Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

பிரீமியம் ஸ்டோரி

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகக் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முழுவதுமே இண்டெக்ஸும், தனிப்பட்ட பங்குகளும் கண்மூடித்தனமான வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அதிர்ச்சியுடன் பார்த்தோம். ஆனால், பங்குகள் மிகத் தீவிரமாக விற்கப்படுவதைப் பார்த்தால், அக்டோபர் மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்திலும்கூட அந்தப் போக்கு முடிவுக்கு வருமா என்று தெரியவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லாபத்தில்தான் பங்குகளை விற்பேன் என்று பங்குகளை விற்காமல் வைத்திருந்தவர்கள் (பெரும்பாலானோர் செய்வது அதுதானே!), பயங்கரமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். குறைந்த விலைக்கு பிற்பாடு வாங்கலாம் என்ற நோக்கில் பங்குகளை விற்றவர்கள் (short trade) நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தொடர்ந்து ஐந்தாவது வாரமாக ஏற்பட்ட வீழ்ச்சியைச் சிறிது நேரம் உணர முடியாத அளவுக்கு அது வேகமாகவும், தீவிரமாகவும் இருந்ததால், அதன் வலி பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் வழக்கம்போல் வேகமாகச் சரிந்தாலும், இந்த முறை லார்ஜ்கேப் பங்குகள்கூட சரிவிலிருந்து தப்ப முடியவில்லை.

பங்கு வர்த்தகத்தில் ஒருவிதமான ஒழுங்கையும் கடைப்பிடிக்காதவர்கள். எந்த வகையில் அதைச் செய்திருந்தாலும் சந்தை அவர்களை வேகமாகத் தண்டிக்கவே செய்தது. பெரிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஓரிரு நாளிலேயே 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவைச் சந்தித்தன. இது, சந்தையின் உணர்வை மோசமாகப் பாதித்துள்ள நிலையில், நிலைமை சரியாக இன்னும் கணிசமான நாள்கள் ஆகலாம். 

கடந்த வார இறுதியில் நிஃப்டி, வெளிப்படை யாகவே 78.6 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் லெவலில் பேங்க் நிஃப்டியுடன் சேர முடிவெடுத்தது. இந்த முக்கியமான ஆதரவு ரீட்ரேஸ்மென்ட் லெவலில், செப்டம்பர் மாதம் பேங்க் நிஃப்டி செங்குத்தாக சரிவடைந்தபோதிலும், கடந்த வாரத்தில் நிஃப்டியை சிறிது நேரம் தூக்கிப் பிடித்திருந்தது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதுபோன்ற தீவிரமான சூறாவளி வீசும்போது,  ஆதரவுக்காக டெக்னிக்கல் லெவல்களைத் தேடுவது மடத்தனமான செயலாக இருக்கும். ஏனெனில், அவை எல்லாமே அடித்துச் செல்லப்பட்டுவிடும். எனவே, இந்தச் சூறாவளி வேகம் குறையும்வரை காத்திருந்து, அதன் பின்னர் என்ன செய்வது என்று பார்க்கலாம். ஆகவே, தற்போதைக்கு நிலைமையைக் கண்காணித்துக் காத்திருப்பதே நல்லது.

இன்ஃபோ எட்ஜ் இந்தியா (NAUKRI)

தற்போதைய விலை: ரூ.1,433.35

வாங்கலாம்

கடந்த வாரத்தில் சந்தை இறக்கத்தையும் தாண்டி ஏற்றம் கண்ட பங்குகளில் இன்ஃபோ எட்ஜ் இந்தியாவும் ஒன்றாகும். தினசரி சார்ட்டில் இதன் பங்கு விலை, லோயர் அவுட் கேண்டில் பேட்டர்னை உருவாக்கியிருக்கிறது. 62% ரீட்ரேஸ்மென்ட் காணப்படுகிறது. வெள்ளி நல்ல வலுவான கேண்டில் மூலம் மேல்நோக்கி ஏறியுள்ளது. இதன்மூலம் சந்தை மோசமாக இறங்கியிருந்தாலும் இந்த நிறுவனப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பதை அறிய முடிகிறது. எதிர்பார்த்த ஆதரவு இருப்பதால், தற்போதைய விலையில் வாங்கலாம். பங்கின் விலை, புதிய வேகத்துடன் ரூ.1,550 என்ற இலக்கை நோக்கிச் செல்லக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,390 வைத்துக்கொள்ளவும். 

ஃபைன் ஆர்கானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (FINEORG)

தற்போதைய விலை: ரூ.1,020.35

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனப் பங்குகள், சந்தை சரிவதற்கு ஏற்றத்துடன் செயல் பட்டது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, அதிகமாக அறியப்படாத பங்காக இருப்பினும் இதன் விலை இறக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த வாரம் பங்குச் சந்தை பெரிதாக வீழ்ந்த போதிலும், இந்தப் பங்கு நிலைப்புத்தன்மையோடு உள்ளது. காளைகள் மிகவும் வலுவாக இருப்பதை இது காட்டுகிறது.  சந்தை நல்ல நிலையை அடையும் போது இதன் பங்கு விலையில் நல்லதொரு உயர்வைக் காணலாம். குறைந்த ரிஸ்க்கோடு தற்போதைய விலையில் வாங்க லாம். இலக்கு விலை ரூ.1,220.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் (HCLTECH)

தற்போதைய விலை: ரூ.1,084.00

வாங்கலாம்

சந்தை இறக்கத்தைச் சந்தித்த சூழலிலும் தொழில் நுட்ப நிறுவனப் பங்குகள், பாதுகாப்பான இடத்திலேயே இருக்கின்றன. முன்னணியில் உள்ள பங்குகளில், இந்த ஹெச்.சி.எல் நிறுவனப் பங்கு தற்போது கவர்ச்சிகரமான நிலையில் காணப்படு கின்றன.

பங்கின் விலை, அதிகபட்ச உச்சத்தை அடைந்தபிறகு அதன் அருகே நிலைத்தன்மையோடு இருப்பதைக் காணமுடிகிறது. விரைவில் சந்தை மீளும்போது  விலை ஏற்றம் காணும் என  எதிர்பார்க்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,040 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.1,300.

டாக்டர் சி.கே. நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு