இண்டெக்ஸ்

இந்த செப்டம்பர் மாதம் முழுவதுமே இந்தியப் பங்குச் சந்தை முற்றிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததையும், திடீர் சரிவு ஏற்பட்டதையும் நாம் பார்த்தோம். நிஃப்டி முக்கிய சப்போர்ட் லெவலான 10900-ஐ தக்கவைத்துக் கொள்வதைப் பார்க்க முடியாமல் போனால், வருகிற நாள்களில் சந்தையில் சில நெகட்டிவ் போக்குகள் உருவாகும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகவே இது இருக்கும்.

சந்தையில் காணப்பட்ட சீரான போக்கு இந்த மாதத்தில் திடீரென முற்றிலும் தலைகீழாக மாறியதையும், கடந்த சில வாரங்களாக நாம் பார்த்ததைவிட அதிகமாக அதாவது, 900 புள்ளிகளுக்கும் அதிகமாக நிஃப்டி சரிந்ததையும் பார்க்க முடிந்தது. ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம், வலுவான ஏற்ற போக்கில் தடையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தையின் தொடர் சரிவு மற்றும் பலவீனமான தொடக்கம் போன்றவை, அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் களை ஆரம்பம் முதலே எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்ற வைக்கும்.

வலுவான ஏற்றத்தைக்கண்ட பேங்க் நிஃப்டி போன்ற மற்ற குறியீடுகள், முக்கியமான ஆதரவு நிலைகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கே போராடுவதை நாம் பார்க்கிறோம். வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பங்கு விலைச் சரிவு, வங்கி மற்றும் அது தொடர்புடைய துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி, பரவலான வீழ்ச்சிக்கு வழிவகுத்து விட்டது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் ஐ.டி துறை பங்குகள் பயன் அடைந்தன என்றாலும், அது ஓர் ஏற்றத்துக்கான உற்சாகமாக இல்லாமல் போனதால், இந்தத் துறையின் உற்சா கமான ஏற்றத்தைத் தடுத்துவிட்டது.

தற்போதைய சூழலில், பல பங்குகள் அதிக விற்பனையாகும் நிலைக்கு நுழைந்திருப்பதால், ஹை-பீட்டா பங்குகளை வாங்குவதற்கான சந்தர்ப்ப மாகக் கருதி, அவை எப்போது சரியும் என்பதைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதிக கால அளவுகொண்ட சார்ட்டுகள், செப்டம்பர் மாதத்தில் கண்ட மிகப் பெரிய வீழ்ச்சியைக் குறிப் பிடுகின்றன. பங்குகளின் விலையில் அதிக ஏற்றமோ அல்லது இறக்கமோ இல்லாத காலத்துக்குள் நம்மால் நுழைய முடியும் என்பதுடன், நிஃப்டி 50% ரீட்ரேஸ்மென்ட் லெவலைப் பின்பற்றி பயணித்து, 10880 புல்பேக்குக்கு ஆதர வளிப்பது, வாங்குவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்பதால், நிஃப்டியை டிராக் செய்துவரலாம்.

மேலும், பேங்க் நிஃப்டிகூட திடீர் வீழ்ச்சியைக் கண்டதுடன், தற்போதைக்கு 24700 லெவல் சப்போர்ட் ஆக உள்ளது. அடுத்த வாரம் நம்மை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்கிற அளவுக்கு, குறிப்பிட்ட சில பங்குகளின் செயல்பாடுகள் இருக்கலாம்.

இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி (INDHOTEL)

தற்போதைய விலை: ரூ.136.90

வாங்கலாம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த சில வாரங்களாக ஏறத் தொடங்கி இருக்கின்றன. இதன் விலையில் சில பலவீனங்கள் இருந்தாலும் வாராந்திர சார்ட்டில் பெரியதொரு கேண்டிலை உருவாக்கியுள்ளது. பாசிட்டிவ் டைவர்ஜன்ஸ், பங்கு விலையில் சாதகமான மாறுபாட்டை முன்கூட்டியே காட்டுகின்றன.

தற்போது கடந்த சில நாட்களாக இந்தப் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த பிரேக்அவுட் வெற்றிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் பங்குகளை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.125 வைத்துக்கொள்ளவும். அடுத்த சில வாரங் களில் பங்கின் விலை ரூ.160 வரை உயரக்கூடும்.

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் (EXIDEIND)

தற்போதைய விலை: ரூ.265.45

வாங்கலாம்

இந்த வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனப் பங்குகள், கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து வந்தது. இதனையடுத்து லாப நோக்கம் கருதி அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விலை ரூ.250-க்கு இறங்கியது. இது வாங்கும் ஆர்வத்தைத் தூண்டியது. இதேபோல கடந்த ஏப்ரல், மே மாதங்களிலும் காணப்பட்டது. இந்த சப்போர்ட் லெவலிலிருந்து ஏறக்கூடும். தற்போதைய விலையில் அல்லது ரூ.250-க்கு இறங்கும் வரை இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.240-க்குக் கீழே வைத்துக் கொள்ளவும். இலக்கு விலை ரூ.300.

ஆயில் இண்டியா (OIL)

தற்போதைய விலை: ரூ.219.55

வாங்கலாம்

எரிசக்தித் துறை நிறுவனப்க் பங்குகள் கடந்த சில வாரங்களாகப் பெரிய சரிவைக் கண்டபின் தற்போது ஏற்றம்கண்டு வருகிறது. இந்த நிறுவனப் பங்கு, 2018 -ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சீரான சரிவைக் கண்டு, தற்போது அதிலிருந்து மீள்வது தெரிகிறது. சில தொடர் முயற்சிகளின் காரணமாக விலை ஏற்றம்கண்டு, வாங்கத் தூண்டும்படி கவர்ச்சிகரமாக உள்ளது. 61.8% பலமான ஃபிபனோசி ஆதரவுடன் இதன் விலை நல்லதொரு மீட்சியைக் காட்டுகிறது. சாதகமான சூழல் தெரிவதால், பங்கு விலைப் நல்ல ஏற்றம் பெறுமெனத் தெரிகிறது. 205 ரூபாய்க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். இன்னும் மூன்று மாதங்களில் ரூ.245-க்கு உயரும் என எதிர்பார்க்கலாம்.

- டாக்டர் சி.கே. நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.