தங்கம் (மினி)

பங்குச் சந்தை இனி இறங்குமுகம்தான் என்ற முடிவுக்கு பெரும் பாலானவர்கள் வந்தால், பணமானது தங்கத்தை நோக்கி நகரலாம். தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் தெளிவில்லாமல் இருப்பதால், தங்கம் சிலசமயம் வலிமையாக ஏறினாலும், அதனால் தொடர்ந்து ஏற முடியவில்லை.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, 31880 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு வருகிறது. கீழே 31340 என்ற எல்லை உடனடி ஆதரவாக உள்ளது.”

தங்கம் கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடை நிலையான 31880-ஐ திங்களன்று உடைத்தது. அதன்பின் வலிமையாக ஏறி உச்சமாக 32075 என எல்லையைத் தொட்டது. இந்த வலிமையான ஏற்றம் நிகழ்ந்தாலும்கூட, அன்று தங்கத்தால் அந்த உச்சத்தைத் தக்கவைக்க முடியவில்லை. மாறாக, அன்றே இறங்கி 31877 என்ற எல்லையில் முடிவடைந்தது. இது ஏறக்குறைய நாம் ஏற்கெனவே கொடுத்திருந்த தடைநிலை ஆகும். அதற்கு அடுத்தடுத்த நாள்களில் தங்கம் பக்கவாட்டு நகர்விலேயே நகர்ந்து, நாம் கொடுத்திருந்த 31880 என்ற எல்லையைத் தாண்ட முடியாமலேயே இருந்துவந்தது. செவ்வாய் மற்றும் புதனன்று தங்கம் சற்றே இறங்குமுகமாக மாறியது. இந்த இறக்கம் கீழே 31635 என்ற எல்லையைத் தொட வைத்தது. அதன்பின் குறுகிய எல்லைக்குள்ளாகவே சுழல்கிறது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் கீழே 31550 என்ற எல்லையைத் தற்போது ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31880 இன்னமும் தடை நிலையாகவே உள்ளது.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… வெள்ளி, தற்போது ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்வில் உள்ளது. மேலே 39480 என்ற எல்லை இன்னமும் தடையாக வும், கீழே 38500 என்பது உடனடி ஆதரவாக உள்ளது.

வெள்ளி, கடந்த வாரம் திங்களன்று வலிமையாக ஏறியது. ஆனாலும், நாம் கொடுத்திருந்த தடை நிலையான 39480 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல், 39475 வரை சென்றுவிட்டுக் கீழே இறங்கிவிட்டது. ஆனாலும், இறக்கம் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்கவும் செய்துள்ளது. கடந்த வாரத்தின் கடைசி மூன்று நாள்களும் ஸ்பின்னிங் டாப் உருவமைப்புகளே தோன்றியுள்ளன.

இனி என்ன செய்யலாம்? வெள்ளி தற்போது 38480 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு உள்ளது. மேலே 39220-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் நல்ல இறக்கத்திற்குப்பிறகு 5160 என்பதை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 5480 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகக் கொண்டுள்ளது.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடை நிலையான 5480-ஐ தாண்ட முடியாமல், கீழ் நோக்கியே நகர ஆரம்பித்துள்ளது. திங்கள் முதல் புதன் வரை மூன்று ஸ்பின்னிங் டாப்புகள் உருவாகி, பக்கவாட்டு நகர்வில் உள்ளது. அதன் பின் மெள்ள கீழ் எல்லையை உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. கீழ் ஆதரவான 5160-ஐயும் உடைத்து இறங்கி 5062 வரை இறங்கியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் தற்போது 5050 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 5320 முக்கியத் தடை நிலை ஆகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், 1818 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, ஏற்றம் முடிந்து இறங்குமுகமாக மாறியுள்ளது. இந்த இறக்கம் நிகழ்ந்துகொண்டு இருக்கும்போது, கடந்த 10 நாள்களாக ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. இந்த பக்கவாட்டு நகர்வு, மெள்ள மெள்ள ஒரு முக்கோண உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. முக்கோண உருவமைப்புத் தோன்ற ஆரம்பித்த நாள் 04.10.2018 ஆகும். அன்று 1674 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டுவிட்டு ஏற ஆரம்பித்தது.

அடுத்த நாள் மிக வலிமையாக ஏறி உச்சமாக 1756-ஐ தொட்டது. இதுதான் முக்கோண வடிவத்தின் உயரம் ஆகும். இதன் இடைவெளி 82 புள்ளிகள் ஆகும். அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் மென்தா ஆயிலின் விலை நகர்வு குறுகிக்கொண்டே போனது. அதாவது, டாப் மற்றும் பாட்டம் இரண்டும் குறுக ஆரம்பித்து தற்போது, முழுமையான முக்கோண வடிவத்தைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த பிரேக் அவுட் நடந்தால், வலிமையான நகர்வு காத்திருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “வலிமையாக மேலே தடுக்கப்பட்டு இறங்கிய நிலையில் தற்போதைய முக்கிய ஆதரவு 1666 ஆகும். இதை உடைத்தால் வலிமையாக இறங்கலாம். மேலே 1765 இன்னமும் முக்கியத் தடைநிலை ஆகும்.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடை நிலையான 1765 என்ற எல்லையைத் தாண்ட வில்லை. அதேசமயம், நாம் கொடுத்திருந்த ஆதரவான 1666 என்ற முக்கிய ஆதரவைத் தக்க வைத்துள்ளது. கடந்த வாரத்தின் பெரும்பகுதியான நாள்கள், ஸ்பின்னிங் டாப் வகை கேண்டில் அமைப்பைத் தோற்றுவித்து வருகிறது.

இனி என்ன செய்யலாம்..? மென்தா ஆயில் முக்கோண வடிவத்தின் நுனியில் உள்ளது. இதன் ஆதரவு எல்லை என்பது 1685 ஆகும். மேலே டாப்பும் குறுகிய நிலையில் 1730 என்பது தடை நிலை ஆகும். எதை உடைத்தாலும் ஒரு பெரிய நகர்வு காத்திருக்கிறது.

காட்டன்

சென்ற வாரம் சொன்னது… “காட்டன் பலமாக ஏறிய நிலையில் 22800 என்ற எல்லை தடைநிலையாகவும், கீழே 22340 என்பது முக்கிய ஆதரவாகவும் உள்ளது.”

காட்டன், முந்தைய வாரம் நன்கு ஏற ஆரம்பித்து, வாரத்தின் முடிவில் மிக பலமாக ஏறியதைப் பார்த்தோம். நாம் கொடுத்திருந்த தடைநிலையைத் தாண்டி ஏறியது. ஆனால், இந்த ஏற்றம் என்பது ஒரு கேப் அப் ஆகும். பொதுவாக, கேப் அப் ஆகும்போது, முதல் ஒரு மணிநேரத்தின் குறைந்தபட்ச புள்ளியை உடைத்தால் அது இறங்குமுகமாக மாறலாம். அந்த வகையில், காட்டன் 15.10.2018-ல் ஒரு கேப் அப்பில் தொடங்கி, அதாவது, 23040-ல் ஆரம்பித்து, பின் படிப்படியாக இறங்கி, 22900 என்ற புள்ளியில் முடிந்தது. அடுத்து செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் இறங்கி, 22530 என்ற புள்ளியைத் தொட்டது. பின் இந்த இறக்கத்தின் ஏற்றம் நடந்து வருகிறது.

இனி என்ன செய்யலாம்? காட்டனின் புல்பேக் ரேலிக்கு 23100 உடனடித் தடைநிலை. கீழே 22600 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்ட்ராக்ட் நடப்பில் உள்ளது

சென்ற வாரம் சொன்னது… “சென்னா இன்னமும் 4245 என்ற எல்லையைத் தடைநிலை ஆகவும், கீழே 4130 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.”

சென்னா நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4245-ஐ தொடர்ந்து தாண்ட முடியாமல் இறங்கு முகமாக மாறியுள்ளது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையும் உடைக்கப்பட்டு கீழே இறங்கி உள்ளது.

கடந்த வாரம் திங்களன்றே இறங்கத் தொடங்கிய சென்னா, செவ்வாயன்றும் இறங்கி குறைந்த பட்ச புள்ளியாக 4089-ஐ தொட்டது. அதாவது, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4130 உடைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், வாரத்தின் முடிவில் ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்கிறது.

இனி என்ன செய்யலாம்? சென்னா இறங்கிய நிலையில் 4070 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 4170 என்ற எல்லை உடனடி தடைநிலை ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in