Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

பிரீமியம் ஸ்டோரி

இண்டெக்ஸ்

முடிவடைந்த வாரத்தில், சந்தையின் முக்கிய அம்சமாக இருந்ததே ஏற்ற இறக்கம்தான். திங்கள்கிழமையின் பலவீனமான தொடக்கம், மேலும் இழப்புகளுக்கான தொனியை ஏற்படுத்தியது. ஆனால், புதன்கிழமை திடீர் ஏற்றத்துடன் கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, ஒவ்வொருவரையும் பங்குகளை வாங்குவதற்காக ஓட வைத்தது. ஆனால், அவர்களை முற்றிலும் வியப்படைய வைக்கும் விதமாக, வியாழக்கிழமையன்று பங்குச் சந்தையின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட சரிவு, அனைத்து பங்குகளையுமே அதை நோக்கியே இழுத்துச் சென்றது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அனைத்துப் பங்குகளும் தெளிவான நிலைக்குச் சென்ற பின்னர், வெள்ளிக்கிழமையன்று சந்தை ஏற்றத்தை நோக்கிச் செல்ல தீர்மானித்ததைப் போன்று காணப்பட்டதோடு, நிஃப்டி 10400 லெவல்களை மீண்டும் ஒருமுறை சோதிப்பதற்காகத் திரும்பியது. வார இறுதியில், நாம் உண்மையிலேயே ஒரு சிறிய வரம்புக்குள் இருப்பது போன்று தோன்றினாலும், நீடித்த ஏற்ற இறக்கமான போக்கு நம்மை அவ்வாறு நம்பிக்கைக்கொள்ள வைக்கவில்லை. சற்று நேரத்துக்கு, சந்தையே காணாமல் போய்விட்டது போன்றுதான் அது காணப்பட்டது.

எனவே, வார சார்ட்டுகளில் ஐந்து தொடர்ச்சி யான பேரிஷ் வர்த்தக நாள்களுக்குப் பின்னர்,  கேண்டில்களின் சரிவு அமைப்பில் நமது வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதாகி விட்டது. வியாழக்கிழமையன்று இண்டெக்ஸ் ஏற்படுத்திய அதலபாதாள நிலை, ஓர் ஏற்றமான கட்டத்துக்கு முன்னர் நிஃப்டி 10140 என்ற அளவுக்குச் சரிவை ஏற்படுத்தியது. இந்த லெவல்களில், பங்குகளின் விலையானது மன்த்லி சப்போர்ட் ட்ரெண்ட்லைன், கேன் பிரைஸ் சைக்கிள் லெவல்களுக்குச் சரிந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (RSI, தினசரி சார்ட்டுகளில் ஒரு டைவர்ஜென்ஸ் பேட்டர்னை பதிவு செய்தது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் காணப்பட்ட பயத்துடன்,  சென்டிமென்ட் மிகவும் மோசமாகக் காணப்பட்டதால், லாங்க் பொசிஷன்களின் பங்குகள் பரவலாக வியாபாரத்தை முடித்துக் கொண்டன. இதனால், சரிவுக்குக் காரணமான அனைத்துக் கூறுகளும் தற்போதும் இருக்கின்றன என்பதால், தற்போதைய லெவல்களிலிருந்து சந்தை ஏற்றத்தை நோக்கிச் சென்றே ஆக வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போதைய பிரச்னையே நல்ல செய்திகள் இல்லாததுதான். மாநிலங்கள் மற்றும் பொதுத் தேர்தல்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாத மத்தியிலிருந்து நிறுவனங் களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கும். நொறுங்கிப்போன உணர்வுகளைச் சரி செய்துகொள்ள சந்தை, சற்று அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். எனவே, இந்த மாதத்தின் கடைசி வரைக்கும் சில வரம்புக்கு உட்பட்ட விலையில் நமது வியாபார நடவடிக்கைகளை வைத்துக்கொள்ளலாம். பின்னர், செய்திகளின் வரத்தைப் பொறுத்து, சந்தையின் போக்குகள் ஏற்றத்தை நோக்கிச் செல்லலாம். சந்தையின் குறியீடுகளின் அடிப்படையில் நீண்ட கால வர்த்தகத்தைச் செய்யலாம். அதேசமயம், கடுமை யான விலைச் சரிவைச் சந்தித்தப் பங்குகளை, குறுகிய கால முதலீட்டுக்காக வாங்கலாம். 

இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெர்ரோ அல்லாய்ஸ் (IMFA)

தற்போதைய விலை: ரூ.274.10

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீண்ட சரிவினை இந்த நிறுவனப் பங்கு சந்தித்துள்ளது. தற்போது ஃபிபனோசி  கிளஸ்டர்களின் கலவை பேட்டர்னை எட்டியுள்ளது. இது 78.6% அளவிற்கு மீண்டெழுகிறது. பங்கு அதிக விற்பனை மண்டலத்தில் உள்ளது. பங்கின் விலையில் தற்போதைய நிலையிலிருந்து தொடர்ச்சியான ஏற்றம் ஏற்படக்கூடும். இந்த விலையில் ரிஸ்க் குறைவாக உள்ளதால் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.260 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.300.

மஸ்டெக் (MASTEK)

தற்போதைய விலை: ரூ.472.10

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி துறையைச் சேர்ந்த மிட்கேப் பங்குகளில் சீரான போக்கு காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில பங்குகளைக் கவனமாகப் பார்க்க வேண்டி யுள்ளது. அவற்றின் நீண்ட கால சார்ட்களையும் பார்த்துத்தான் எந்தப் பங்கு சிறந்ததெனத் தீர்மானிக்க முடியும். சமீபத்தில் அனைத்து பங்குகளும் இறக்கம் கண்டுள்ள சூழலில் மஸ்டெக் நிறுவனத்தின் காலாண்டு சார்ட்டைப் பார்க்கையில் விற்பனையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவில்லையென்பது தெரிகிறது. பங்குகளின் விலை, தொடர்ச்சியான பல வட்ட வடிவ பேட்டர்ன்களுக்குப் பிறகு ஏறி வந்துள்ளது. இதன் வாராந்திர சார்ட்டில் வலுவாக மீண்டுவரும் கேண்டில்களைப் பார்க்க முடிகிறது. மீண்டும் மேலே ஏறுவதுபோல் இதன் போக்கு உள்ளது.  தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம்.  ஸ்டாப்லாஸ் ரூ.455 வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை ரூ.600-ஐ தாண்டக்கூடும்.

தம்பூர் சுகர் மில்ஸ் (DHAMPURSUG)

தற்போதைய விலை: ரூ.156.55

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த சில வாரங்களாக சர்க்கரை விலை அதிகரித்திருப்பதால் சர்க்கரை ஆலை நிறுவனப் பங்குகள் மீண்டும் ஏற்றம் பெற்று வருகின்றன.  மேலும், கச்சா எண்ணெய் விலை, பெட்ரோலியப் பொருள்கள் விலை தொடர்ந்து உச்சத்திலிருப்பது, சர்க்கரை கழிவிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் கலவைக்கு அதிக தேவையை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, சர்க்கரை நிறுவனப் பங்குகள் விலை தொடர்ந்து உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  சர்க்கரை நிறுவனப் பங்குகளில் தம்பூர் நிறுவனப் பங்கு விலை பிரேக் அவுட்டாகி வலுவான ஏற்றத்தைக் காண்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ரூ.140  ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.200.

 - டாக்டர் சி.கே. நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

 தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு