அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சரியாகப் பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக லேமென் பிரதர்ஸ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி திவால் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல வங்கிகள் திவாலாகி, அமெரிக்கப் பங்குச் சந்தை பலமாகச் சரிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இருந்து மீள அமெரிக்க அரசாங்கமும், மத்திய வங்கியும் படாதபாடுபட வேண்டியிருந்தது.

இந்தப் பொருளாதார நெருக்கடி முடிந்து பத்து ஆண்டுகளான நிலையில், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதற்குச் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்விகளாக இருக்கிறது. காரணம், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வந்தால் அதன் பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும் என மெக்கென்ஸி நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஜேபி மார்கன் நிறுவனத்தின் உயரதிகாரியும் அடுத்தப் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்பு இருக்கிறதா?

தாங்கும் சக்தி

இதற்குமுன்பு பொருளாதார நெருக்கடிகள் வந்தபோது உள்ள சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை

வேறு. முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அவற்றைத் தாங்கும் சக்தி பல நாடுகளுக்கு இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது.

உதாரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி. முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை முதலில் உயரும். 1973 மற்றும் 1990-களின் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக உயர்ந்தது. அதற்கு முக்கியமான காரணம், உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய உற்பத்தி ஒபெக் நாடுகள் வசம் இருந்தன. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகளை மட்டுமே நம்பியிருக்கத் தேவை யில்லை. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வதுடன், மாற்று எரிசக்தியை உற்பத்தி செய்வதில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. தவிர, உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு செய்யும் செலவும் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, இப்போதைக்கு பெரிய பிரச்னையாக இருப்பது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் கடன்தான். ஆனால், இதன் காரணமாக இன்னொரு பொருளாதார நெருக்கடி வர வாய்ப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

குறைவான பணவீக்கம்

சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் குறைவான பணவீக்கமே இருக்கிறது. பணவீக்கம் குறைவாக இருந்தால், பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அதை எளிதில் கையாள முடியும்.

1980-களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்தி வந்தன. இதற்குக் காரணம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் அதிக பணவீக்கம் இருந்தது. தற்போது அமெரிக்காவில் குறைந்த அளவில்தான் பண வீக்கம் என்பது இருக்கிறது. கால் சதவிகிதம், அரை சதவிகிதம் வட்டி விகிதத்தை உயர்த்தவே அமெரிக்க அரசாங்கம் ஆண்டுக் கணக்கில் யோசிக்கிறது. எனவே, பணவீக்கம் காரணமாகவும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை.

வங்கி நடைமுறைகளில் மாற்றம்

பத்து ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது வங்கிகளின் செயல்பாடு. வங்கிகள் தரும் கடனை அதிகரித்துக்காட்ட வேண்டும் என்பதற்காகத் திரும்பச் செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்குக் கடனை அள்ளிக் கொடுத்ததால், வங்கிகள் தந்த பணம் திரும்ப வரவில்லை. இதனால் லேமென் வங்கி உள்பட பல வங்கிகள் திவாலாகின.

இந்த சம்பவத்துக்குப்பிறகு அமெரிக்க வங்கித் துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. முன்பு கேட்ட வுடன் கடன் தந்த நிலைமை மாறி, இன்று பார்த்துப் பார்த்து கடன் தரும் நிலைதான் அமெரிக்கா வின் அநேக வங்கிகளில் நடைமுறை யாக இருக்கிறது. எனவே, 2008-ல் ஏற்பட்ட ‘சப்ப்ரைம்’ நெருக்கடி போல மீண்டுமொரு நெருக்கடி வாய்ப்பில்லை.

பங்குச் சந்தையிலும் சீர்திருத்தம்

முந்தைய நெருக்கடிகளின் போது, சிறிய நிறுவனங்கள் மட்டுமல்ல, பல பெரிய நிறுவனங்களே போதுமான பணமில்லாமல் கடனில் இருந்தன. அந்த நிலையிலிருந்து நிறுவனங்கள் மாறி, தற்போது அதிக அளவில் ரொக்கமாகப் பணத்தை வைத்திருக்கின்றன. இதனால் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டாலும், தங்களது நிறுவனங்களின் பங்குகளைத் திரும்ப வாங்கி, பங்கு களின் விலை மேலும் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது. பங்குகளின் விலை சரியும்பட்சத்தில், சந்தையிலிருந்து பங்குகளை வாங்கும் திறன் நிறுவனங்களுக்கு உள்ளது.

அது மட்டுமல்ல, முன்பு பங்குச் சந்தை சரியத் தொடங்கினால் ஒரே நாளில் 15%, 20% என்று இறங்கும். சந்தை இறங்குகிறதே, பங்கினை விற்கலாமா என்று யோசித்து ஒரு முடிவெடுப்பதற்குள் 30% வரை விலை இறங்கியது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இப்போது ஒரு நாளில் இந்த அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தை சரியலாம் என்கிற சர்க்கியூட் பிரேக்கர் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மட்டுமல்ல, உலகின் பல பங்குச் சந்தைகளிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதால், இனி பங்குச் சந்தை ஒரேயடியாகச் சரிய வாய்ப்பில்லை. இதனாலும் நெருக்கடி ஏற்பட சாத்தியமில்லை.

எச்சரிக்கை

உலக அளவில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், சில விஷயங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், சர்வதேச அளவில் நாடுகளின் கடன் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு சர்வதேசக் கடன் 62 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது 2007-ல் 116 லட்சம் கோடி டாலராக உயர்ந்தது. 2016-ல் இதுவே 164 லட்சம் கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் கடன்கூட வரும்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக் கிறது. தவிர, வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் கடன் ஜி.டி.பி விகிதத்தில் 85 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்பது ஆரோக்கியமான விஷயமே அல்ல. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி ஏதும் ஏற்பட்டால், கடன் சலுகை என பல நடவடிக்கைகளை எடுத்துத்தான் நிலைமையைச் சரிசெய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

உலக நாடுகளின் அரசியல் காரணமாகவும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும், தொழில்நுட்பங்கள் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு என்கிறார்கள். அதிவேக அல்காரித அடிப்படையிலான வர்த்தகங்கள், கிரிப்டோ கரன்சி போன்ற நெருக்கடியை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ள தொழில்நுட்பக் காரணங்கள்.

ஆக இப்போதுள்ள நிலையில், இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிட பெரிய அளவில் வாய்ப்பில்லை. என்றாலும், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

- வாசு கார்த்தி