கடந்த 21-ம் தேதியன்று இந்தியப் பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி அளித்தன. யாருமே எதிர்பாராத அந்த ஒருசில நிமிடங்களுக்குள் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்குமேல் சரிந்தது. இந்தியாவின் மிகப் பெரிய, வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முக்கியமான டி.ஹெச்.எஃப்.எல் (திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம்) சில நிமிடங்களில் 50% அளவுக்குப் பங்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. நிஃப்டி நிறுவனங்களான, இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களின் பங்குகளும் பெருமளவு வீழ்ந்தன. இரண்டு வர்த்தக தினங்களில், 15 பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங் களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.75,000 கோடி வரை வீழ்ந்தது. சமீபகாலம் வரை, பங்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்துவந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் திடீர் சரிவுக்கான காரணங்கள் என்ன, பல்வேறு சிக்கல்களிலிருந்து அவை மீண்டுவர வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம்.

வங்கிகளின் வீழ்ச்சியும், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் எழுச்சியும்

கடந்த பல வருடங்களாகவே, பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் பொதுத்துறை வங்கிகளால் கடன் வழங்க முடிந்ததே தவிர, சிறிய அளவில் கடன்களை வழங்க முடியவில்லை. தவிர, வாராக் கடன் சுமையினால் தவித்துவந்த பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்குத் தேவையான மூலதனத்தையும் திரட்ட முடியவில்லை. இதனால் சமூகத்தின் ஒரு பகுதியினர் நகைக் கடன், கார் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை வாங்க முடியாமல் தவித்தனர்.

பதினைந்து ஆண்டுகளுக்குமுன்பு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள்மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது ரிசர்வ் வங்கி. பிற்பாடு பொதுத் துறை வங்கிகளால் செய்ய முடியாத சில காரியங்களை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலம் செய்வதற்காக அந்தத் துறை மீதான கட்டுப் பாடுகளைத் தளர்த்தியது. இதன்மூலம் நிதிச் சேவைகள் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டன.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் கடன் சந்தையில் குறைவாக இருந்த வட்டி விகிதத்தினால் நிதி நிறுவனங்கள் குறைந்த செலவில் நிதியைத் திரட்டியது, கடன் வழங்குதல் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது, தொழில்நுட்ப வளர்ச்சி, பொதுமக்களின் சேமிப்புப் பழக்கம் குறைந்து கடன் வாங்குவது அதிகரித்தது போன்ற சமூக, பொருளாதாரக் காரணிகள் நிதி நிறுவனங்களின் குறுகிய காலத்திய பிரமாண்ட மான கடன் வளர்ச்சிக்கு வித்திட்டன.

சமீபத்திய நிதி நிறுவனங்களின் சந்தை மதிப்பு பலமடங்கு உயர்ந்து, நூறாண்டு வரலாற்றையும், பல மடங்கு அதிக சொத்துகளையும் கொண்ட பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பையும் விஞ்சியது. பஜாஜ் ஆட்டோ, இந்தியா புல்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் நிஃப்டி இண்டெக்ஸில்கூட பங்கு பெற முடிந்தது.

ஐ.எல்&எஃப்.எஸ் – இந்தியாவின் லேமென் பிரதர்ஸ்?

ஐ.எல்&எஃப்.எஸ் குழுமத்தைச் சார்ந்த ஐ.எல்&எஃப்.எஸ் ஃபைனான்ஷியல் நிறுவனம் கடந்த மாதம் (ஆகஸ்ட் 2018) வணிகப் பத்திர (Commercial paper) முதலீடுகளை முதிர்வு நாளுக்குள் திரும்ப வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பல கடன் பத்திரங்களின் முதலீட்டையும் இந்த நிறுவனம் செலுத்தத் தவறியது.

சுமார் 90 நிறுவனங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ள ஐ.எல்&எஃப்.எஸ் குழுமம் பெற்றிருக்கும் மொத்தக் கடன் தொகை கிட்டத்தட்ட ரூ.90,000 கோடி. இந்தக் குழுமத்தின் தலைமை நிறுவனமான ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் ரேட்டிங் கடந்த இரண்டு மாதங்களில் ‘AAA’-விலிருந்து மூன்று முறை குறைக்கப்பட்டு, இறுதியாக, ‘திரும்ப வராத கடன்’ எனப் பொருள்படும் ‘D’ எனும் ரேட்டிங்கை இக்ரா (ICRA) நிர்ணயித்துள்ளது.

இந்தத் தொடர்ச்சியான ரேட்டிங் குறைப்பினால், பங்கு சந்தையில், ஐ.எல்&எஃப்.எஸ் குழுமப் பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளன.

இந்தியாவில் ‘கட்டமைப்பு ரீதியில் முக்கியமான (Sytemically Important)’ வங்கிசாரா நிதி நிறுவன மாக மத்திய ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டுள்ள ஐ.எல்& எஃப்.எஸ் நிறுவனத்தின் சிக்கல்கள் மற்ற வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மையையும் பெருமளவு பாதித்துள்ளது.

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் 11% என்ற இயல்பை மீறிய அளவில் வர்த்தகமான சில நிமிடங்களில் அந்தப் பங்கு 50% வரை வீழ்ச்சி அடைந்தன.

லேமென் வீழ்ச்சிக்குப்பின், உலகளாவிய வங்கிகள் மத்தியில் ஒரு பெரிய ‘நம்பிக்கையின்மை’ ஏற்பட் டதுடன், அதன் தொடர்ச்சியாக, வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைகள் தடைபட்டதும் மறக்க முடியாதது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், வங்கிசாரா நிதி நிறுவனத் துறையின் ஒட்டுமொத்தத் துறையின் ரேட்டிங்கும் குறைக்கப்படும் அபாயம் இருக்கும் காரணத்தால், நிதி நிறுவனங்கள் புதிய நிதியைத் திரட்டுவதில் பெருமளவு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன வேறுபாடு?

வங்கிகளுக்கும், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு எனப் பார்ப்போம். வங்கிகளினால் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வைப்புத் தொகையைப் பெற முடியும்; ஆனால், நிதி நிறுவனங் களுக்கு இது சாத்தியமில்லை.

வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் எப்போதும் ஏராளமான பண இருப்பு இருப்பதினால், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் இதரப் பொருளாதார மாற்றங்கள் வங்கிகளின் நிதி ஆதாரத்தைப் பெருமளவிற்குப் பாதிப்பதில்லை.

ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பத்திரங் களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆவர். நிதி நிறுவனங்களில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது வட்டி விகித மாற்றங்கள் இருந்தால், கடன்/முதலீடு பெறுவது சிரமமாவதுடன், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரமும் பெருமளவு பாதித்துவிடும்.

சமீபத்திய பொருளாதார மாற்றங்கள்

இந்தியா இறக்குமதி சார்ந்த ஒரு நாடு என்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் பெருமளவு நமது பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக, குறைவான கச்சா எண்ணெய் விலை யினால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தது டன், மத்திய அரசின் நிதிப் பற்றாக் குறையும் குறைவாகவே இருந்தது. பணவீக்கமும் பெருமளவு உயர வில்லை என்பதினால், கடன் சந்தையில் வட்டி விகிதம் மிதமாகவே இருந்தது.

வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறைந்த வட்டியில் நிதி ஆதாரங் களைத் திரட்டி தமது வாடிக்கை யாளர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுக்க முடிந்தது. வட்டி வித்தியாசம் ஆரோக்கியமாக இருந்ததால், சிறப்பான லாபத்தையும் அடைய முடிந்தது. ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக சீனாவிலிருந்து எலெக்ட்ரானிக் பொருள்கள் இறக்குமதி அதிகமா னது. அதேசமயம், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற போன்ற உள்நாட்டு சிக்கல்களால் ஏற்று மதியைப் பெருமளவிற்கு உயர்த்த முடியவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 25 பில்லியன் அளவிற்கு டாலரை சந்தையில் விற்பனை செய்ததினால் சுமார் 1,70,000 கோடி ரூபாய் சந்தையை விட்டு வெளியேறிவிட்டது. இந்த பணப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி, அரசு எடுத்த நடவடிக்கைகள் போதவில்லை. தற்போது பணப் பற்றாக்குறை அன்றாடக் கடன் சந்தையில் (Call Money Market) அதிகமானது.

அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்வதைத் தொடர்ந்து ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அந்த நாட்டு வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வால், அதிகரிக்கக் கூடிய பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிதித் துறையில் நம்பகத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய மத்திய நிதியமைச்சர், மியூச்சுவல் ஃபண்டுகளுக்குத் தேவையான நிதியை வழங்க ‘சிறப்பு சாளர முறை’ (Special Window) ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விரைவில் ஐ.எல்&எஃப்.எஸ் முதலீட்டாளர்களைச் சந்திப்பார்கள் என்றும், செபி தனியாக ரேட்டிங் ஏஜென்சிகளின் கூட்டத்தை நடத்தும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தில் மிக அதிகமான முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி-யின் தலைவர் தேவையான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். எஸ்.பி.ஐ வங்கியின் தலைவரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது நிறுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அனைத்து உறுதிமொழிகளும் மற்றும் நிதி உதவிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பிரச்னைகளைத் தற்காலிகமாக தள்ளிப்போடுமே தவிர, நிரந்தரத் தீர்வை வழங்க முடியாது. முழுமையான தீர்வு என்பது பொருளாதார சுழற்சி மற்றும் நிறுவனங்களின் வலுவான அடிப்படைகளைப் பொறுத்தே அமையும். மத்திய அரசு ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தைப் பல்வேறு வழிகளை உபயோகித்து காப்பாற்ற முனைவதில் ஒருவித நியாயமுண்டு. என்றாலும், நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ள பொதுத்துறை நிறுவனங் களுக்கு, அந்த நிறுவனத்தின் முறைகேடுகளில் பங்குள்ளதா என்பது பற்றியும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, ஐ.எல்&எஃப்.எஸ் போன்ற வங்கிசாரா நிதி நிறுவனங்களின் குறுகிய கால நிதிப் பற்றாக்குறைகளைப் பற்றி போதிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் தவறிய ரேட்டிங் ஏஜென்ஸிகள் மற்றும் சுயேச்சை இயக்குநர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் கவனம் அவசியம்

நிதி நெருக்கடி மற்றும் வட்டி விகித உயர்வு, நிதி நிறுவனங்களின் லாப விகிதத்தைக் கண்டிப்பாகப் பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறையாத வரையில் அதிக வட்டி விகிதத்துடன் கூடிய பணப் பற்றாக்குறை நீடிக்கும். நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களைக் கண்டறிவதும் சிரமமாகவே இருக்கும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நிர்வாகத் தலைமை மற்றும் இதர அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். கடன்/பங்கு மூலதனம் விகிதாசாரம் மிக அதிகமாக உள்ள நிறுவ.னங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் உள்ள நிறுவனங்கள் தப்பிப் பிழைப்பது மிகவும் கடினம்.

- சுமதி மோகனப் பிரபு

பிற நிறுவனப் பங்குகளுக்கும் ஆபத்து!

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் திறன் குறைய வாய்ப்புள்ளதால் பாதிக்கப்படக்கூடிய முக்கியமான துறைகள் ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட். பங்குச் சந்தையில் ஏற்கெனவே அசோக் லேலாண்ட், எய்ச்சர் மோடடார்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற கனரக வாகனத் துறைப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பங்கு முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது.

முன்பே எச்சரித்தது நாணயம் விகடன்!

பங்குச் சந்தை நிபுணரும், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான செளரப் முகர்ஜி, ‘காபிகேன் இன்வெஸ்ட்டிங்’ என்கிற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார். இந்தத் தொடரில் முதல் கட்டுரையிலேயே (9.9.18 தேதியிட்ட நாணயம் விகடன்) வங்கிசாரா நிதி நிறுவனப் பங்கு களை விற்றுவிடும்படி எச்சரித்திருந்தார். ‘‘மொத்தப் பணச் சந்தை யில் கடன் வாங்கி, சில்லறையாகக் கடன் தரும் நிதி நிறுவனங்களின் பங்குகளை விற்று வெளியேற வேண்டியிருக்கும்’’ என்று அவர் தெளிவாகச் சொல்லியிருந்தார். அவர் சொன்ன எச்சரிக்கையை உடனே பின்பற்றிய முதலீட்டாளர்கள் இன்றைக்கு பெரிய நஷ்டத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, மிகப்பெரிய நிதி நிறுவனமான ஐ.எல்.&எஃப்.எஸ். (Infrastructure Leasing & Financial Services Limited) நிறுவனம் ரூ.90,000 கோடி கடனில் சிக்கியதால், பங்குச் சந்தையில் வங்கிசாரா நிதி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஏன் இந்த நிலை, இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரபல பங்குச் சந்தை நிபுணரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ஐ.எல். & எஃப்.எஸ் நிறுவனம் ரூ.91,000 கோடி கடனில் சிக்கி உள்ளது. இந்த நிறுவனம், தனது துணை நிறுவனங்களின் உதவியுடன் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வாங்கிய கடன் தொகை ரூ.91 ஆயிரம் கோடி. இதில், ஐ.எல். & எஃப்.எஸ் மட்டும் 35,000 கோடி கடன் வைத்துள்ளது. இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி, குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

ஐ.எல்&எஃப்.எஸ். நிறுவனத்தில் சிட்பி (SIDBI), ரூ.1,000 கோடியை டெபாசிட் செய்துள்ளது. தற்போது சிட்பிக்குத் தரவேண்டிய தொகையைத் தரவில்லை. எனவே, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) வழக்கு தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்த நிறுவனத்தின் தரக்குறியீட்டை இக்ரா குறைத்தது. ரேட்டிங் குறைக்கப்பட்டதால், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் என்.ஏ.வி பெரிய அளவில் குறைந்துள்ளன. இந்தச் சரிவிலிருந்து இந்த ஃபண்ட் திட்டங்கள் மீளவேண்டும் என்றால், முதலில் கடன் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும். அல்லது அந்தப் பங்குகளை விற்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் பங்குகளை வாங்க யாருமில்லை. எனவே, எப்படியாவது இவற்றை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

டி.ஹெச்.எஃப்.எல், இந்தியா புல்ஸ் நிறுவனங்களின் பாண்டுகள் விரைவில் முதிர்வடையப் போகின்றன. அந்த மெச்சூரிட்டி காலம் வரும்போது பொதுமக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த பாண்டுகளை வாங்கினால் அதற்குரிய தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், யாரும் புதிதாக முதலீடு செய்ய முன்வரவில்லை.

இந்த நிலையில், டி.எஸ்.பி நிறுவனம், டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்தின் 300 கோடி மதிப்புள்ள குறுகிய கால பாண்டுகளைக் குறைந்த விலைக்கு விற்றது. இதை அடுத்து பங்குச் சந்தையில் பல்வேறு வதந்திகள் பரவியதால், சென்செக்ஸ் அதிரடியாக வீழ்ச்சி கண்டது. கூடவே, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு விலையும் வீழ்ச்சி கண்டது. லாப வரம்பு குறைந்ததால், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓராண்டு காலத்திற்கு இந்த நிலை தொடரக்கூடும் என்பதை முதலீட்டாளர்கள் மனதில்கொள்ள வேண்டும்.

தற்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மூலம் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மேலும் ஒரு வட்டி விகித உயர்வும், அடுத்த ஆண்டில் மேலும் மூன்று வட்டி விகித உயர்வும் இருக்குமென்று தெரிகிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் குறையாதவரைக்கும், லாபம் என்பது கேள்விக்குறிதான்.

இந்த நிறுவனங்கள் நான்கைந்து ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டன. தற்போது அந்த நிலை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தச் சரிவு இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும்.

இந்த சமயத்தில், முதலீட்டாளர்கள் வங்கிகளின் பங்குகளை வாங்குவதே நல்லது. யெஸ் பேங்க், கோட்டக் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க் போன்ற வங்கிகளின் பங்குகளை நிதானமாக வாங்கலாம். வங்கிகளின் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் வர்த்தகமாகி வருகின்றன. வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள்் மேலும்மேலும் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது” என்றார்.

- தெ.சு.கவுதமன்