இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் ஒரு புதிய தாழ்வு நிலைக்குச் சரிந்ததால், சந்தை ஒரு மோசமான சரிவை ஏற்படுத்தி, வார இறுதியை நிறைவு செய்திருக்கிறது. கணிசமான இழப்புகளைக்கொண்ட மோசமான ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன் வர்த்தகமாக அக்டோபர் மாத நிகழ்வுகள் முடிவடைந்தது. இது 2013, ஆகஸ்ட்டுக்குபின் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு.

நிஃப்டி தற்போது 10000 புள்ளிகளுக்கு அருகில் உள்ளது. அக்டோபரில் முக்கியக் குறியீடுகள் பெரிய வரம்புகளுடன் வர்த்தகமானது. இதனை நீங்கள் அடிக்கடிப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல, இதே நிலை செப்டம்பரில் நீடித்தால், விலை வீழ்ச்சி அதிகமாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னணி நிலையில் உள்ள பங்குகளின் விலைகள் சரிந்தபோது அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகின. ஆயினும், சார்ட்டுகளின் ஏற்ற இறக்க நிலை, அதன் டைவர்ஜன்ஸ் பேட்டர்ன் உருவாக்கத்தைத் தொடரச் செய்தது. கேண்டில் ஸ்டிக்கில், நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாத ஒரு திரிஸ்டார் போன்ற பேட்டர்ன் காணப்பட்டது. இண்டெக்ஸ் மேல்நோக்கிச் செல்ல இந்த இரண்டுமே காரணமாக இருந்தது. எனவே, தற்போதைய நிலையில், சந்தையின் போக்கில் மாற்றம் வர வாய்ப்பில்லை.

சந்தை ஏற்றத்தை நோக்கிச் செல்வதற்கான போக்குக்காக நாம் காத்திருந்தாலும்கூட, சந்தையின் தொடர் வீழ்ச்சிகளின் வலியை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நிஃப்டி 10000 லெவல்கள் தொடர்ந்து அச்சுறுத்தலிலேயே இருக்கும் என்பதுடன், ஒவ்வொரு புதிய இறக்கமும், சந்தையின் தற்போதைய சென்டிமென்டை மேலும் மோசமாக்கக்கூடும்.

வர்த்தக நாளின் இடையே காணப்படும் நிலையின் அடிப்படையில் பங்குகளின் விலை, அதன் உச்சத்திலிருந்து வேகமாக இறங்குவது, தீவிரமான ஷார்ட் செல்லிங் செய்வதைத் தடுப்பதுடன், பொசிஷன் உருவாக்கத்தைக்கூட நடக்கவிடவில்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்பவர்களாகவே இருப்பதால், சப்ளையும்கூட மாறாமல் இருக்கிறது. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து வாங்காமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்போதைக்கு, சந்தை ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்வதற்குமுன் தாழ்வு நிலை ஏற்படுவதற் காகக் காத்திருக்கிறது. எனவே, இப்போதுள்ள நிலையில் பொறுமை காப்பதே நல்லது.
பங்குகள்

இன்டெலக்ட் டிசைன் அரெனா (INTELLECT)

தற்போதைய விலை: ரூ.229.10

வாங்கலாம்

பங்குச் சந்தை குறிப்பிட்ட சில நல்ல பங்கு களுக்கு மட்டும் வெகுமதியளித்துள்ளது. இன்டெலக்ட் நிறுவனப் பங்குகளும் அத்தகைய நல்ல பங்குகளில் ஒன்றாக திருப்திகரமாக உள்ளது. இதன் சார்ட் மிகவும் நல்ல பேட்டர்னைக் காட்டி, வாங்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். ஸ்டாப்லாஸை ரூ.220-ஆக வைத்துக் கொள்ளவும். பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.260 வரை செல்லக்கூடும்.

சுதர்ஸன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (SUDARSCHEM)

தற்போதைய விலை: ரூ.380.80

வாங்கலாம்

பங்குகளை எப்போது வாங்கலாம் என்பதில் பல முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கிறார்கள். சுதர்ஸன் கெமிக்கல் நிறுவனப் பங்குகளை பெரிய முதலீட்டாளர் ஒருவர் மொத்தமாக வாங்கியிருப்பதைக் காண முடிகிறது. இது பங்கு விற்பனையில் ஒரு தேக்கத்தைத் தந்ததால், சரிவு ஏற்படத் தொடங்கியது. இந்தச் சரிவு முடிவடைந்து பங்கு விற்பனை மீண்டும் எழுச்சி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு தெரிகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ரூ.377-க்கு அருகே ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.420.

ஜே.கே.பேப்பர் (JKPAPER)

தற்போதைய விலை: ரூ.157.70

வாங்கலாம்

காகித நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையின் வர்த்தக இறுதி நாளில் நல்ல நிலையில் முடிவடைந்துள்ளன. இந்தத் துறை நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சாதகமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுதப் பயன்படுத்தும் காகிதத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜே.கே.பேப்பரின் பங்கு விலையின் சரிவு முடிவுக்கு வந்திருக்கிறது. சரிவின்போது பங்கு விலையில் ஏற்பட்ட சேதம் குறைவாகவே இருந்தது. வலுவான விலையேற்றம் அதனைக் கட்டுக்குள் வைத்திருப்பது தெரிகிறது. பங்கு விலை மேலே செல்லும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.157 வைத்துக் கொள்ளவும். குறுகிய கால இலக்கு விலை ரூ.195.

- டாக்டர் சி.கே. நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.