Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவந்ததை இதுவரை பார்த்து வந்தோம்.  ஏறக்குறைய 2018 மே மாதம் தொடங்கிய இந்த இறக்கம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்தது. தங்கத்தின் இந்தப் பெரும் இறக்கம் 31500-லிருந்து ஆரம்பித்து 29300 வரை தொடர்ந்தது. அதன்பின் சற்றே மேலே திரும்பி புல்பேக் ரேலியில் உள்ளது. இது தாக்குப்  பிடிக்குமா என்று இனி பார்ப்போம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் இந்த புல்பேக் ரேலி 29800-ல் வலுவாகத் தடுக்கப்படுகிறது.  இதைத் தாண்டினால் புதிய ஏற்றம் வரலாம். கீழே 29350 என்பது மிக மிக முக்கிய ஆதரவு எல்லை ஆகும்.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 29800-ஐ உடைத்து ஏற ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்களன்று வலுவாக ஏறி 29800 தாண்டி 30045 என்ற புள்ளியைத் தொட்டாலும், முடியும்போது சற்றே இறங்கி 29973 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அதாவது, ஒரு பெரிய ஏற்றத்திற்குப் பிறகு, தொடர்ந்து ஏற முடியாமல், ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. அடுத்து செவ்வாயன்று 30015 என்ற புள்ளியில் தொடங்கி, 30170 வரை ஏறினாலும், உச்சத்தைத் தக்கவைக்க முடியாமல், இறங்கி, 29981 என்ற புள்ளியில் முடிவடைந்தது. இப்படிக் காளைகள் திணறித் திணறி ஏறினாலும், புதனன்று 29977 என்ற புள்ளியில் தொடங்கிய காளைகள், பின்பு வலுவாக விலையை ஏற்றி 30168 வரை கொண்டு சென்றார்கள். இது காளைகளின் ஆதிக்கம் நிகழ்வது போல் தோன்றினாலும், ஒவ்வொரு ஏற்றத்திலும் காளைகள் மிகவும் சிரமத்துடனே செயல்பட்டு வருகின்றன.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு 30350 என்ற எல்லையில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது நல்ல தடைநிலை ஆகும். கீழே 29720 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)

வெள்ளி தங்கத்தையொட்டியே நகரும் என்று பார்த்து வந்தோம்.  சில சமயங்களில் வெள்ளி தங்கத்தின் வேகத்திற்கு ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாமல் இருக்கும். ஆனால், அதே திசையில் தான் நகரும். இந்த முறை தங்கம் புல்பேக் ரேலி மூலம் வலுவான ஏற்றத்தைக் கண்டுள்ளது.  இந்தக் கால அளவில் வெள்ளியானது, தங்கம் ஏறுவதுபோல் சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று ஏற்றத்திற்கு முயற்சி செய்தது.

திங்களன்று நாம் கொடுத்திருந்த 37630 என்ற தடைநிலையைத் தாண்டி 38003 என்ற புள்ளியில் முடிந்தது. செவ்வாயன்று வலுவாக ஏறி, 38400 வரை சென்றாலும், அந்த எல்லையைத் தக்கவைக்க முடியாமல் இறங்கி, 38013-ல் முடிந்தது. அதன்பின் இறக்கம்தான்.

இனி,  நாம் முன்பு கொடுத்திருந்த 30630 என்ற தடைநிலை ஆதரவாக மாறலாம். உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம்.  தற்போது 38100 என்பது முக்கியத் தடைநிலை ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையை உடைத்து, மிக மிக வலிமையாக ஏறியது. சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று பக்கவாட்டு நகர்வில் இருந்த கச்சா எண்ணெய், புதன்கிழமை அன்று வலிமையாக ஏறி 4850-ஐ உடைத்து, 4935-ஐ தொட்டது. அடுத்த நாள் 5000 புள்ளியைக் கடந்தது. இருந்தாலும் 5000 என்ற புள்ளியைத் தக்கவைக்கும் சிரமத்தில் இருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்?  தற்போது 4820 புள்ளியை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 5080 உடனடித் தடை நிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

  மென்தா ஆயில்

மென்தா ஆயில், டெக்னிக்கல் அனாலிசிஸ் தத்துவத்தைச் செயல்படுத்திக் காட்டுவதுபோல் நகர்ந்துகொண்டிருக்கிறது. சென்றமுறை, மென்தா ஆயில்  ஓர் ஏற்றத்திற்குப்பின்,  ரீட்ரேஸ்மென்ட் முறையில் கீழே இறங்காமல், பக்கவாட்டு நகர்விலிருந்து வந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். சென்ற வாரம் இந்தப் பக்கவாட்டு நகர்விலிருந்து விடுபட்டு, அடுத்தகட்ட வலிமையான நகர்வுக்கு மாறியுள்ளது.

சென்ற வாரம் சொன்னது…‘மென்தா ஆயில் ஒரு ஆகஸ்ட் கான்ட்ராக்ட் முடிவை நோக்கி வருவதால், இனி செப்டம்பர் கான்ட்ராக்ட்டின் தடைநிலை 1740 என்ற புள்ளியிலும், கீழே ஆதரவு எல்லையை 1650 என்ற புள்ளியிலும் வைத்து வியாபாரம் செய்யலாம்.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1740-ஐ திங்களன்றே உடைத்து ஏறியது. அடுத்தடுத்த நாள்களில் புதிய உச்சங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தது. செவ்வாயன்று 1794-ஐயும், புதனன்று 1832-ஐயும் தொட்டது. ஒரு தொடர் ஏற்றத்தின் வரையறைக்கு உட்பட்டு அடுத்தகட்ட உச்சத்தைத் தோற்றுவித்தபிறகு, வியாழனன்று ரீட்ரேஸ்மென்ட் என்று சொல்வோம் அல்லவா; அதை உறுதி செய்யும் வகையில், வியாழனன்று 1814-ல் துவங்கி 1753 வரை இறங்கியது. ஆனாலும், இந்த இறக்கம் என்பது மேலும் தொடராமல், வெள்ளியன்று மீண்டு எழுந்துள்ளது. வெள்ளியன்று 1775 என்ற புள்ளியில் துவங்கி, நன்கு ஏறி 1810 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயிலை பொறுத்தவரை நாம் முன்பு கொடுத்திருந்த தடைநிலையான 1740, தற்போது ஆதரவு எல்லையாக மாறலாம். தற்போது உடனடித் தடைநிலை 1835 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் தற்போது 23200 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 23440 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’

மென்தா ஆயிலை பற்றி சொல்லும்போது அது எப்படி ஒரு தொடர் ஏற்றத்திற்கு எடுத்துக் காட்டாக சொன்னோமோ, காட்டன் அதற்கு நேரெதிராக உள்ளது. அதாவது, காட்டன் ஒரு தொடர் இறக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சென்ற வாரம் திங்களன்றே காட்டன் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான      23200-ஐ உடைத்து பலமாக இறங்கியது.

இந்த இறக்கம் என்பது கீழே 22910 என்ற எல்லைவரை இறங்கக் காரணமாக இருந்தது. காட்டன் ஒரு தொடர் இறக்கத்திலிருந்து வருவதால், அடுத்தகட்ட இறக்கம் பலமாக நிகழும். அதை நிரூபிப்பதுபோல், காட்டன் செவ்வாய் மற்றும் புதனன்று சற்றே ஏறியது. இந்த ஏற்றம் 23200 என்ற எல்லைக்கு அருகே தடுக்கப்பட்டு மீண்டும் பலமாக இறங்கியது. அதன்பின் தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் நன்கு இறங்கிய நிலையில் 22750 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும். மேலே 22970 என்பது தடைநிலை ஆகும்.

சென்னா

சென்ற வாரம் சொன்னது...  ‘‘நல்ல இறக்கத்தில் இருந்து வரும் சென்னா, கீழே 4040 என்ற ஆதரவைக் கொண்டுள்ளது. மேலே 4190 என்பது உடனடித் தடைநிலையாகும்.’’

சென்னா கடந்த சில வாரங்களாக பலமாக ஏறினாலும் அடுத்து டபுள் டாப் உருவமைப்பை ஏற்படுத்தி, அதன்பின் முக்கிய ஆதரவான 4040 உடைத்து இறங்கியுள்ளது. இந்த ஆதரவும், நாம் சென்ற வாரம் கொடுத்திருந்த ஆதரவே ஆகும். சென்ற வாரம் திங்களன்று சென்னா நாம் கொடுத்திருந்த 4040 என்ற ஆதரவை பலமாக உடைத்து இறங்கி, 3955 என்ற புள்ளியைத் தொட்டது. அடுத்தடுத்த நாள்கள் பலமாக இறங்கி, கீழே 3754 வரை இறங்கியது.

இனி என்ன செய்யலாம்? சென்னா நன்கு இறங்கிய நிலையில் 3750 என்ற எல்லை முக்கிய ஆதரவாகவும், 4015 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in