Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், டிரேடர்களுக்கு ஏற்ற வகையில் வலிமையான ஏற்றங்களையும், இறக்கங்களையும் கொடுத்து வருகிறது.  ஒரு வியாபாரியாக, தாங்கள் வியாபாரம் செய்யும் கமாடிட்டி பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையும் உங்களுக்கு இருக்கவேண்டும். அதைத்தான் நாம் ‘பிக் பிக்சர்’ என்று அழைக்கிறோம். 

அந்த வகையில் மென்தா ஆயில் விலை நகர்வைப் பார்க்கலாம்.   மென்தா ஆயில் 2017 ஜூன் மாதத்தில் 870 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்தது. 2017 ஜூலை மாத முடிவில் 1065 என்ற உச்சத்தைத் தொட்டு, அதை உடைக்க முயற்சி செய்தது. இந்த எல்லைதான் அப்போதைய முக்கியமான தடைநிலை ஆகும்.

இந்தத் தடையையும் உடைத்து, 2017 ஆகஸ்ட் மாதத்தில் 1230 வரை சென்றது. அதன்பின், தொடர்ந்து ஏறவும் முடியாமல், இறங்கவும்  முடியாமல் 1065 என்ற ஆதரவையும், மேலே 2030 என்ற தடைநிலையையும் கொண்டு சில காலம் இயங்கியது. 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

2017 அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 2030 என்ற தடையை உடைத்து மிக வலிமையான ஏற்றத்தைக் கொண்டு ஏற ஆரம்பித்தது.  இந்த ஏற்றம் வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் என்று தொடர்ந்து ஏறி, 2017 டிசம்பர்  முதல் வாரத்தில் உச்சமாக 1991-ஐ தொட்டது. அதுதான் இன்றுவரை உச்சம். 

இந்த உச்சத்தைத் தொட்டபின், ஏறிய வேகத்திலேயே தொடர்ந்து இறங்கி, 2018 மே மாதத்தில் குறைந்தபட்ச புள்ளியாக 1146-ஐ தொட்டது. நாம் கொடுத்துள்ள புள்ளிகள் மீண்டும் மீண்டும் ஆதரவாகவோ அல்லது தடைநிலையாக மாற வாய்ப்புண்டு. 

அதன்பின் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறி, பின் மீண்டும் வலிமையான ஏற்றத்தில் 2018 அக்டோபர்் முதல் வாரத்தில் 1814 என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. மீண்டும் பழைய உச்சத்தைத் தொடுமா, அல்லது அதையும் தாண்டுமா என்று பார்க்கவேண்டும்.

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் புல்பேக் ரேலி மூலம் ஏற ஆரம்பிக்கும்போது 1600 என்ற ஆதரவை எடுத்துத்தான் ஏறுகிறது. எனவே, அந்த எல்லை ஆதரவாகவும், மேலே முந்தை ஆதரவான 1710 இனி தடைநிலையாகவும் இருக்கலாம்.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவான 1600 என்ற எல்லையானது தக்கவைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று ஒரு கேப்அப் மூலம் 1635 என்ற புள்ளியில் தொடங்கி அதன் அருகிலேயே முடிந்தது.
தொடர்ந்து தினமும் ஒரு கேப்அப்பில் தொடங்கி மெள்ள மெள்ள ஏறி, நாம் தந்திருந்த தடைநிலையான 1710-ஐ உடைத்து வலிமையான ஏற்றத்தில் உள்ளது. இந்தத் தொடர் ஏற்றத்தில், தற்போது தடைநிலை அருகில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்? வலிமையான ஏற்றத்தில் உள்ள மென்தா ஆயில் 1765 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.  அதேநேரம், முன்பு தடைநிலையாக இருந்த 1710 என்பது உடனடி ஆதரவாகவும், 1685 முக்கிய ஆதரவாகவும் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

சென்ற வாரம் சொன்னது… “காட்டன் கடுமையாக இறங்கிய நிலையில், 21690 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவு ஆகும்.  மேலே 22280 என்பது உடனடித் தடைநிலையாகவும உள்ளது.”

காட்டன் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். 2018 ஆகஸ்ட் மாதத்தில்  28400 என்ற அதிகபட்ச எல்லையில் இருந்து மெள்ள மெள்ள இறங்கி 21690 வரை இறங்கியது. இந்த ஆதரவைத் தக்கவைத்துள்ளது.  இந்த நிலையில்தான், காட்டன் கடந்த வாரம் இறக்கத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக, ஏறுவதற்கான முயற்சி நடந்தும் அது ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.
இனி என்ன செய்யலாம்? தற்போது 22180 என்ற எல்லையை முக்கியத் தடைநிலையாகக் கொண்டுள்ளது. கீழே 21690 என்ற எல்லை இன்னமும் ஆதரவு நிலையில் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் நவம்பர் கான்ட்ராக்ட்டில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்னது… “சென்னா நன்கு ஏறியுள்ள நிலையில், இனி 4115 என்பது வலிமையான தடை நிலையாகவும், கீழே 3925 என்பது முக்கியத் தடை நிலையாகவும் உள்ளது.”

சென்னாவுக்கு நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4115-ஐ உடைத்து 4239 வரை ஏறியுள்ளது.  டிரேடர்களுக்கும் நல்ல வியாபாரம் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்ல ஏற்றத்திற்குப்பின் ஒரு தயக்கத்தில் உள்ளது.

தற்போது உடனடித் தடைநிலை 4245 ஆகும். கீழே ஆதரவுநிலை முந்தைய தடைநிலையான 4115 ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு