Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து ஏறுமுகமாக மாறியது என்று சென்ற வாரம் விளக்கிக் கூறியிருந்தோம். அந்த வலிமையான ஏற்றம் என்பது தற்போது, ஒரு தடைநிலைக்கு அருகில் உள்ளது. கீழே 29184 என்ற குறைந்தபட்ச புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, பின் வலிமையாக ஏறியது. இந்த ஏற்றம், ஒரு தொடர் ஏற்றமாக மாறி, பின் 30810 என்ற எல்லைக்கு அருகில் தடுக்கப்பட்டுள்ளது.    
சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 30810 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகக் கொண்டுள்ளது. அதைத் தாண்டினால் பெரிய ஏற்றம் வரலாம். கீழே முந்தைய தடைநிலையான 30350 தற்போது ஆதரவாக மாறலாம்.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்ற வாரம் தங்கத்துக்கும் நாம் கொடுத்திருந்த 30810 என்ற தடை நிலையைத் தாண்டமுடியாமல் திணறிக்கொண்டு இருந்தது. சென்ற வாரம் திங்களன்று ஒரு வலியான ஏற்றத்தில் இருந்தும்கூட 30748 என்ற எல்லையில் தடுக்கப்பட்டது.  அதன்பின், செவ்வாய் மற்றும் புதனன்று ஏற முயன்று 30780 என்ற எல்லைக்கு அருகில் தடுக்கப் பட்டது. வியாழனன்று கரடிகள் கைஓங்கியதில் தங்கம் இறங்கி, குறைந்தபட்சமாக 30450 என்ற புள்ளியைத் தொட்டது.    

இனி என்ன நடக்கலாம்?  தங்கம் தொடர்ந்து ஏற முடியாமல் பக்கவாட்டு நகர்வுக்கு மாறி யுள்ளது. மேலே 30780 என்ற எல்லையில் பலமாகத் தடுக்கப் பட்டுள்ளது.  கீழே 30400 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)

சென்றவாரம் சொன்னது...  ‘‘27.08.18-ல் இருந்தே ஒரு வலுவான பாட்டத்தைத் தோற்றுவித்து, அதைக் காத்தும் வருகிறது.  கிட்டத்தட்ட 36680 என்ற எல்லை முக்கிய ஆதரவாகவே உள்ளது.  மேலே 37490 என்பது வலிமையான தடைநிலையாக உள்ளது.’’

வெள்ளி சென்ற வாரமும், தங்கத்தின் நகர்வுக்கு மாறுபட்டே நகர்ந்துள்ளது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 36680-ஐ இன்னமும் தக்கவைத்துள்ளது.  மேலே 37490ஐ தாண்டினாலும், அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இறங்கி, மீண்டும் பக்க வாட்டு நகர்வுக்காக மாறியுள்ளது.  

இனி என்ன செய்யலாம்?  தற்போது வெள்ளி 37000 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 37600 என்ற எல்லையைத் தடை நிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘தற்போது இன்னும் 4820 என்ற எல்லை முக்கிய ஆதரவே. இனி மேலே 4940 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக செயல்படலாம்.’’

கச்சா எண்ணெய், மீண்டும் அமெரிக்கப் புயலை மையமாக வைத்து பலமாக ஏறியது.  இந்த ஏற்றம் செவ்வாயன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4940ஐ உடைத்து வலிமையாக ஏறி, 5054ஐ தொட்டது.  அதன்பின் புதனன்று ஏற்றம் தொடர்ந்து 5139ஐ தொட்டு, அதன்பின் ஸ்பின்னிங் டாப்பாக மாறியது. ஆனால், வியாழனன்று கடுமையாக இறங்கி, 4904 வரை இறங்கியது. 

இனி என்ன நடக்கலாம்?  கடுமையான ஏற்ற, இறக்கங் களைக்கொண்ட கச்சா எண்ணெய், 4860 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 5010 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஜூன் 2018ல் 1106 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டபிறகு, ஒரு தொடர் ஏற்றத்தில் இருந்து வந்தது. இந்த ஏற்றம் இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. சென்ற வாரம் உச்சமாக 1814-ஐயும் தொட்டுள்ளது.

சென்ற வாரம் சொன்னது…  ‘‘மென்தா ஆயிலைப் பொறுத்த மட்டில் நாம் முன்பு கொடுத்திருந்த தடைநிலையான 1740, தற்போது ஆதரவு எல்லையாக மாறலாம்.  தற்போது உடனடித் தடைநிலை 1835 ஆகும்.’’

மென்தா ஆயில் சென்ற வாரம்,  நாம் கொடுத்து இருந்த தடைநிலையான 1835-ஐ உடைக்க முடியாமல் திணறிக்கொண்டு தான் உள்ளது.  மென்தா ஆயில் இதுவரை வலிமையான ஏற்றத்தில் இருந்தது உண்மை. ஆனால் இந்த ஏற்றத்திற்குப்பிறகு, கடந்த மூன்று வாரங்களாக, நாம் கொடுத்திருந்த தடைநிலையை உடைக்க முடியாமல், ஒரு டபுள் டாப் உருவமைப்பை தோன்றுவித் துள்ளது. 

இனி என்ன செய்யலாம்… மென்தா ஆயில் இன்னும் நாம் முன்பு கொடுத்திருந்த 1835 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.  கீழே 1680 என்ற எல்லை வலிமையான ஆதரவு ஆகும். உடைத்தால் நன்கு இறங்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் நன்கு இறங்கிய நிலையில் 22750 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும்.  மேலே 22970 என்பது தடைநிலை ஆகும்.’

காட்டன் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 2018ன் முதல் வாரத்தில் 24280 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, படிப்படியாக இறங்கி வருகிறது. 

காட்டனில் இந்த இறக்கம் 22650 என்ற எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரு புல்பேக் ரேலிக்கு வழிவகுத்தது. சென்ற வாரம் உச்சமாக 23240ஐ தொட்டபின் கடுமையான இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் தற்போது 22650-ஐ ஆதரவாகவும், மேலே 23010-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ். சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்னா ஜூலை 2018-ல் 4384 என்ற உச்சத்தைத் தொட்டது.  அதன்பின் இறங்கி மீண்டும் ஏறி ஆகஸ்ட் மாதம் 4362 என்ற உச்சத்தைத் தொட்டது.  இது ஒரு டபுள் டாப் உருவமைப்பைத் தோற்றுவிக்க உதவியது.  அதன்பின் ஒரு வலிமையான இறக்கத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. 

ஆகஸ்ட் முடிவில் 3754 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டபிறகு, ஒருபக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. இந்தப் பக்கவாட்டு நகர்விலிருந்து மேலே திரும்ப முயற்சி செய்கிறது.

இனி என்ன செய்யலாம்? சென்னா செப்டம்பர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நாம் அக்டோபர் 2018 கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம்.  இனி 4110 என்பது வலிமையான தடைநிலையாகவும், கீழே 3935 என்பது முக்கியத் தடைநிலையாகவும் உள்ளது.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in