Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன்

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில், குறுகிய காலத்தில் மிகப் பெரிய நகர்வுகளைக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். டிசம்பர் 2017-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சமாக 2018-ஐ தொட்டது. இந்தப் பலமான ஏற்றத்திற்குப்பிறகு, படிப்படியாக இறங்கி, ஒரு பலமான இறக்கத்திற்கு வழிவகுத்தது.

இந்த இறக்கம் செப்டம்பர் 2018 வரை தொடர்ந்தது. கீழே குறைந்தபட்ச புள்ளியாக 1111-ஐ தொட்டது.  கிட்டத்தட்ட பாதி விலைக்கு இறங்கியது.  அதன்பின், மீண்டும் ஏற்றப் பாதையில் தொடர்ந்து ஏற ஆரம்பித்தது.  செப்டம்பர் 2018-ல் அதிகபட்ச புள்ளியாக 1837 என்ற புள்ளியைத் தொட்டது. ஆக, மென்தா ஆயில் என்பது ஒரு ரோலர்கோஸ்டர் ஏற்ற இறக்கங்களை எல்லாக் காலகட்டத்திலும் கொண்டிருந்தது. அது தற்போதும் விதி விலக்கல்ல. 

டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, பார்க்கும்போது 29.09.201 -8ல் உச்சமாக 1832 என்ற புள்ளியைத் தொட்டு இறங்கியபின், 10.09.2018 அன்று அதே புள்ளிகளுக்கு அருகில் சென்று, சற்றே தாண்டி 1837 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது. அதன்பின், இறங்க ஆரம்பித்தது. இதைத்தான் ‘டபுள்டாப்’ என்று அழைப்போம். இந்த உருவமைப்பு, ஏற்றம் முடிந்து இறக்க ஆரம்பிப்பதைக் காட்டும் அறிகுறி ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

‘டபுள்டாப்’ உருவ அமைப்பைத் தோற்றுவித்தபின், கடைசி ஆதரவான 1710-ஐ உடைத்திறங்கியது. இந்த எல்லை உடைத்தபின் முந்தைய உச்சமான 1830-ம், ஆதரவான 1710-க்கும் உள்ள இடைவெளியே அடுத்தக் கட்ட இலக்காக மாறலாம். அந்த வகையில் 1830 – 1710 = 120 புள்ளிகளாகும்.   1710-ஐ உடைத்து 120 புள்ளிகள் இறங்கினால், இலக்கு 1600 ஆகும். இந்த இறக்கம் கீழே 1612 வரை இறங்கியது. இது இலக்கைத் தொட்டதுக்குச் சமமாகும். அதன்பின் தற்போது ஒரு புல்பேக் ரேலியில் மூலம் ஏற ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்…? மென்தா ஆயில் புல்பேக் ரேலி மூலம் ஏற ஆரம்பிக்கும்போது, 1600 என்ற ஆதரவை எடுத்துதான் ஏறுகிறது.  எனவே, அந்த எல்லை ஆதரவாகவும், மேலே முந்தைய ஆதரவான 1710 இனி தடைநிலையாகவும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

மென்தா ஆயில் ஏற்றம் இறக்கம் என்று இரண்டுவகை நகர்வுகளையும் கொண்டு இருக்கும்போது, காட்டன் தொடர்ந்து கீழ்திசையில் இறங்கிக்கொண்டு இருக்கிறது ஆகஸ்ட் 2018-ன் முதல் வாரத்தில் 24280 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, படிப்படியாக இறங்கி வருகிறது.  இது ‘லோயர் டாப்’ மற்றும் ‘லோயர் பாட்டம்’ என்று டெக்னிக்கல் அனாலிசிஸ் படிப்பில் சொல்வதுபோல், தொடர்ந்து இறங்கி வருகிறது.  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ஒவ்வொரு முறையும், இறக்கத்தின்போது வரும் புல்பேக்ரேலிகூட மிகக்குறைந்த அளவிலேயே நிகழ்வதால், இறக்கம் மிக வலிமை யானதாகவே மாறி வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 23240 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, கீழே திரும்பி மிக மிக வலிமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் 22550 என்ற புள்ளியில் இருந்து செங்குத்தாக இறங்கி 21840 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டுள்ளது.
இனி என்ன செய்யலாம்? காட்டன் கடுமையாக இறங்கிய நிலையில் 21690 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவு ஆகும். மேலே 22280 என்பது உடனடித் தடைநிலையாகவும உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சென்னா

மென்தா ஆயிலும், காட்டனும் போட்டி போட்டுக் கொண்டு இறங்கிக்கொண்டு இருக்கும்போது, சென்னா விலை மட்டும் வலிமையான ஏற்றத்தில் கடந்த வாரம் இருந்தது. சென்னா ஆகஸ்ட் 2018 மூன்றாம் வாரத்தில் 4362 என்ற உச்சத்திலிருந்து இறங்கி, கீழே 3754 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. சென்ற வாரம் இந்த பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையான 3980-ஐ உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்துள்ளது. கடைசியாக 4104 என்ற உச்சத்தையும் தொட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்? சென்னா நன்றாக  ஏறி உள்ள நிலையில், இனி 4115 என்பது வலிமையான தடைநிலையாகவும், கீழே 3925 என்பது முக்கியத் தடைநிலையாகவும் உள்ளது.

- தி.ரா.அருள்ராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism