“சபரிமலை விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன..?” - சரியாக மாலை நான்கு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக் வாட்ஸ்அப் செய்தியை வாசித்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டார். “சாமி விவகாரத்தை விடுங்க... சந்தை விவகாரத்துக்கு வாங்க...” என அவரை நம் சப்ஜெக்ட்டுக்கு இழுத்துவந்து, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். இனி நம் கேள்விகளும், அவரது பதில்களும்...

ரிலையன்ஸ் பங்கு குறித்து தரகு நிறுவனங்கள் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளனவே?

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 17.35% அதிகரித்துள்ளது. இந்த நிறுவன வரலாற்றில், இந்தக் காலாண்டில்தான் இந்த அளவுக்கு அதிக நிகர லாபம் கிடைத்துள்ளது. இந்த லாபம் அதிகரிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் மற்றும் பிராண்ட் பேண்டின் சிறப்பான செயல்பாடுதான் காரணம். அதே சமயம், அடுத்த ஆறு மாத காலத்துக்கு இது கட்டாயம் நீடிக்கும் என டச்சு வங்கி தெரிவித்து உள்ளது.

டென் மற்றும் ஹாத்வே நிறுவனங்களின் பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ கையகப்படுத்தி யுள்ளது. அதன் பிராண்ட் பேண்ட் பிசினஸுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும், இதனால் இந்த நிறுவனத்தின் எபிடா மார்ஜின் 2018-20-ம் நிதியாண்டுகளில் 27% அதிகரிக்கும் என்றும் அந்த வங்கி மேலும் கூறியுள்ளது.”

தற்போதைய பங்குச் சந்தை சூழலில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை வாங்கலாமா?

“கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக போர் போன்ற மேக்ரோ காரணிகளில் மாற்றம் இல்லையென்பதால், குறியீடு அடிப்படையில் முதலீடு செய்ய முடிவெடுப்பது சற்று கடினமானது.

ஆனாலும், கடந்த 10-15 தினங்களாகச் சந்தையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள், அதன் பதற்றத்தைச் சற்றுத் தணித்துள்ளது. சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதையும், ரூபாய் மதிப்பும் 63-லிருந்து 74-ஆக உயர்ந்தபின், அதில் ஒரு நிலைத்தன்மை ஏற்பட்டதையும் காண முடிகிறது.

இத்தகைய நிலையில், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளை வாங்கும்போது, நிறுவனத்தின் ஒட்டு மொத்த வலிமை மற்றும் குணங்களை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யும் ‘பாட்டம் அப்’ முறையைப் பின்பற்றுவதே நல்லது. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு சூழ்நிலைக்குத் தக்கவாறு விவேகமான முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களே, லாபம் ஈட்டுவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.”

டிமார்ட் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதே!

“டிமார்ட் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டதிலிருந்து கடந்த 18 மாதங்களாக ஏறுமுகத்திலேயே இருந்துவந்தது. 2018-ல் மட்டும் 12% ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்த நிலையில், அந்த ஏற்றம் கரெக்ஷனுக்கு உள்ளானது. இந்த நிறுவனத்தின் மொத்த லாப வரம்பு இரண்டாம் காலாண்டில் 15% என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 13 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த பத்து காலாண்டுகளில் மிகவும் குறைவாகும். இதனையடுத்து அந்தப் பங்கின் விலை ஒரே நாளில் வர்த்தகத்தின் இடையே 7% குறைந்தது.”

செப்டம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பங்கு முதலீடுகள் எப்படி இருந்தது?

“பங்குச் சந்தையைப் பதறவைத்த செப்டம்பர் மாதத்தில், நிஃப்டி 6.4% சரிவடைந்தபோது, முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், மிகவும் தேர்ந்தெடுத்த பங்குகளையே தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்தன.

அடுத்த 2 - 3 காலாண்டுகளுக்கு நல்ல வருவாய் வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட தரமான நிறுவனங்களின் லார்ஜ்கேப் பங்குகளை மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாங்கின. குறிப்பாக, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.டி.சி, டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகளை அதிகம் வாங்கின. மேலும், லார்சன் அண்டு டூப்ரோ இன்ஃபோடெக், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் மற்றும் ஐ.ஜி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கு களிலும் முதலீடு செய்தன. அதேசமயத்தில், லார்சன் அண்டு டூப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துள்ளன.”

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறதே?

“இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே சர்வதேச அளவில் நிதிச் சந்தைகள் பலவீனமான நிலையிலேயே இருந்துவந்தன. அது, தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச அளவில் காணப்படும் இறுக்கமான பணப்புழக்கம் காரணமாக, நிலைமையைச் சமாளிக்க வளரும் நாடுகள் கடன் வாங்கி வருகின்றன. அப்படி வாங்கும் கடன்கள் டாலர்களில் வாங்கப்படுவ தாலும், வாங்கும் கடனுக்கான வட்டியை டாலராகக் கட்டுவதாலும் டாலருக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், இந்தியாவில் கரன்சி அளவுக்கு அதிகமாக விற்கப்பட்டுவிட்டதால், டாலருக்கு நிகரான அதன் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. எப்படி ஆயினும், அடுத்த சில ஆண்டுகளுக்கு ரூபாய் மதிப்பு, ஆண்டுக்கு 5 - 10% வரை சரிவடையும். வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ உயர்த்தா விட்டால், ரூபாய் மதிப்பு மேலும் சரியும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.”

ஆனால், நிறுவனப் பங்குகளில் ஃபண்டுகளின் முதலீடு அதிகரித்துள்ளதே?

“பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டபோதிலும், அக்டோபரில் முதல் இரண்டு வாரங்களில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் ரூ.11,000 கோடிக்குப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இத்தனைக்கும், அந்நிய முதலீட்டாளர்கள், இந்தக் காலகட்டத்தில் ரூ.19,000 கோடி முதலீடுகளைத் திரும்ப எடுத்துள்ளனர். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

செப்டம்பரில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.10,825 கோடிக்கு முதலீடுகளை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.11,600 கோடிக்கு முதலீடு செய்துள்ளன. கடந்த வாரத்திலும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவரும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகின்றன. இல்லையென்றால் சந்தை இன்னும் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் என அனலிஸ்ட்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.”

கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

“இந்தியக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டு காலாண்டுகளுக்கு மேல் பெரிய அளவில் தாக்கம் எதையும் ஏற்படுத்தாது என முன்னணிப் பங்குத் தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ கூறியுள்ளது.”

வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் தர மதிப்பீட்டை மூடிஸ் குறைத்துள்ளதே?

“ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் நிதிச் சிக்கல், செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடயே (என்.பி.எஃப்.சி) நீண்ட நாள்களாகக் காணப்படும் இறுக்கமான நிதிப் புழக்கம், தொடரும்பட்சத்தில், அது அந்த நிறுவனங்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் மதிப்பீட்டைக் குறைத்துவிடுவதுடன், பொருளாதாரத்தின் போக்கிலும், நிதித் துறையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் எனப் பன்னாட்டு தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

இறுக்கமான நிதிப் புழக்கம் தொடரும்பட்சத்தில், என்.பி.எஃப்.சி-கள் கடன் வழங்குவதைக் குறைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால், கடன் விநியோகம் பாதிக்கப்படும். கடன் சந்தையில், என்.பி.எஃப்.சி-கள் கணிசமான சந்தை பங்களிப்பைக் கொண்டிருப்பதால், வீட்டுக் கடன், சொத்தின் பேரில் கடன், நுகர்வோர் கடன் போன்ற வற்றை வழங்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளது” என்றவர், ‘‘சந்தையில் முதலீடு செய்ய அற்புதமான வாய்ப்பு உருவாகி வருகிறது; கையில் பணத்தை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பங்குகளை வாங்கக் காத்திருக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார் ஷேர்லக்!

ரானா கபூரிடமிருந்து போனஸைத் திரும்பக் கேட்கும் யெஸ் பேங்க்!

யெஸ் பேங்க் நிர்வாக இயக்குநரும் சி.இ.ஓ-வுமான ரானா கபூரின் பதவிக்காலம் 2019, ஜனவரி மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கக்கோரும், அந்த வங்கியின் நிர்வாகக் குழுவின் வேண்டுகோளை ரிசர்வ் வங்கி நிராகரித்துவிட்டது. அத்துடன், ரானா கபூரின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு எதிராக சில கருத்துகளையும் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ரானா கபூர் பெற்ற இரண்டாண்டு சம்பள போனஸைத் திரும்பப் பெற வேண்டும் என யெஸ் பேங்கின் நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 2017-18-ம் நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டுக்கு ரானா கபூரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது!

- ஷேர்லக், ஓவியம்: அரஸ்