Published:Updated:

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?
ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தை சரிவில் இருக்கிறது. நிஃப்டி 10400 புள்ளி களுக்குக் கீழே சென்றால், 10000 புள்ளிகள் அளவுக்குக்கூட இறங்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இந்த நிலையில், நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்களா என்று கேட்டிருந்தோம். இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டாளர்களின் மனப்போக்கினை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 41% பேர் முதலீடு செய்வேன் என்று சொல்லியிருக்கிறார்கள். பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும். குறித்த காலத்துக்கு ஒருமுறை சந்தைகள் இறக்கம் காண்பதைத் தவிர்க்க முடியாது. இந்த இறக்கம் மோசமான பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்தால், அது சரியாகும் வரை பொறுமை காக்கலாம். ஆனால், இப்போது வந்துள்ள இறக்கம் பொருளாதாரத்தின் சில சீர்கேடுகளால் வந்துள்ளது. இது குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் இவர்கள் ‘முதலீடு செய்வேன்’ என்று சொல்லியிருப்பது பங்குச் சந்தைமீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

சந்தை சரிந்துவரும் இன்றைய நிலையில், முதலீடு செய்ய மாட்டேன் என 21% பேர் சொல்லி யிருக்கிறார்கள். சந்தைமீது இவர்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இவர்களின் கருத்து உணர்த்துகிறது.

ஆனால், 38% பேர் பொறுத்திருந்து முதலீடு செய்வேன் என்று சொல்லி யிருப்பது சரியான அணுகுமுறை என்று கருதலாம். சந்தை தொடர்ந்து இறங்கிக்கொண்டே இருக்கப்போவதில்லை. இப்போதுள்ள பிரச்னை சரியான பிறகு மீண்டும் உயரத் தொடங்கும். அதுவரை கொஞ்சம் பொறுத்திருந்து முதலீடு செய்வேன் என்று சொல்லி யிருப்பது ஆரோக்கியமான விஷயமாகும்.

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

சரியான பங்குகளை வாங்கி, நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், அதன்மூலம் கிடைக்கும் வருமானம் வேறெந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் மறக்கக்கூடாது!

- ஏ.ஆர்.கே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு