Published:Updated:

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?
பிரீமியம் ஸ்டோரி
மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

முதலீடுஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

முதலீடுஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்

Published:Updated:
மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?
பிரீமியம் ஸ்டோரி
மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

மேலே ஏறி செல்வதா அல்லது கீழே இறங்கி வருவதா என்கிற குழப்பத்துடனே ஊசலாடிக் கொண்டிருக்கிறது  இந்தியப் பங்குச் சந்தை. ரூபாய் மதிப்பின் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் போர் மேகம் சூழ்ந்திருப்பது போன்ற மேக்ரோ காரணிகள்தான் இந்தத் தள்ளாட்டத்துக்குக் காரணம் என்று சமாதானம் சொன்னாலும், பல நிறுவனப் பங்குகளின் விலை 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக இறங்கி, முதலீட்டாளர்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. 

இதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் வகையைச் சேர்ந்த பங்குகள்தான். சாதாரணமாகவே, சந்தை மேலே ஏறினால், ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்வதும், இறங்குவதற்கான அறிகுறி தெரிந்தாலே, உடனே தரை தட்டுவதும் இந்த வகை பங்குகளின் இயல்புகள். இந்த ஆண்டில் மட்டும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் விலை 20% - 70% வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. இவ்வளவு இறங்கியிருக்கிறதே, அப்படி யென்றால் இந்த வகைப் பங்குகளை,  இப்போது வாங்கலாமா என்றொரு கேள்வி, சிறு மற்றும் புது முதலீட்டாளர்கள் மனதில் எழும்.

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

பொதுவாகவே, பங்குச் சந்தை வணிகம் என்பது கடல் வழி பயணம் போன்றது. அதிலும், அனுபவம் இல்லாமல் இந்த வகைப் பங்குகளில், நேரடியாக  முதலீடு செய்வதென்பது, துணையாக யாருமின்றி, படகை தானே செலுத்தி, எதிர்வரும் அலை, திசை மாற்றும்  சுழல்,  அச்சுறுத்தும் கடல் வாழ் உயிரினங்கள் போன்ற தடைகள் அனைத்தையும், லாவகமாகக் கடந்து இலக்கை அடைவது போன்றது. அது எல்லோருக்கும் சுலபமல்ல.

அடுத்ததாக, விலை இறக்கம் கண்டுள்ள இந்த வகைப் பங்குகள் மீண்டும் தன் உச்ச விலையை அடையுமென்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. 

‘‘நீங்கள் ஆயிரம் சொன்னாலும், இந்த வகை பங்குகளின் மேல், எங்களுக்கு ஒரு பிடிப்பு இருக்கிறது, இதன் மிதமிஞ்சிய ஏற்றத் தாழ்வுகளை அறிவோம். ஒரு சிறிய எதிர்மறை செய்திகூட, இந்தப் பங்குகளின் விலையில் கடுமையான சரிவை ஏற்படுத்தும் என்பதும் தெரியும்.

ஆனால், நீண்ட கால முதலீடு தான், எங்கள் இலக்கு (குறைந்த பட்சம் 7 முதல் 10 ஆண்டுகள்). எனவே, ஓரளவு பாதுகாப்புடன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மூலம் எங்கள் செல்வ வளத்தினைப் பெருக்க, வேறு ஏதேனும் மாற்று வழி உண்டா?’’ என்று கேட்டால், அதற்கான பதில் இனி. 

அதிக ரிஸ்க் மற்றும் நிலையற்ற தன்மை  கொண்ட இவ்வகை பங்குகளில் நீண்ட காலத்தில் முதலீடு செய்து, நம் செல்வ வளத்தினை, பெருக்க ஒரே  சிறந்த வழி. கடந்த 10 ஆண்டுகளில், நன்றாகச் செயல்பட்டுவரும், அதிக வருமானமும் தந்துள்ள, மிட்கேப் மற்றும்   ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் அவற்றை அணுகுவதுதான். அதாவது,  நாம் தனியே மேற்கொண்ட, அதே கடல் வழிப் பயணத்தை ஓரளவு பாதுகாப்புடனும் (Stocks Diversification), திறம்படச் செயல்படும் அனுபவம் வாய்ந்த மாலுமிகளின் (Fund Managers) வழிகாட்டுதலோடும், சிறந்த கப்பலில் (Best Funds) பயணித்து நம்முடைய இலக்கை அடைவது போன்றதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில், ஃபண்ட் மேனேஜர்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் ஒரு நிறுவனப் பங்கினை வாங்கும்முன், அதன் தரம், மதிப்பு, நிர்வாக மேலாண்மை, வணிக நோக்கம், எதிர்காலத்தில் வரக்கூடிய வருமான வாய்ப்பு போன்றவற்றைக் கவனமாக ஆராய்கிறார்கள்.

ஒவ்வொரு மாத இடைவெளியிலும் அதன் செயல்பாடு, ரேங்கிங் பட்டியலில் பெறும் இடம், சக நிறுவனங்களின் முனைப்புகள், போட்டிகள் என அனைத்தையும் அலசி ஆராய்வதால், நீண்ட காலத்தில் இந்த மியூச்சுவல் ஃபண்டுகள், நல்ல வருமானம் தர வாய்ப்புள்ளது.

மேலும், இவை அதிக உணர்ச்சி கொந்தளிப்பு கொண்ட பங்கு சார்ந்த ஃபண்டுகள் என்பதால்,  கையிலுள்ள பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதைவிட, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) அல்லது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்பதை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டியது அவசியம். 

இதனால், சந்தையின் ஏற்ற இறக்கங்களில் அதிகம் பாதிக்காமல், நல்ல வருமானம் அல்லது கூடுதல் யூனிட்கள் என இரண்டில் ஒன்றைப் பெற்று, நீண்ட கால நோக்கில் நிறைந்த லாபம் பெறமுடியும்.

இப்போதைய பலவீனமான நாணய மதிப்பு மற்றும் பலவீனமான சந்தையின் சூழ்நிலை, கிட்டத்தட்ட 2013-ம் ஆண்டினைப்போல் உள்ளது. இத்தகைய அழுத்தமான சூழலானது,  நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, சிறந்த நுழைவு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல, கடந்த சில வருடங்களாக, மிட்கேப், ஸ்மால்கேப் பங்கு சார்ந்த  ஃபண்டுகளில்  எல்லாவிதமான முதலீட்டையும் நிறுத்தி வைத்திருந்த சில மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங் கள், தற்போது முதலீட்டாளர்கள், புதிய  முதலீட்டைத் தொடங்க, தங்கள் வாயிலைத் திறந்து வைத்துள்ளனர்.

மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா?

இன்றைய சூழ்நிலையில்,  இதை முதலீட்டாளர் களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டி.எஸ்.பி ஸ்மால் கேப் ஃபண்ட், எல்&டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ஆகியவை கடந்த செப்டம்பர் 3, 2018-லிருந்தும், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்  மே 16, 2018-லிருந்தும், ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்ட் மே 7, 2018-லிருந்தும்  புதிய முதலீட்டினைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன. (குறிப்பு:   டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்டுகளில் மொத்த முதலீட்டிற்கு மட்டும் தற்போதைய நிலையில் அனுமதியில்லை)

ஆதலால், அதிதீவிர முதலீட்டாளர்கள், தங்களின் வயது, காத்திருப்பு காலம், காத்திருக்கும் பொறுமை, முதலீட்டின் நோக்கம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு இத்தகைய பங்கு சார்ந்த ஃபண்டுகளில், முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

இதர முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட் ஃபோலியோவில் 10% என்ற அளவில் இவற்றிற்காக ஒதுக்கி  முதலீடு செய்யத் தொடங்கினால், நீண்ட காலத்தில் உங்கள் போர்ட்ஃபோலியோவின் வருமானத்தைச் சமன் செய்யவும், லாபத்தை உயர்த்தவும் உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism