பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகள் இங்கே...

டி.சி.பி வங்கி

டி.சி.பி வங்கியின் நிகர லாபம் 25% அதிகரித்து, ரூ.73 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.146

கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 17% அதிகரித்து, ரூ.282 கோடியாக உள்ளது. செலவு வருமான விகிதம் 1.38% அதிகரித்து, 58.88 சதவிகிதமாக உள்ளது. வழங்கப்பட்ட நிகர கடன்கள் 2018 செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, ரூ.22,069 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி 1.84 சதவிகிதமாக இருக்கிறது.

இண்டஸ்இண்ட் வங்கி

செப்டம்பர் மாதத்துடன் முடிவ டைந்த இரண்டாவது காலாண்டில், இந்த வங்கியின் நிகர லாபம் 25% வளர்ச்சி அடையலாம் என அனலிஸ்ட்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக வெறும் 5% வளர்ச்சியுடன் ரூ.920 கோடியை மட்டுமே நிகர லாபமாக ஈட்டியுள்ளது. அதாவது, பங்கு ஒன்றுக்கு ரூ.15.17-யை லாபமாக ஈட்டியுள்ளது.

நிகர லாபம் குறைந்ததற்கு, ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வாராக் கடனை ஈடுசெய்ய, வங்கியின் செயல்பாட்டு லாபத்தி லிருந்து ரூ. 275 கோடியை ஒதுக்கியதே காரணமாக அமைந்தது. அதேசமயம், வாராக் கடன் விகிதம் (1.09%), கிட்டத்தட்ட முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த விகிதத்திலேயே (1.08%) இருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் கடன்கள் 35% வளர்ச்சியையும், சில்லறைக் கடன்கள் 29% வளர்ச்சியையும் எட்டியுள்ளன.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

வீட்டுக் கடன் களுக்கான தேவை அதிகரிப்பால், இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 21% அதிகரித்து, ரூ.1,044 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டியதைவிட ரூ.861 கோடி அதிகரித்துள்ளது. அதேபோல, கடன்கள் 28.9% அதிகரித்து, ரூ.1.28 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தக் காலாண்டின் இறுதி மாதத்தில் அதாவது, செப்டம்பர் மாதத்தின் கடைசி 10 தினங்கள் மட்டுமே, சற்று மந்தமான நிலை காணப்பட்டதாகவும், மற்ற நாள்களில் சிறப்பான செயல்பாடுகள் காணப்பட்டதாகவும் அந்த வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அஷ்வினி ஹூடா தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், இரண்டாவது காலாண்டில் ரூ.4,110 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3,726 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 10.3% அதிகமாகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 4.2% அதிகமாகும். அதேபோல, செயல்பாடுகள் மூலமான வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால், 17.3% அதிகரித்து, ரூ.20,609 கோடியை எட்டியுள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப்

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், இரண்டாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.976.3 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால், இது 3.4% சரிவாகும்.

அதேசமயம், அனலிஸ்ட்டுகளின் மதிப்பீடான ரூ.944 கோடியைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் வருவாய், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8.6% அதிகரித்து, ரூ.9,090.9 கோடியை எட்டியுள்ளது. அனலிஸ்ட்களின் மதிப்பீடு ரூ.9,030 கோடியாக இருந்தது. வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 5.5% அதிகரித்து 21.3 லட்சமாகக் காணப் படுகிறது.

கிரைசில் லிமிடெட்

தரமதிப்பீட்டு நிறுவனமான கிரைசில், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டையே நிதியாண்டாகப் பின்பற்றுகிறது. இந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.90.01 கோடியை ஈட்டியுள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 69.42 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது 30% அதிகமாகும். அதேபோல, செயல்பாடுகள் மூலமான ஒருங்கிணைந்த வருவாய் 4% அதிகரித்து, ரூ.425.46 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.409.71 கோடியாக இருந்தது.

ஃபெடரல் வங்கி

ஃபெடரல் வங்கியின் இரண்டாவது காலாண்டுக்கான நிகர லாபம், 0.9% அதிகரித்து ரூ.266 கோடி ரூபாயாக உள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததாலேயே, நிகர லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று நிகர வருவாய், 13.7% அதிகரித்து ரூ.1,022.5 கோடி யாக உள்ளது. இதற்குக் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரித்ததே முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாராக் கடன் முந்தைய காலாண்டில் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது, 3.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமேட்டிவ்

வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.42.57 கோடி யாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.24.4 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 74.1%அதிகம். அதேபோல, செயல்பாடுகள் மூலமான வருவாய் ரூ.652.4 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஈட்டிய ரூ.539.3 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 21.7% அதிகமாகும். மேலும், 2018-ம் ஆண்டின் முதல் 9 மாதங்கள் கணக்கில் ஈட்டிய நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ஈட்டிய ரூ.58.7 கோடியைக் காட்டிலும் அதிகரித்து, ரூ.124.9 கோடியை எட்டியுள்ளது.

சக்தி பம்ப்ஸ்

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இதன் ஒருங்கிணைந்த வருவாய், ரூ.9.27 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3.02 கோடியாக இருந்தது. அதேபோன்று வருவாய், முந்தைய ஆண்டில் ஈட்டிய ரூ.67.7 கோடியைக் காட்டிலும் அதிகரித்து, ரூ.138.7 கோடியாக அதிகரித்துள்ளது.

என்.ஐ.ஐ.டி டெக்

மென்பொருள் நிறுவனமான என்.ஐ.ஐ.டி டெக், இரண்டாவது காலாண்டில் ஒருங்கிணைந்த லாபமாக ரூ.111.8 கோடியை ஈட்டியுள்ளது. முதலாவது காலாண்டில் ஈட்டிய ரூ.85.8 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 30.3% அதிகமாகும். அதேபோல, ஒருங்கிணைந்த வருவாய், முதலாவது காலாண்டைக் காட்டிலும் 10% அதிகரித்து, ரூ.907.4 கோடியை எட்டியுள்ளது. வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரிப்புக்கு, புதிதாகக் கிடைத்த 160 பில்லியன் டாலர் மதிப்பிலான பிசினஸ்தான் காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- பா.முகிலன்