கேரள மாநிலம் தற்போது மழை வெள்ளத்தால் பெரிய அழிவைச் சந்தித்துள்ளது. இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலரும் வீடுகளையும், தோட்டங்களையும், வணிக நிறுவனங்களை இழந்து தவிக்கிறார்கள். அந்த மாநிலத்தில் பெருமளவில் தொழில் நடத்திவந்த பெருநிறுவனங்கள் பலவும் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. அந்த நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த இயற்கைப்பேரிடரின் தாக்கம் பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. பல பங்குகளின் விலை சரிவைச் சந்தித்துள்ள அதே சூழலில், சில வகைப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றினைத் தயாரிக்கும் பங்கு விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கேரள வெள்ளம் காரணமாக எந்தெந்தப் பங்குகளைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

கட்டுமானத் துறைப் பங்கு நிறுவனங்கள்

இந்த வெள்ளத்தினால் பெருமளவு கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ள சூழலில் புதிய வீடுகள் கட்டுவது அத்தியாவசியத் தேவையாக உள்ளது. அரசாங்கமும் பொதுமக்களுக்கு வீடு கட்டித் தரும் பணியில் இறங்கவுள்ளது. எனவே, வீடு கட்டத் தேவையான ப்ளைவுட் போன்ற மரச்சாமான்கள், சிமென்ட், மேற்கூரை, பைப்புகள், எலெக்ட்ரிக்கல் பொருள்கள் போன்றவற்றின் விற்பனை அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான ராம்கோ, இந்தியா சிமென்ட் நிறுவனங்களைக் கவனிக்கலாம். வயர் தயாரிப்பு நிறுவனமான விகார்ட், மேற்கூரைத் தயாரிப்பு நிறுவனங்களான எவரெஸ்ட், விசாகா நிறுவனங்களைக் கவனிக்கலாம். இரும்பு விற்பனையில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தையும், எலெக்ட்ரிக்கல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹாவெல்ஸ், கிராம்டன் க்ரீவ்ஸ் பங்கு நிறுவனங்களையும் கவனிக்கலாம். மேலும் ஹெச்.ஐ.எல், செரா சானிட்டரிவேர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்புள்ளதால், இந்த நிறுவனப் பங்குகளையும் கவனிக்கலாம்.

தங்கம் தொடர்பான பங்கு நிறுவனங்கள்

மணப்புரம், முத்தூட் போன்ற தங்கம் அடகு நிதி நிறுவனங்கள் கேரளாவை மையமாகக் கொண்டவை. அடித்தட்டு மற்றும் நடுத்தர, சிறுதொழில் செய்யும் வர்க்கத்தினர் இந்த நிதி நிறுவனங்களைப் பெரிதும் நம்பியிருப்பவர்கள். தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டத்திலிருந்து மீண்டுவர தங்களிடமுள்ள தங்க நகைகளை அடகு வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அப்போது மணப்புரம், முத்தூட் ஆகிய நிறுவனங்களைத் தேடிவர வாய்ப்பிருப்பதால், இந்த நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்பு உண்டு. ஆனால், தங்க நகை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்கள் அதைத் திரும்ப செல்லுத்தாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், அடமானமாகத் தங்கம் இருப்பதால், வாராக் கடன் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

கார் விற்பனை

இந்த மழை வெள்ளத்தால் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், பல கார்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. எனவே, புதிய கார்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாருதி, மகேந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது.

சாலைப் போக்குவரத்து

இந்தப் பெருவெள்ளத்தால் சாலைகள் 5,000 கிலோ மீட்டர் அளவிற்குப் பெருத்த சேதமடைந்துள்ளது. எனவே, புதிய சாலைகள் போடுவதற்குத் தேவையான தார் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்கலாம்.

ரீடெய்ல் ஸ்டோர்

ரிலையன்ஸ், பிக்பஜார் போன்ற சங்கிலித் தொடர் விற்பனையகங்களில் ஏற்கெனவே இருப்புகள் குறைந்துள்ளன. ஆனால், கூடியவிரைவில் இவற்றுக்குத் தேவையான பொருள் களைக் கொண்டுவந்து விடக் கூடிய சக்தி இந்த நிறுவனங் களுக்கு உண்டு. எனவே, இந்தப் பங்குகளைக் கவனிக்கலாம்.

