தங்கம் (மினி)

பங்குச் சந்தை இறங்க இறங்க, தங்கம் விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும்கூட, தங்கம் அதற்கு ஏற்ற வகையில் பெரிய ஏற்றத்தை இதுவரை கொடுக்கவில்லை. அதேசமயம், பெருமளவும் இறங்கவில்லை. தற்போது தங்கம் இந்த இரண்டு நிலைக்கும் நடுவில் இருந்து வருகிறது. ஒருபக்கம், டாலர் இண்டெக்ஸ் ஏறுமுகமாக உள்ளதும், தங்கம் சற்றே பக்கவாட்டு நகர்வில் இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் கீழே 31550 என்ற எல்லையைத் தற்போது ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31880 இன்னமும் தடை நிலையாகவே உள்ளது.”

தங்கம் கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31880-ஐ ஒரே ஒருநாள் மட்டும் உடைத்து மேலே ஏற முயற்சி செய்தது. அதாவது, சென்ற வாரம் திங்களன்று பெரும் மாற்றம் இல்லாமல் முடிந்த தங்கம், செவ்வாயன்று 31721 என்ற புள்ளியில் ஆரம்பித்து, 32053 வரை வலிமையாக ஏறியது. ஆனாலும், அன்று வர்த்தகம் முடியும்போது இறங்கி 3871 என்ற எல்லையில்தான் முடிந்தது. இதனால் 31880 என்ற எல்லை இன்னும் வலுவான தடைநிலையாக மாறி இருப்பதையே இது உணர்த்துகிறது.

அடுத்தடுத்த நாள்களில் தங்கம் மேலே 31880 என்ற எல்லைக்கு அருகில்கூட வரவில்லை. அதேசமயம், தங்கம் கீழே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31550 என்ற எல்லையை ஒருமுறைகூட உடைக்கவில்லை. சென்ற வாரம் புதனன்று மட்டும் தங்கம் சற்றே இறங்கி குறைந்தபட்ச புள்ளியாக 31585-ஐ தொட்டது. எனவே, 31550 என்ற எல்லை இன்னும் வலுவாக உள்ளதையே இது காட்டுகிறது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே 31550 என்ற ஆதரவு எல்லையைத் தக்கவைத்துள்ளது. அதேநேரம், 31880 என்ற தடைநிலை இன்னும் வலுவாகவே உள்ளது.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது 38480 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.மேலே 39220-ஐ தடைநிலை யாகவும் கொண்டு இயங்கி வருகிறது.”

வெள்ளியின் நகர்வுக்கு, திசையைப் பொறுத்தவரைக்கும் தங்கம் நகர்ந்துகொண்டு இருக்கும் அதே திசையில் நகர்ந்து கொண்டிருந்தாலும் அதன் வீச்சு, தங்கத்தைப்போல் இல்லை. அதாவது, தங்கம் ஏறும்போது, வெள்ளி மிதமாக ஏறுவதும், தங்கம் மிதமாக ஏறும்போது, வெள்ளி மெள்ள பக்கவாட்டு நகர்விலும் இருந்துவருகிறது.

வெள்ளி கடந்த வாரம் திங்களன்று ஒரு ஸ்பின்னிங் டாப் உருவமைப்பைத் தோற்று வித்துள்ளது. செவ்வாயன்று தங்கம் வலிமையாக ஏறியபோது, வெள்ளியும் வலிமையாகவே ஏறியது. ஆனால், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39220-ஐ தாண்ட முயற்சி செய்து, 39290 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், முடியும்போது 39148 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. அதேபோல், கடந்த வியாழன் அன்று வலிமையாக இறங்கியது 38615 என்ற புள்ளியைத் தொட்டாலும், நாம் கொடுத் திருந்த ஆதரவான 38480 என்ற எல்லையைத் தாண்டவில்லை.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும் சற்றே வலிமை குன்றி காணப்படுகிறது. கீழே 38420 என்ற ஆதரவையும், மேலே 39240 என்ற தடைநிலையையும் கொண்டு இயங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் (மினி)

தங்கமும் வெள்ளியும் கடந்த வாரங்களில் ஒருபக்கவாட்டு நகர்வில் இருக்க, கச்சா எண்ணெய், தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரம் திங்களன்று நாம் கொடுத்திருந்த ஆதரவான 5050-ஐ உடைக்காமல் டோஜியில் முடிந்தது.

அடுத்து, செவ்வாயன்று ஆதரவான 5050-ஐ உடைத்து மிகப் பெரிய இறக்கத்தை அடைந்து, 4851 என்ற குறைந்த பட்ச புள்ளியைத் தொட்டது. இந்த நிலையில் ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

கச்சா எண்ணெய் நன்கு இறங்கிய நிலையில் 4850 என்பது முக்கிய ஆதரவாகவும், மேலே 5030 என்ற எல்லை தடைநிலை யாகவும் உள்ளது.

- தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in