Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி

தங்கம் (மினி)

டந்த வாரத்தின் இடையே இந்தியப் பங்குச் சந்தை வலிமையாக இறங்கியது. அதற்கு எதிர்மறையாக தங்கம் ஏறவேண்டுமே என்பது பொதுவான அம்சம். ஆனால், அதற்காகக் காத்திருந்தபோது, கடந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் தங்கம் ஏறாமல் அமைதியாக இருந்துவிட்டு, வாரக் கடைசியில் வியாழனன்று பலத்த ஏற்றத்தைக் காட்டியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. 

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் உடனடித் தடைநிலை 31680 ஆகும். இதை உடைத்தால் அடுத்து மிக வலிமையாக ஏறி, 32000 என்ற எல்லையையும் உடைக்கலாம். கீழே 31030 என்பது உடனடி ஆதரவு ஆகும்.”

தங்கம், நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 31030-ஐ கடந்த வாரம் முழுவதும் தக்கவைத்துக்கொண்டது. கடந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் தங்கம் குறுகிய எல்லைக்குள் சுழன்றது. ஆனால், வியாழனன்று பலமாக ஏறி நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31680-ஐ வலிமையாக உடைத்து 31815 என்ற உச்சத்தைத் தொட்டது.

ஆனால், சென்ற வாரம் வெள்ளியன்று பங்குச் சந்தை மிக பலமாக ஏறியதால், தங்கம் தற்போது ஒரு தயக்கத்தைக் காட்டி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

இனி என்ன நடக்கலாம்? 

தங்கம் வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு, 31880 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு வருகிறது. கீழே 31340 என்ற எல்லை உடனடி ஆதரவாக உள்ளது.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘வெள்ளியானது ஒரு தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, மேலே 39480 என்ற எல்லையில் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது; கீழே 38120  புள்ளிகள் என்பது முக்கிய ஆதரவு ஆகும்.”

தங்கம் சென்ற வாரம் ஒரு வலிமை காட்டி ஏறினாலும்கூட, வெள்ளி அந்த அளவுக்கு ஏற்றத்தைக் கொடுக்கவில்லை.

கடந்த வாரம் முழுவதும், வெள்ளி, நாம் கொடுத்திருந்த 38120 என்ற ஆதரவு நிலையையும் உடைத்து இறங்கவில்லை. அதேசமயம் தடைநிலையான 39480 என்ற தடைநிலையைத் தாண்டி ஏறவும் இல்லை.
ஆனாலும், கடந்த வியாழன் அன்று தங்கம் பலமாக ஏறியபோது வெள்ளியும் 38451 என்ற புள்ளியில் இருந்து 39060 என்ற புள்ளி வரை சற்றே ஏற்றத்தைக் காட்டியது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி, தற்போது ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்வில் உள்ளது. மேலே 39480 என்ற எல்லை இன்னமும் தடையாகவும், கீழே 38500 என்பது உடனடித் ஆதரவாக உள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 5700-ஐ தடைநிலையாகவும், கீழே 5400-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.”   

கச்சா எண்ணெய்,  சென்ற வாரம் முதல் மூன்று நாள்கள் பக்கவாட்டு நகர்வுக்குள் இருந்தது. வியாழனன்று தங்கம் ஏறியது, வெள்ளியும் ஏறியது. ஆனால், கச்சா எண்ணெய் நாம் கொடுத்திருந்த ஆதரவான     5400-ஐ உடைத்து வலிமையாக இறங்கியது.

இந்த இறக்கம் 5251 வரை தொடர்ந்தது. இதன் பிறகு ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்கிறது.

இனி என்ன நடக்கலாம்?

கச்சா எண்ணெய் நல்ல இறக்கத்திற்குப் பிறகு 5160 என்பதை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 5480 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகக் கொண்டுள்ளது.’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஒரு தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, இறங்குமுகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.  கடந்த செப்டம்பர் 2018-ல் உச்சமாக 1814-ஐ தொட்டபின், மெள்ளமெள்ள இறங்கிவருகிறது.

 இந்த இறக்கம் செப்டம்பர் மாத முடிவில் 1596 என்ற புள்ளியில் முடிந்தது. இதற்குப் பிறகு ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “வலிமையான ஏற்றத்தில் உள்ள மென்தா ஆயில் 1765 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.  அதேநேரம், முன்பு தடைநிலையாக இருந்த 1710 என்பது உடனடி ஆதரவாகவும், 1685 முக்கிய ஆதரவாகவும் உள்ளது.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1765 என்ற எல்லையைத் தாண்டவில்லை. அதேசமயம் நாம் கொடுத்திருந்த ஆதரவான 1685 என்ற முக்கிய ஆதரவைத் தக்கவைத்துள்ளது.

திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாள்களில் படிப்படியாக ஏறி உச்சமாக 1752 என்ற புள்ளியைத் தொட்டது. அதன் பின் ஏறிய வேகத்திலேயே வியாழன் மற்றும் வெள்ளியன்று இறங்கி, ஆரம்பித்த புள்ளிக்கே திரும்பி வந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

 வலிமையாக மேலே தடுக்கப்பட்டு இறங்கிய நிலையில் தற்போதைய முக்கிய ஆதரவு 1666 ஆகும். இதை உடைத்தால் வலிமையாக இறங்கலாம். மேலே 1765 இன்னமும் முக்கிய தடைநிலை ஆகும்.’’

காட்டன்

சென்ற வாரம் சொன்னது… “தற்போது 22180 என்ற எல்லையை முக்கியத் தடைநிலையாகக் கொண்டுள்ளது. கீழே 21690 என்ற எல்லை இன்னமும் ஆதரவு நிலையில் உள்ளது.”

காட்டன் கடந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 22180-ஐ உடைத்து மெள்ள ஏற ஆரம்பித்தது. கடந்த வாரம் திங்களன்று 22220 என்ற புள்ளியிலிருந்து ஏறி 22360 என்ற உச்சத்தைத் தொட்டது. அடுத்த நாள், 22460 என்ற உச்சத்தைத் தொட்டது. 

ஆனாலும், புதன் மற்றும் வியாழனன்று பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், வெள்ளியன்று மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்து அதிகபட்சமாக 22770 என்ற புள்ளியைத் தொட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்? 

காட்டன் பலமாக ஏறிய நிலையில் 22800 என்ற எல்லை தடைநிலையாகவும், கீழே 22340 என்பது முக்கிய ஆதரவாகவும் உள்ளது.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்டிராக்ட் நடப்பில் இருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தற்போது உடனடித் தடைநிலை 4245 ஆகும். கீழே ஆதரவு நிலை முந்தைய தடைநிலையான 4115 ஆகும்.”

சென்னா, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4245-ஐ தாண்ட முடியாமல் வாரத்தின் துவக்கத்திலிருந்தே இறங்க ஆரம்பித்தது. 

திங்கள், செவ்வாய் மற்றும் புதன் மூன்று நாள்களும் இறங்கி குறைந்தபட்சமாக 4141 என்ற எல்லையைத் தொட்டது. அதன்பின் அதே எல்லையை ஆதரவாக எடுத்துக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தாலும்  4230 வரை சென்று மீண்டும் இறங்கி உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

 சென்னா இன்னமும் 4245 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே  4130 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு