Published:Updated:

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

முதலீடு

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

முதலீடு

Published:Updated:
காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

பிரான்சிஸ் ஃபுகுயமா (Francis Fukuyama) தன்னுடைய ‘தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அண்டு தி லாஸ்ட் மேன்’ என்னும் புத்தகத்தில், ஜனநாயகம் நிலைத்திருக்க மக்கள் அதன்மீது பகுத்தறிவு சாராத ஒரு பெருமையைக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும், அவர்கள் ஜனநாயகத்துடன் பெருமையுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கவும் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அவர்.

சாமுவேல் ஹண்டிங்டன் (Samuel Huntington) மற்றும் ஃபுகுயமா – தாராளவாதக் கொள்கைகொண்ட அரசியல்வாதிகளை வெகுவாகக் கடுப்பேற்றிய இரண்டு அரசியல் அறிஞர்கள் ஆவார்கள்.

சாமுவேல் ஹண்டிங்டன் எழுதிய ‘தி க்ளாஷ் ஆஃப் சிவிலைசேஷன் அண்டு தி ரிமேக்கிங் ஆஃப் தி லாஸ்ட் மேன்” என்ற புத்தகம் 1996-ம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய மாணவரான பிரான்சிஸ் ஃபுகுயமா எழுதிய ‘தி எண்டு ஆஃப் ஹிஸ்டரி அண்டு தி லாஸ்ட் மேன்’ என்ற புத்தகம் 1992-ம் ஆண்டிலும் வெளிவந்தது.

மனிதகுலத்தில் நாம் அனைவரும் நாகரிகம் அடைந்து விட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிந்தாலும், மிகப் பெரிய சுயநலமிகளாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பதால், கற்காலத்தில் காட்டில் வாழ்ந்த நாகரீகமில்லா மனிதனைப் போன்றே இன்றுவரை வாழ்ந்து வருகிறோம் என்று சொல்கின்றனர்.

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரைப் பார்த்து எப்போதுமே டென்ஷனாக இருப்பது இந்த ஆரம்பகால காட்டுவாசி போன்ற மனநிலையினால் மட்டுமே என்கின்றனர் அவர்கள்.

இந்த இரு அரசியல் அறிஞர்களுக்குப்பின்னால் வந்த பல அரசியல் அறிஞர்களும் நடத்தை அறிவியல் (பிஹேவியரல் சயின்ஸ்) மற்றும் பிக் டேட்டா அனாலிசிஸ் மூலமும்கூட இவர்கள் இருவரும் சொல்லியது சரியானது என்ற வாதத்தை ஆதரிக்கும் வகையிலான ஆராய்ச்சி முடிவுகளையே சொல்லியுள்ளனர்.

கிரிஸ்டோபர் ஆர்சென் மற்றும் லாரி பார்டெல்ஸ் (Christopher Achen & Larry Bartels) எழுதிய 2016 -ம் ஆண்டு வெளியான ‘டெமாக்ரசி பார் ரியலிஸ்ட்ஸ்: வொய் எலெக்‌ஷன் டு நாட் புரடியூஸ் ரெஸ்பான்ஸிவ் கவர்ன்மென்ட்; என்ற புத்தகத்தில், அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்குமுன்னால் தேர்தலில் அமெரிக்க மக்களின் வாக்களிக்கும் பாங்கு குறித்த புள்ளியியல் விவரங்களைக் கணக்கீடு செய்து மிக விரிவாக  எழுதியிருந்தனர்.

கடந்த கால ஓட்டுப்பதிவினை ஆராய்ச்சி செய்து பார்த்தால், அமெரிக்காவில் இருக்கும் இரண்டு கட்சி என்ற வகை தேர்தல்களில் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையேயான தேர்வு என்பது ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டால், பூ விழுமா அல்லது தலை விழுமா என்று எந்த அளவுக்குக் கணிக்க முடியுமோ, அதே அளவுக்குக் கணிக்கக்கூடிய அளவிலானதாகவே இருக்கிறது.

தேர்தலில் வாக்களித்து, தங்களுடையப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மக்கள் பலவிதமாக ஆராய்ச்சி செய்து, நல்லது கெட்டதைப் பார்த்து மற்றும் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, விவாதித்து எல்லாம் முடிவுகளை எடுப்பதுபோல் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

வாக்காளர்கள் அதிக மனச்சலனம் மிக்கவர்கள்.  அவர்கள் எந்தவித நீண்டநாள் யோசனையும் இல்லாமல், அப்போதைக்கு எது சரியென்றுபடுகிறதோ அதை வைத்தே வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அதிலும், அப்போதைக்குச் சரியென்றுபடுவதற்கு எந்தெந்த விஷயங்களை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்பதைக் கூட நாளடைவில் மறந்துவிடு கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை என்கின்றனர் இந்த அறிஞர்கள்.

நாம் இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

தங்கள் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு அதற்காகவே ஓடிக் கொண்டேயிருக்கும் சாமான்யர்கள், கொள்கை முடிவுகள் எதனால், எதற்காக, எப்படி எடுக்கப்படுகிறது என்று சற்றும் தெரியாத சாமான்யர்கள், கொள்கைக்காகக் கொடிபிடித்து தேர்தலில் நிற்கும் இரண்டு வேட்பாளர்கள் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே முடியாது. அது சாத்தியமும் இல்லை. அதிலும் கட்சி சார்ந்தவர்கள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்கள் என எக்கச் சக்கமானோர் தேர்தலின்போது எழுப்பும் சப்தத்தில் வரும் குழப்பத்தி லிருந்து தெளிந்தெல்லாம் தெளிவான முடிவெடுத்து வாக்களிக்க வாய்ப்பேயில்லை.

ஆசென் மற்றும் பார்டெல்ஸ் என்ற இருவரும் ஓட்டு சதவிகிதம் மற்றும் எண்ணிக்கையை வைத்து நாம் மனதின் உந்துதலால் வாக்களிக் கிறோமே தவிர, மூளையின் சிந்தனையால் அல்ல என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்துள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பின்வரும் இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

கடந்த கால வாக்களிப்பு முறையை வைத்துப் பார்த்தால், லேமேன் பிரதர்ஸ் திவாலுக்குப் பின்னால் அனைத்து நாடுகளிலும் அந்தச் சமயத்தில் இருந்த அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த நாட்டில் அதனால் பாதிப்பு இருந்ததோ இல்லையோ, பாதிப்பு மற்ற நாடுகளைவிட அதிகமோ குறைவோ லெமேன் பிரதர்ஸ் பிரச்னையாயிற்று. இந்த அரசாங்கம் சரியில்லை என்ற மனப்பாங்கே நிலவியது.

கச்சா எண்ணெய் அதிகமாக இருக்கும் அமெரிக்க மாகாணங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது பதவியில் இருந்த கவர்னர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது மிகவும் சுபிட்சமாக இருக்கும் மாகாணங் களின் கவர்னர்கள் பொருளாதாரம் நன்றாக இருந்தபோது மீண்டும் தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பொருளாதாரம் சரியாக இல்லாதுபோகும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப் பட்டுள்ளனர்.

இந்திய அரசியல் அறிஞர்களுமே வாக்களிப்பு எண்ணிக்கைகளை வைத்து கணக்குகளைப் போட்டு மிதமானதொரு முடிவுகளைச் சொல்லி யிருக்கின்றனர். மிலன் வைஷ்ணவ் (Milan Vaishnav) என்பவர் எழுதிய புத்தகமான வென் க்ரைம் பேய்ஸ்: மணி & மஸில் இன் இந்தியன் பாலிடிக்ஸ்’ என்ற புத்தகத்தில், ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு என்பது அவருக்குக் குற்றப்பின்னணி இருந்தால் அதிகமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு என்ன காரணம்? வெற்றிபெற்ற பிரதிநிதிகள் எந்த அளவுக்கு அதிகாரத் துஷ்பிர யோகம் செய்து சம்பாதிக்கின்றனரோ, அந்த அளவுக்கு அவர்கள் அவர்களைச் சுற்றி இருப்பவர் களுக்கும் ஏதாவது உதவியைச் செய்கின்றனர் என்பதால், வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க நினைக்கின்றனர் என்கிறார் மிலன் வைஷ்ணவ்.

எனவே, வேட்பாளரின் குற்றப் பின்னணி என்பது அதிகாரத் துஷ்பிரயோகம் நிச்சயமாகச் செய்வார் என்பதற்குச் சான்றாக இருப்பதாலேயே குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனலாம் என்றும் சொல்கிறார் அவர்.

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

எங்கெல்லாம் சட்டம் மிகவும் பலவீனமான தாக இருக்கிறதோ, சமுதாயம் பிரிந்தும் கிடக்கிறதோ, அங்கெல்லாம் அரசியல்வாதிகள் தங் களுடைய குற்றப் பின் னணியை வைத்து, பிரிந்து கிடக்கும் சமூகத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லியும், நியாயம் கிடைக்க ஏற்பாடு செய் கிறேன் என்று சொல்லியும், பாதுகாப்பு தருகிறேன் என்று சொல்லியும் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வது சுலபமாகிறது. இதனாலேயே குற்றப் பின்னணி உடையவர் களுக்கு வாக்களிப்பது வெகுசாதாரணமான  விஷய மாக மாறிவிட்டது.

சரி, முதலீட்டிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.

மேலே சொன்ன எதுவுமே தேர்தலுக்கு முக்கியமானதில்லை என்று வாதிடுவதற்காக இல்லை. தேர்தல் என்பது எதைச் செய்கிறதோ இல்லையோ, மக்கள் தங்கள் குரலை எழுப்ப மற்றும் அவர்களுடைய பிரச்னைகளை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

அதே சமயம், முதலீட்டுக்கான பார்வை என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்த்தோம் என்றால், தேர்தல் என்பது முடிவுகள் வெளிவரும்போது ஏற்படும் சில அதிர்வுகளைத் தாண்டி, பங்குச் சந்தைக்கு எதையுமே தந்துவிடுவதில்லை என்பதே உண்மை நிலையாகும்.

தேர்தல் முடிவுகள் வந்த வேகத்தில் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நீண்ட நாள்களுக்கு நிலைத்து நிற்பதில்லை. உதாரணத்திற்கு, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்கள் பதவியில் இருந்த காலத்தில் சென்செக்ஸ் தந்த வருமானத்தை ஆராய்ந்தால், அது 20% vs 8% (சி.ஏ.ஜி.ஆர்) என்ற அளவீட்டில் உள்ளது என்பதே தேர்தல் முடிவுகளுக்கும், சந்தைக்கும் பெரிய அளவிலான தொடர்புகள் மற்றும் பாதிப்புகள் என எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாய் இருக்கிறது.

ஆனால், பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் சந்தைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், சென்செக்ஸ் 58 சதவிகிதம் ரிட்டர்னைத் தந்துள்ளது. அந்நியச் செலாவணி மதிப்பு, வட்டி விகிதம் மற்றும் ஜி.டி.பி போன்ற மூன்று மேக்ரோ விஷயங்களின் அடிப்படையிலேயே இது நடந்துள்ளது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசு மாற்றங்களுக்கும் இடையே தொடர்ந்துவரும் ஒற்றுமை (கோ-ரிலேஷன்)  ஏதுமில்லை என்பது ஒரு கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.

இதனாலேயே முதலீட்டாளர்கள் பொருளா தாரத்தின்மீது தங்கள் பார்வையைப் பதிக்க வேண்டுமே தவிர, அரசியல் சூழல்மீது பதிக்க வேண்டியது அவசியமானது அல்ல.

நல்லவேளையாக, பொருளாதாரம் எப்படியெல்லாம் வளரும் என்பதைக் கணிப்பது என்பது,   அரசியலில் எத்தகைய மாற்றங்களெல்லாம் நிகழும் என்று கணிப்பதைவிட சுலபமானதாக இருக்கிறது!

(முதலீடு வளரும்)

- செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)