மருந்துத் துறை

தொற்றுநோய் எதிர்ப்பு, சேற்றுப் புண் களிம்பு, வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துப் பொருள் களின் விற்பனை வாய்ப்பு அதிகரித்துள்ளது. சிப்லா, டி.ஆர்.எல், அபாட் ஆகிய மருந்து கம்பெனிகளின் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தீம் பார்க் பங்கு

தீம் பார்க் நிறுவனமான வெண்டர்லாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இந்த நிறுவனத்துக்குச் சென்று செலவழிப்பதைப் பலரும் குறைத்துக்கொள்ளவே விரும்பு வார்கள். அதிலும் குறிப்பாக, கேரளாவின் வட மாவட்டங்களி லிருந்து கொச்சிக்கு வருகிற சாலைப் போக்குவரத்து கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ரப்பர் உற்பத்தி

இந்த மழை வெள்ளத்தினால் ரப்பர் மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதால், ரப்பர் தட்டுப்பாடு நிலவக்கூடும். எனவே, ரப்பர் தயாரிப்பு நிறுவனமான ரூப்ஃபைலா ரப்பர் விலையேற்றத் தால் பாதிக்கப்படக் கூடும். ரூபாய் வீழ்ச்சி காரணமாக வெளிநாடு களிலிருந்து ரப்பரை இறக்குமதி செய்யவும் பெரிய அளவில் வாய்ப்பில்லை. இதனால் ரப்பர் விலை உயர வாய்ப்புண்டு.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்

இந்த மழை வெள்ளத்தினால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலத்த அடி வாங்கக்கூடும். கார்கள் பெருமளவு சேதத்தைச் சந்தித்திருப்பதால், பஜாஜ் அலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி எர்கோ, என்.ஐ.ஏ. ஆகிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்கக்கூடும்.

வங்கிப் பங்குகள்

வங்கிகளைப் பொறுத்தவரை, கடனை வாங்குவதில் தாமதம், வாராக் கடன் அதிகரிப்பு, வங்கி உள்கட்ட மைப்பில் சேதாரம், ஊழியர்கள் விடுப்பு போன்றவற்றால் சில பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வங்கிகளின் காசா (CASA) விகிதம் அடிவாங்கும். ஃபெடரல் வங்கி, செளத் இந்தியன் பேங்கி, தனலட்சுமி பேங்க் ஆகிய வங்கிகள் இழப்பைச் சந்திக்கக்கூடும்.

டோல்கேட் பங்கு

தமிழகத்திலிருந்து கேரளாவினுள் நுழைகிற சாலையில் கே.என்.ஆர் பங்கு நிறுவனங்கள் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளன. பெருவெள்ளம் காரணமாகப் போக்குவரத்து பெரிய அளவில் குறைந்துள்ளன. இந்த நிலை மாறுவதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண்டியிருக்கும்.

விமான நிறுவனப் பங்கு

விமானப் போக்குவரத்துச் சேவை இன்னும் கேரளாவில் சீராகவில்லை. இதன் காரணமாக, இண்டிகோ விமானச் சேவையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

மருத்துவமனைப் பங்கு

கேரளாவிலிருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே மருத்துவ மனை அஸ்டர்மெட்சிட்டிதான். இந்த மருத்துவமனை கடந்த வாரமே மூடப்பட்டது. அது மீண்டும் இயங்க இன்னும் இருவார காலம் ஆகலாம்.

மது விற்பனை

ஓணம் பண்டிகையையொட்டி மது விற்பனை பெரிய அளவில் குறைந்து உள்ளது. இதனால் ராடிகோ, யூ.பி.எல், மவுன்ட் யூ.எஸ்.எல். ஆகியவற்றின் விற்பனை பாதிப்படைந்துள்ளது.

தங்கம் விற்பனை மந்தம்

தங்கத்தின் சில்லறை விற்பனை முழுவதும் சரிந்துள்ளது. பல இடங்களில் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அல்லது எளிய முறையில் நடத்தப்பட்டுள்ளன. எனவே, தங்க நகை விற்பனை குறையும் என்பதால், டைட்டன் நிறுவனத்தின் வருமானம் சிறிது பாதிப்படையயும்.

காப்பி, டீ தயாரிப்பு நிறுவனங்கள்

மூணார், வயநாடு, கூர்க் பகுதியிலுள்ள காபி, தேயிலைத் தோட்டங்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதிலிருந்து மீண்டுவர இன்னும் ஆறு மாத காலங்கள் ஆகலாம். அதுவரை டார்ஜிலிங்கிலுள்ள எஸ்டேட்டுகளில் விளையும் பயிர்கள் இந்த இழப்பை ஈடுகட்ட உதவக்கூடும். இதனால், டி.ஜி.பி.எல், டாடா காபி, ஹரிஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளன.

இன்வெர்ட்டர் நிறுவனம்

விகார்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை கேரளாவில் இல்லை என்பதால் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். எனவே, ஓணம் பண்டிகையையொட்டி இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருக்கும். ஆனால், வெள்ளம் காரணமாக விற்பனை குறைந்து, சம நிலையை அடைய வாய்ப்புண்டு.

இந்தப் பங்குகளை உன்னிப்பாகக் கவனித்து முதலீடு செய்யுங்கள்.’’

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

படங்கள் : அ.குரூஸ்தனம்

ஜவுளி உற்பத்தி!

கார்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனமான கிடெக்ஸ் நிறுவனம் உயரமான பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வெள்ளத்தால் பாதிக்கப் படவில்லை. இந்த நிறுவன ஊழி யர்கள் அனைவரும் நிறுவனத்தின் வளாகத்திலேயே பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதும் இந்த நிறுவனத்துக்குச் சாதகமான அம்சம்தான்.