Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம், பங்குச் சந்தைக்கு எதிராக நகரும் என்பது பொதுவான பார்வை. ஆனால், தற்போது பங்குச் சந்தை இறங்கும்போது, கூடவே தங்கமும் இறங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2018 இரண்டாம் வாரம் சுமார் 30184 என்ற புள்ளி வரை இறங்கியபிறகு ஒரு வலிமையான ஏற்றத்தில் தங்கம் இருந்தது. இந்த ஏற்றம் செப்டம்பர் 2018-ன் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்தது. இந்தத் தொடர்ச்சியான ஏற்றமானது அதிகபட்சமாக 30936 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு தங்கம் மாறியது. இந்த பக்கவாட்டு நகர்வானது, கீழே 30400-ஐ ஆதரவாகவும், மேலே 30950-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வந்தது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இது போன்ற நகர்வை டெக்னிக்கல் அனாலிசிஸ் படிப்பில், டிஸ்டிரிபியூஷன் என்பார்கள். அதாவது, ஏற்கெனவே சந்தை ஏற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள், விலையை இறங்கவிடாமல் பிடித்துக்கொண்டு, தாங்கள் ஏற்கெனவே வாங்கியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுவிட்டு, சந்தையை விட்டு வெளியேறுவார்கள். அதன்பின் விலை வீழ்ச்சியடையும்.
   
தங்கம் தொடர்ந்து 30400 என்ற எல்லையைத் தக்கவைத்துக்கொண்டுதான் இருந்து வந்தது. ஆனால், கடந்த வாரத்தின் நகர்வு, அதை உடைக்கவும் செய்தது.  அதாவது, சென்ற வாரம் திங்கள் முதல் புதன் வரை தங்கமானது இந்தப் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையை ஒட்டியே நகர்ந்து வந்தது. 

ஆனால், வியாழன் அன்று ஒரு கடுமையான இறக்கத்தைச் சந்தித்தது. இதனால், 30738 என்ற புள்ளியில் இருந்து இறங்க ஆரம்பித்து, இறுதியில் 30356 என்ற புள்ளியைத் தொட்டது. எனவே, இதுவரை காத்துவந்த 30400 என்ற எல்லை உடைக்கப்பட்டது. தற்போது 30400 என்ற புள்ளி களுக்கு மேலே நிறுத்த காளைகள் எல்லா முயற்சியையும் எடுக்கிறார்கள். அதேசமயம், கரடிகள் 30400ஐ உடைத்து புதிய இறக்கத்தைத் தொடக்க முயற்சி செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? அக்டோபர் 5-ம் தேதி நடப்பு கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால்,  நாம் அடுத்த மாத கான்ட்ராக்ட்டான நவம்பர் 5ம் தேதி முடிவுக்கு வரும் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தங்கம் ஆதர-வை உடைத்து இறங்க முயற்சிக்கும் இந்த வேளையில், கீழே 30150 என்ற மிக முக்கிய ஆதரவு ஆகும். மேலே        30400-க்கு மேல் காளைகள் விலையை நகர்த்த முடிந்தால், அது அடுத்தகட்டமாக 31000 வரை நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

வெள்ளி தங்கத்தின் நகர்வுக்கு சம்பந்தப்படாத வகையில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.  தங்கம் ஆகஸ்ட் 2018 இரண்டாம் வாரத்தில் இருந்து செப்டம்பர் 2018 இரண்டாம் வாரம் வரை ஏறிக் கொண்டு இருந்தவேளையில், வெள்ளியானது, ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஆயிரம் புள்ளி களுக்கு இடையே சுழன்று வந்தது. கீழே 36600-ம் மேலே 37600-ம் எல்லைகளாகக் கொண்டு பக்கவாட்டில் நகர்ந்தது.  ஆனால், சென்ற வார தொடக்கத்தில் தங்கம் பக்கவாட்டில் இயங்க, வெள்ளி ஏறி 38433 என்ற அதிகபட்ச புள்ளியைப் தொட்டு, பின்பு கொஞ்சம் இறங்க ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? தற்போது வெள்ளி 37200 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 38300 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

 கச்சா எண்ணெய்,  ஆகஸ்ட் மாதம் 2018 இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது.  சென்ற வாரம் இந்த உச்சத்தைத் தொட்டபின் கொஞ்சம் தயங்கி நின்றுகொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாள்களாக அதிகளவில் டோஜி உருவமைப்பு தோன்றி, ஏற்றத்தில் உள்ள தயக்கத்தை காட்டுகிறது.

இனி என்ன நடக்கலாம்? வலிமையான ஏற்றத்தைக் கண்டுள்ள கச்சா எண்ணெய் 5130 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 5320 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism