழக்கம்போல மாலை வேளையில் நம் அலுவலகத்துக்கு வந்தார் ஷேர்லக். அவருக்கு ஏலக்காய் டீ போட்டு ஃப்ளாஸ்க் கில் தயாராக  வைத்திருந்தோம். டீயைப் பருகியபடி நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை அடிப்படை யாகக் கொண்டு சில லார்ஜ்கேப் பங்குகள் குறித்து சி.எல்.எஸ்.ஏ முதலீட்டு நிறுவனம் சாதகமாகக் கூறியுள்ளதைக் கவனித்தீர்களா? 

‘‘ஆமாம், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முன்னணிப் பங்குச் சந்தை தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ   சில கணிப்புகளை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டுபோன்று இந்த
முறை பா.ஜனதாவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அது கூறியுள்ளது.

அதேசமயம். மோடி தலைமையில் பா.ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால், வாங்கும் விலையில் வீடுகள் கட்டப்படுவது அதிகரிக்கும். விவசாயிகளின் நலன் குறித்த திட்டங்கள் நன்கு செயல்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கட்டுமானத் துறை வளர்ச்சி காணும் என சி.எல்.எஸ்.ஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, டாபர் இந்தியா, கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ்,  ஹெச்,டி,எஃப்,சி, இண்டஸ்இண்ட் பேங்க், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி சுஸூகி மற்றும் சன் பார்மா ஆகிய ஒன்பது பங்குகள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.’’

ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

கிரெடிட் ஆக்ஸஸ் நிறுவனத்தின் பங்கு விலை, பட்டியலான நாளன்றே குறைந்துள்ளதே?

‘‘மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான கிரெடிட் ஆக்ஸஸ் கிராமீன் நிறுவனம் ஆகஸ்ட் 8 முதல் 10-ம் தேதி வரை ஐ.பி.ஓ பங்குகளை வெளியிட்டது. இதன் வெளியீட்டு விலை ரூ.418 முதல் 422 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமையன்று பட்டியலிடப்பட்டபோது, வெளியீட்டு விலையைவிட 8 சதவிகிதத்துக்கும் குறைவாக 385 ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பங்கு விலை லேசாக உயர்ந்து, அன்றைய தினம் வர்த்தக முடிவின்போது வெளியீட்டு விலையிலிருந்து 0.28% குறைவாக ரூ.420.80-ல் நிலைகொண்டது.

வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகள் குறித்து மார்கன் ஸ்டேன்லி கவலை வெளியிட்டுள்ளதை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

‘‘வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு வரும் நாள்கள் கடினமானதாக இருக்கும் என்று பிரபல சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எம்.எஸ்.சி.ஐ-யின் இ.எம் இண்டெக்ஸ் கரடியின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ள மார்கன் ஸ்டேன்லி, அதன் இலக்கு புள்ளிகளை இன்னும் 8% அளவுக்குக்  குறைத்துள்ளது.

அதேசமயம், இந்தியச் சந்தையில் அதன் பாதிப்பு இருக்காது என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.  ‘ஆசியாவிலுள்ள அதன் சக நாடு களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வர்த்தகச் சுழற்சி மாறுபட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக, நுகர்வுப் பொருள்கள் மற்றும் மூலதனப் பொருள் களின் பங்குகள் சிறப்பாகச் செயல்படுவ தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, நாம் பெரிய அளவில் அது குறித்துக் கவலைகொள்ள வேண்டாம்.’’

ஐ.டி பங்குகள் குறித்து அனலிஸ்ட்கள் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளனரே?

‘‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்னமும் அதன் அதிகபட்ச சரிவுக்கு அருகிலேயே உள்ளதால், ஐ.டி துறையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ரூபாய் மதிப்புச் சரிவு, ஐ.டி நிறுவனங்கள் போன்ற ஏற்றுமதியாளர் களுக்கு லாபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஐ.டி பங்குகளில் இந்த ஆண்டில் இதுவரை மூன்றில் ஒரு பங்கு லாபம் கிடைத்துள்ளபோதிலும், இந்த ஆண்டின் மீதமுள்ள நாள்களில் இந்தத் துறை பங்குகள் இன்னும் கூடுதல் லாபம் சம்பாதிக்கக்கூடும்  என அனலிஸ்ட்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆண்டான 2019-ஐ நாம் நெருங்கிக் கொண்டிருப்பதால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  72 முதல் 75 வரை சரியக்கூடும் என்றும், இதனால் பார்மா மற்றும் ஐ.டி துறை பங்குகள் சந்தையில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகவும் அனலிஸ்ட்கள் கூறுகின்றனர். குறிப்பாக, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் மற்றும் விப்ரோ போன்ற பங்குகள் நீண்டகால அடிப்படையில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.’’

ரூபாய் மதிப்பு குறைவதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சொல்லியிருக்கிறாரே!

‘‘ஆசியப் பிராந்தியத்திலேயே மிக மோசமாகச் செயல்படும் கரன்சியாக ரூபாய் இருக்கிறது. ஏறக்குறைய 9% அளவுக்குக் குறைந்துள்ள போதிலும், அது பற்றி நிறையக் கவலைப்படாமல், பொருளாதாரத்தின் அடிப்படையை இன்னும் உறுதிமிக்கதாக ஆக்கிக்கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, ரூபாய் மதிப்பினை நிலையான அளவில் வைத்திருந்தவர். அந்த வகையில் அவர் இப்போது சொல்லியிருக்கும் கருத்து சரியாக இருக்கும் என்று நம்புவோமாக!’’

ரூ.8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புக்கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்திருப்பது பற்றி..?

‘‘அதிக சந்தை மதிப்புக்கொண்ட நிறுவனத்துக் கான போட்டியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், டி.சி.எஸ் நிறுவனமும் மாறி மாறி முன்னணியில் இருந்துவந்த நிலையில், தற்போது ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்புக்கொண்ட இந்தியாவின் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 1.47% உயர்ந்து 1,265 ஆகக் காணப்பட்டது. இது, இதுவரை இல்லாத உச்ச மாகும். இதன்மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8.1 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டு, இதுவரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 37.3% உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கியபின் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.’’

ஜெட் ஏர்வேஸ் பங்கு மதிப்பு சரிந்துள்ளதே?

‘‘இந்தியாவின் மிகப்பெரிய முழு விமானச் சேவை அளிக்கும் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதன் செலவினங்களைக் குறைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக புதன்கிழமையன்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், வியாழக் கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்கு ஒன்றின் விலை 3% சரிந்து 265.15 ரூபாயாகக் காணப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, இந்த ஆண்டு இதுவரை 64.5% வரை சரிந்துள்ளதை இந்தப் பங்கினை வைத்திருப் பவர்கள் கவனிக்கத் தவறக்கூடாது.’’ 

டாக்டர் ரெட்டீஸ் நிறுவனப் பங்கு விலை உயர என்ன காரணம்?

‘‘டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வியாழக்கிழமையன்று உயர்ந்து காணப்பட்டது. பங்கு ஒன்றின் விலை 4.5% உயர்ந்து 2,520 ரூபாயாக இருந்தது. ஏறக்குறையக் கடந்த ஒரு மாத காலத்தில் வர்த்தக நாளின் இடையே அன்றைய தினம்தான் இந்தப் பங்கு விலை இந்த அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. மேலும், ஜனவரி 25-ம் தேதிக்குப் பின்னர் இந்தப் பங்கின் விலை தற்போதுதான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று 0.67% அளவுக்கு விலை குறைந்து ரூ.2,448-க்கு வர்த்தகம் ஆனது.’’

நெஸ்லே இந்தியா, டாபர் இந்தியா நிறுவனப் பங்குகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதே?

‘‘நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை வியாழக் கிழமையன்று 6.2% உயர்ந்து காணப்பட்டது.   ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், நெஸ்லேவின் இலக்கு விலையை 11,600 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயித்துள்ளது. அதேபோல, டாபர் இந்தியா நிறுவனத்தின் இலக்கு விலையையும் 475 ரூபாயிலிருந்து 525 ரூபாயாக நிர்ணயித்துள்ளது டியூட்சே வங்கி. இந்த ஆண்டு இதுவரை நெஸ்லே இந்தியா, டாபர் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 38.3% மற்றும் 32.9% என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளன.’’

கடந்த ஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

‘‘டாபர் இந்தியா, ஆர்.பி.எல் பேங்க், லூபின், ஹாவெல்ஸ் இந்தியா, பஜாஜ் ஆட்டோ ஆகிய லார்ஜ்கேப் பங்குகள் வாங்கப்பட்ட பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. அதே போல, விற்கப்பட்ட லார்ஜ்கேப் பங்குகள் பட்டியலில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங், ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு ஆகியவை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன.

மிட்கேப் பங்குகள் பட்டியலில் ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ், இமாமி, கஜாரியா செராமிக்ஸ், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை முன்னணியில் உள்ளன. அதே போல, நால்கோ, அசோக் லேலாண்ட், அல்கெம் லேபாரெட்டரீஸ், ராம் டிரான்ஸ்போர்ட், என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ் ஆகிய மிட்கேப் பங்குகள் விற்கப்பட்ட பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன.

அதேபோல, ரைட்ஸ் லிமிடெட், அதானி என்டர்பிரைசஸ், ஆப்கோடெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஃபைன் ஆர்கானிக், அதானி பவர் ஆகிய ஸ்மால் கேப் பங்குகள் வாங்கப்பட்ட பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன’’ என்றவர்  ஒரு துண்டுச் சீட்டைத் தந்துவிட்டுப் போனார். அதில் இரண்டு பங்குகளின் பெயர் இருந்தன.

1. லூபின் லிமிடெட்

2. எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸ்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகளைத் திரும்ப வாங்கும் எல் & டி!

நம் நாட்டின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்டு டி நிறுவனத்தின் நிர்வாகக் குழு, முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.9,000 கோடி  மதிப்பிலான  பங்குகளைத்  திரும்ப வாங்குவதற்கு       (Buyback) ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை 1,500 ரூபாய் என்ற அடிப்படையில், ஆறு கோடி பங்குகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, அதன் மொத்தப் பங்குகளில் 4.29% ஆகும். இதுகுறித்த தகவல் வெளியான செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.1,343.75-ஆகக் காணப்பட்டது. இந்த நிலையில், எல் அண்டு டி-யைத் தொடர்ந்து மேலும் சில பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்களும், விரைவில் பங்குகளைத்  திரும்ப வாங்கும் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்ப்பதாக அனலிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism