Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

கடந்த வாரம் டிரேடர்களுக்கு மிகவும் கடினமான வாரமாகவே இருந்தது. மோசமாகத் தொடங்கிய சந்தை, வெகுவிரைவிலேயே சரிந்து,  வெறும் இரண்டு வர்த்தக தினங்களிலேயே டிரேடர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதுதான் கரடி சந்தைகளின் சக்தி என்பதைக் காட்டியதுடன், குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு பணம் பார்க்கலாம் என்பதால், ஏராளமான டிரேடர்களை சார்ட்  போக வைத்தது.  சந்தையின் ஒட்டுமொத்தப் போக்கும் சரிவான நிலையில் இருந்தால்தான் இப்படிச் செய்வது சரியாக இருக்கும். ஆனால், அந்த நிலை இப்போதில்லை. 

சந்தை, ஏற்றமடைவதற்கு ஏற்ற வகையில் மிகவும் வசதியான முறையில் தயாராகவே இருந்ததுடன், இந்த அனைத்துச் சரிவுகளும் (ஆகஸ்ட் 31-ல் தொடங்கி) நிஃப்டியை ஜூன் 28-ம் தேதி தொடங்கிய ஏற்றத்திலிருந்து, 38 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் லெவலுக்குக் கீழே கொண்டுவந்தது. எனவே,  கீழே இறங்கிய விலைகள் ஆதரவுடன், வேகமாக ஏற்பட்ட சரிவு, ஏராளமான  வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. கடைசி இரு வர்த்தக தினங்களில் சந்தை மீண்டு ஏற்றத்தைச் சந்தித்தது.

பேங்க் நிஃப்டி சார்ட், நிஃப்டி வாராந்திர சார்ட்டைப் போன்றதுதான். ஒரே விதிவிலக்கான வித்தியாசம் என்னவென்றால், பேங்க் நிஃப்டியின் சார்ட் டேர்ம் சப்போர்ட் டிரெண்ட்லைன்  உடைக்கப்படும் அதே சமயத்தில், அது இன்னமும் நிஃப்டி ஃப்யூச்சரை அடையும் தூரத்திலிருந்து சற்று தள்ளியிருக்கிறது. எனவே, வங்கித் துறையில் பங்குகளை விற்று ஆதாயம் அடையும் நடவடிக்கை அதிகமாக இருப்பதைப் போன்று காணப்படுகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் எஃப்.எம்.சி.ஜி இண்டெக்ஸும் பாதிக்கப்பட்டதுடன், இடைப்பட்ட சப்போர்ட் டிரெண்ட்லைன் சரிந்தாலும் மீண்டும் மேலே ஏறலாம். மெட்டல் இண்டெக்ஸும்கூட மீண்டும் ஏற்றத்தை நோக்கித் திரும்புவதாகத் தெரிகிறது. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலும்கூட சிறப்பாக வியாபாரம் செய்யப்படுவதால், அதன் போக்கு ஏற்றத்தை நோக்கி சீராக இருக்கிறது. இவையெல்லாமே ஒட்டுமொத்த சந்தையின் நிலை முற்றிலும் சீராக இருப்பதையே காட்டுகிறது.

ஆனால், சென்டிமென்ட் குறுகிய கால செய்திகள் வரத்தால் உருவாக்கப்படுவதுடன்,  செய்திகள் வரத்தைப் பொறுத்தவரை, தற்போதைக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு போன்ற நடப்புக் காரணிகளே மைய நிலையாக இருக்கும். இந்த நெகட்டிவ் மேக்ரோ காரணிகள் தொடர்ந்தால், பங்குகளை விற்கும் சூழலுக்குள் நாம் நுழையக் கூடும். அனைத்துக்கும் மேலாக, மேக்ரோ காரணி களை குறிப்பாக, அவை டிவியில் பெருமளவு  விவாதிக்கப்பட்டு வரும்போது, சந்தையால் எவ்வளவு காலத்துக்கு அலட்சியம் செய்ய முடியும்?

தற்போதைய கேள்வி என்னவெனில், வளரும் நாடுகளின் சந்தைகளில் பங்குகளை  அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டுவிட்டதா என்பதுதான். வளரும் நாடுகளின் இந்தியா சிறப்பாகச் செயல் படுகிறது. எனவே, நமது குறியீடுகள் தொடர்ந்து படிப்படியாக மேலே செல்லக்கூடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வரும் வாரத்தில், நிஃப்டி லாங்க் பொசிஷன்கள் தொடரலாம் அல்லது ஃப்யூச்சர்ஸில் 11380 என்ற ஸ்டாப்லாஸுடன் புதிதாக ஒன்றுகூடி உருவாகலாம்.  

லூபின் (LUPIN)

தற்போதைய விலை: ரூ.962.75

வாங்கலாம்


ஃபார்மா நிறுவனப் பங்குகள் படிப்படியாக முன்னேறி வருவதால், பார்மா இண்டெக்ஸ் சார்ட்டில் இன்னும் பல நிறுவனங்கள் வரக் கூடுமெனத் தெரிகிறது. இந்த பார்மா பங்குகளில் லூபின் நிறுவனப் பங்கு நல்ல விலை ஏற்றத்தைக் காட்டுகிறது. இந்த நிறுவனத்தின் தினசரிச் சார்ட்டில், சமீபத்தில் ஏற்பட்ட பிரேக்அவுட்டிற்குப் பிறகு, தலைகீழ் ஹெட் அண்டு ஷோல்டர் பேட்டர்னைப் பார்க்க முடிகிறது. இந்த பேட்டர்ன்படி பார்த்தால், இந்தப் பங்கின் விலை ரூ.1,150-1,175 வரை எட்டக்கூடும் என்று தெரிகிறது. எனவே, தற்போதைய விலையிலோ அல்லது விலை சிறிது குறையும்போதுகூட வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.925-ற்குக்கீழே வைத்துக் கொள்ளவும். 

யூபிஎல் (UPL)

தற்போதைய விலை: ரூ.736.75

வாங்கலாம்


இந்த நிறுவனப் பங்கு சில வாரங்களுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட விதத்திலேயே செயல்பட்டுள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இதன் விலை, லாபகரமான இடத்திலேயே இருக்க இந்த நிறுவனத்தினரே தங்களது பங்குகளை வாங்குபவர் களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. கடந்த ஜூலை மாதத்தில் நடந்த பெரிய கையகப்படுத்து தலின் விளைவைத் தெரிந்துகொள்ள காலம் பிடிக்கலாம். எனினும், பங்கு விலையின் போக்கைப் பார்க்கும்போது, இன்னும் ஏற்றம் காணும் என்று தெரிகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்குகளை வாங்கலாம். 6 முதல் 12 மாதங்களில் பங்கின் விலை ரூ.900-க்கு மேல் அதிகரிக்கக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பல்ராம்பூர் சினி மில்ஸ்  (BALRAMCHIN)

தற்போதைய விலை: ரூ.88.65

வாங்கலாம்


சர்க்கரை விலை, அதிக சுழற்சிமுறை கொண்ட வைகளின் ஒன்றாகும். கடந்த ஆண்டும், அதற்கு மேலும் இதன் விலை மிகவும் கீழிறங்கி வந்து தற்போது இச்சுழற்சியின் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. சர்க்கரை நிறுவனங்களின் சூழல் சாதகமாக இருப்பதால், அவற்றின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை எதிர்பார்க்க லாம். ஏற்கெனவே இதற்கான ஆதாரத்தை நாம் பார்த்திருக்கிறோம்.
முன்னணிப் பங்குகளில் ஒன்றாக பல்ராம்பூர் உள்ளது. இந்த  நிறுவனம் கடன் ஏதுமற்றதாகும். இதன் பங்கு விலை சார்ட்டில் மேல்நோக்கிய டபுள் பாட்டம் பிரேக்அவுட்டைப் பார்க்க முடிகிறது. பங்கின் விலை ரூ.110-120 வரை உயரக்கூடும்.

- டாக்டர் சி.கே. நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES),  மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு. கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!