Published:Updated:

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

Published:Updated:
பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, ஹெச்.எஸ்.பி.சி  வங்கியின் பி.எம்.எஸ் (Portfolio Management Service) திட்டத்தில் ரூ.3.6 கோடியை முதலீடு செய்தார். அந்த முதலீட்டுக்கு  24% வருமானம் தருவதாக உறுதியளித்தது அந்த வங்கி. ஆனால், வாக்களித்தபடி வருமானத்தைத் தராததால், தனது பணத்தை மோசடி செய்ததாகக் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் செய்தார் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.

அவரது புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை முடிவில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஹெச்.எஸ்.பி.சி வங்கிக்கு ஒழுங்குமுறை அமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியது. ஹெச்.எஸ்.பி.சி வங்கி, வாடிக்கையாளருக்குத் தந்த உறுதிமொழியை மீறி ஏமாற்றிவிட்டதாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாடகி சுசித்ராவின் முதலீட்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.83 லட்சம் மற்றும் அவரது  முதலீட்டிற்கு கமிஷனாகக் கொடுத்த ரூ.26 லட்சம் என அனைத்தும் கணக்கிடப்பட்டன. தற்போது, இந்தப் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு (Amicable Settlement) காணப்பட்டு, இழப்பீடு தரப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ், சுருக்கமாக பி.எம்.எஸ் எனப்படும் இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, வங்கி மற்றும் முதலீட்டாளருக்குமிடையேயான இருதரப்பு உடன்பாடு ஆகும். வாடிக்கையாளர்களால் முதலீட்டை நிர்வகிக்கவும், பெருக்கவும் தேவையான காலமோ அல்லது பங்கு முதலீட்டு அனுபவமோ இல்லாதபட்சத்தில், அந்த முதலீட்டுத் தொகையைப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து, லாபம் சம்பாதித்துத் தருவதுதான் பி.எம்.எஸ். இதில் ஈட்டித்தரும் வருமானத்துக்கேற்ப நிறுவனத்திற்கு உரிய கமிஷன் அளிக்கப்படும். இந்த உடன்பாட்டில் நம்பிக்கையான செயல்பாடு மிகவும் முக்கியம். இந்த நம்பிக்கை சிதையும்போது ஒட்டுமொத்த பி.எம்.எஸ் செயல்பாடே கேள்விக்குரியதாகிவிடும்.

இந்த பி.எம்.எஸ் முறை குறித்தும், இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

“பொதுவாக, நம்முடைய பணத்தை நாமே முதலீடு செய்வதுதான் சிறந்தது. நம்மால் முடியாதபோது பி.எம்.எஸ் மூலம் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கிறோமென்றால், அவர்கள் அந்தப் பணத்தை முறையாக முதலீடு செய்கிறார்களா என்பதையாவது பார்க்க வேண்டும். இந்த முதலீடு தொடர்பாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டு விவரங்களை நமக்கு அனுப்புவார்கள். அதனை நாம் சரிபார்க்க வேண்டும். நம் பெயரில் வாங்கி, விற்கப்பட்டுள்ள பங்குகளைப் பார்க்க நமக்கென ஒரு லாகின் வசதியைக் கொடுப்பார்கள். ஆன்லைனில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை செக் செய்ய வேண்டும். நம் பணத்தை எவ்விதம் முதலீடு செய்திருக்கிறார்கள், எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்தப் பங்குகளின் நிலை என்ன என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். அதற்கென சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அப்போதுதான் தொடக்கத்திலேயே இதில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பதாகத் தோன்றினால் அதுகுறித்து கேள்வியெழுப்பவோ, சரிசெய்யவோ முடியும்.  

சரிசெய்ய முடியாதபட்சத்தில் அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேறவும் செய்யலாம். தொடக்கத்திலேயே இந்தத் தவறு களைக் கண்டறிந்து வெளியேறும்பட்சத்தில் பெரிய அளவில் பண இழப்பைத் தவிர்க்கலாம். எனவே, இந்த முதலீட்டை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம்.

ஒரு தனிநபரிடம் முதலீடுத் தொகையைக் கொடுக்காமல் ஒரு கார்ப்பரேட் செட்டப்பில் இயங்கும் நிறுவனத்தின்மூலம் முதலீடு செய்யும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்தச் சூழலில் ஒருவர் நம்மிடம் குறிப்பிட்ட சதவிகித வருமானத்திற்கு உறுதியளித்திருப்பார். அந்த உறுதி பொய்யானதாகக்கூட இருக்கலாம். அடுத்து அந்தப் பொறுப்பிற்கு வருபவரால் அந்த வருமானத்தை ஈட்டமுடியாமல் போகலாம். எனவே, அத்தகைய தருணங்களில் நம்மிடம் தரப்பட்ட உறுதிமொழி குறித்துத் தெரிவிக்க வேண்டும். அந்த அளவிற்கு வருமானம்  தர முடியாது என நிறுவனத்தின் சார்பில் சொன்னால், அந்த ஒப்பந்தத்திலிருந்து நம் முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொள்வது நல்லது.

அடுத்து, இந்த மாதிரியான முதலீடுகளில் பங்குச் சந்தையின் போக்குக்கேற்ப ஏதேனும் இழப்புகள் நேரலாம். அப்படி இழப்பு நேரும்போது அதனை எந்த அளவிற்கு நம்மால் தாங்கமுடியும் என்பது முக்கியம். நாம் பி.எம்.எஸ்ஸில் முதலீடு செய்யும்போதே நம்மால் எந்த அளவுக்கு  ரிஸ்க் எடுக்க முடியும் என்பது குறித்த விவரங்களை வாங்கியிருப்பார்கள். அதற்கேற்ற பங்குகளில்தான் நம்முடைய பணத்தை அவர்கள் முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய தாங்கும் சக்தியையும் தாண்டி இழப்பு ஏற்படும் சூழலில் அந்த முதலீட்டைத் திரும்பப்பெறுவதே சரியானதாக இருக்கும்.

பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின்மூலம் பி.எம்.எஸ் முதலீடு செய்யும்போது அவர்கள் தங்களை மிகவும் பெரிதாகக் காட்டிக்கொள் வார்கள். அப்போதுதான் அவர்கள்மீது நமக்கு ஒருவிதப் பிரமிப்பும், இவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் வரும். அதுபோக, நமக்கு டிராமா பார்க்க, சினிமா   பார்க்க என இலவச டிக்கெட் சலுகைகள் கொடுப்பது, பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் மீட்டிங் நடத்துவது என ஒவ்வொரு பெருநிறுவனங் களும் வெவ்வேறுவிதமாக முதலீட்டாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இத்தகைய செயல்பாடுகள் அனைத்திலும் நம்முடைய முதலீட்டுப் பணமும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவற்றையெல்லாம் பார்த்து மயங்காமல், முதலீடு குறித்த விவரங்களைப் பெறுவதில், முதலீட்டைக் கண்காணிப்பதில் மட்டும் குறியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே தவறு செய்ய நினைப்பவர்களும் தங்களைத் திருத்திக் கொள்வார்கள். எனவே, இத்தகைய மோசடி களுக்கு நிறுவனங்கள் மட்டுமின்றி, நம்முடைய கண்காணிப்புக் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கிறது’’ என்றார்.

சமீப காலமாகப் பெரிய அளவில் வருமானமீட்டி வருகின்றனர் பலர்.  அந்த வருமானத்தை முறையாக முதலீடு செய்து கூடுதல் லாபம் சம்பாதிக்கும் உத்தி, திறமை, நேரம் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே தான், இன்னொருவரையோ, இன்னொரு நிறுவனத்தையோ அவர்கள் நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட வாய்ப்பினைத் தேடிச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸை நல்ல விதத்தில் பல நிறுவனங்கள் உலகம் முழுக்க நடத்திக் கொடுத்து வருகின்றன. உலக அளவிலும், இந்திய அளவிலும் சரி, பி.எம்.எஸ் முதலீட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குக் கறாரான விதிமுறைகள் உள்ளன. சில நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும்போது, அந்த முதலீட்டு முறையையே மக்கள் சந்தேகத்துடன்  பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

நம் பணத்தை நிர்வாகம் செய்வதை யாரோ பார்த்துக் கொள்வார்கள் என்றில்லாமல், நாமும் கொஞ்சம் விழிப்புடன் செயல்படுவதுதான் இது மாதிரியான பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான வழி!

- தெ.சு.கவுதமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism