Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பங்குச் சந்தை தாக்குப் பிடிக்கிறது. தங்கம் விலை விழ ஆரம்பித்துள்ளது.  பங்குச் சந்தை இறங்கினால் தங்கம் ஏறத் தயாராகத்தான் இருந்தது.  ஆனால், பங்குச் சந்தை அவ்வப்போது இறங்குவதுபோல் போக்குகாட்டிவிட்டு, மீண்டும் ஏறி நிற்கிறது. இதனால், தங்கத்தின் நிலைப்பாடு நிச்சயம் இல்லாமல் இருந்தது. தங்கம் கடந்த மூன்று வாரமாக கீழே 31500-ஐ ஆதரவு எல்லையாகவும் மேலே 32100-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வந்தது. கடைசியாகக் கடந்த வாரம் தங்கம் கீழ் எல்லையை உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “நவம்பர் கான்ட்ராக்ட் டெலிவரி பிரீயட்டுக்குள் நுழைவதால், இனி நாம் டிசம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய தடைநிலை 31930 ஆகும்.  உடனடித் ஆதரவு எல்லை 31490 ஆகும்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31930-ஐ உடைக்கவே இல்லை. கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று தங்கம் ஏற்றத்திற்கு முனைப்பாக இருந்தது. திங்களன்று உச்சமாக 31898-ஐ தொட்டு இறங்கி டோஜி வடிவில் முடிந்தது.  அடுத்து செவ்வாயன்று உச்சமாக 31869-ஐ தொட்டுவிட்டு ஒரு ஷூட்டிங் ஸ்டார் பேட்டர்னை உருவாக்கியது. புதனன்று இறக்கத்தை நிச்சயப்படுத்தும் வகையில் இறங்கி 31602-ல் முடிந்தது. இதனால், இறக்கமும் உறுதியானது.  வியாழனன்று நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31490-ஐ உடைத்து வலிமையாக இறங்கி குறைந்தபட்சமாக 31234-ஐ தொட்டது. ஆனாலும், முடியும்போது சற்றே ஏறி 31408-ல் முடிவடைந்துள்ளது. வெள்ளியன்றும் ஒரு வலிமை குன்றியே காணப்பட்டது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் தற்போது 31040 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 31560 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது 38240 என்ற எல்லையை ஆதரவாகவும் மேலே  38920 என்ற எல்லையைத் தடைநிலையாக வும் கொண்டுள்ளது.”

கடந்த வாரம், வெள்ளியின் நகர்வு  பொதுவாக வீச்சின் அளவில் மாறி இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்து வருகிறோம். ஆனாலும், கடந்த வாரம் வெள்ளி திசையைப் பொறுத்தவரை, தங்கத்தின் திசையை ஒட்டியே நகர்ந்துள்ளது.  இன்னமும், வெள்ளி தங்கத்தைவிட வேகமாகவே இறங்கி வருகிறது. கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த 38920 என்ற தடைநிலையை உடைக்கவில்லை.  மாறாக நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 38240-ஐ உடைத்து 37200 வரை வலிமையாக இறங்கி உள்ளது. கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் வரை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டு இருந்த வெள்ளி, வியாழனன்று கடுமையான சரிவைச் சந்தித்தது. 

இனி என்ன செய்யலாம்? வெள்ளி தற்போது ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது. உடனடி ஆதரவு நிலை 36760 ஆகும். மேலே 37888 வலிமையான தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 4520 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 4770 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.”

கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வலிமையாக இறங்கி வருவதை, ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்து கூறி வருகிறோம்.  குறிப்பாக, கேன்டில்கள் வலிமையான கரடிகளின் கேன்டில்களாக இருப்பதே இதற்கு சாட்சி.  கச்சா எண்ணெய் தற்போது மிக வலுவான கரடிகளின் பிடியில் இருந்து வருகிறது. சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவான 4520-ஐ உடைத்து இறங்கி 4306 வரைகூட இறங்கியதைப் பார்க்கிறோம். கச்சா எண்ணெய் பலமாக இறங்கியத்திற்குப்ப் பின், ஒரு புல்பேக் ரேலி வரலாம்.  இது கரடிகளுக்கு  எச்சரிக்கை.

இனி என்ன செய்யலாம்? கடுமையான இறக்கத்தில் உள்ள கச்சா எண்ணெய் தற்போது 4234 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே உடனடித் தடைநிலை 4570 ஆகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் ஏறும் திசையில் பிரேக்அவுட் ஆகி, அதற்கான டார்கெட்டையும் அடைந்தது. அதன் பின் உச்சத்தில் ஒரு ஷூட்டிங் ஸ்டார் உருவமைப்பைத் தோற்றுவித்தது. இதுவே ஏற்றத்தின் முடிவு என்பதற்கான அறிகுறி. மென்தா ஆயிலும் 31.10.2018 அன்று ஒரு வலிமையான ஷூட்டிங் ஸ்டார் தோன்றிய பிறகு, ஏற்றம் முடிந்து இறக்கம் ஆரம்பித்தது.

சென்றவாரம் நாம் சொன்னது… “மென்தா ஆயிலின் ஏற்றம் முடிவுக்கு வந்து, தற்போது இறங்குமுகமாக மாற வாய்ப்புள்ளது. கீழே 1760 என்பது உடனடி ஆதரவு ஆகும். மேலே 1810 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக மாறி உள்ளது.”

மென்தா ஆயில், நாம் கொடுத்திருந்த தடை நிலையான 1810 என்ற எல்லையைத் தாண்டவே இல்லை. சென்ற வாரம் திங்களன்றே மென்தா ஆயில் 1805 என்ற புள்ளியில் ஆரம்பித்து அதன் பின் நன்கு இறங்கி 1765 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. செவ்வாயன்று 1765 என்ற புள்ளியில் ஆரம்பித்து, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1760-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்சமாக 1731-ஐ தொட்டது. இந்த நிலையில் அடுத்து மூன்று நாள்களும் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?  நல்ல இறக்கத்திற்குப் பிறகு, ஒரு புல்பேக் ரேலியில் மென்தா ஆயில் உள்ளது. இந்த புல்பேக் ரேலி என்பது பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், மேலே 1785-ஐ தடைநிலை யாகவும், கீழே 1740 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

காட்டன்

காட்டன், அக்டோபர் 2018-ல் குறைந்தபட்ச புள்ளியாக 21690-ஐ தொட்ட பிறகு, ஒரு வலிமையான புல்பேக் ரேலிக்கு மாறியது. இந்த புல்பேக் ரேலி உச்சமாக 23280-ஐ தொட்ட பிறகு, அதைத்தாண்ட முடியாமல், இறங்க ஆரம்பித்துள்ளது. அதன்பின், காட்டன் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “காட்டன் டபுள்டாப் அமைப்பைத் தோற்றுவித்து இறங்கி அதன் டார்கெட்டை தொட்ட பின், தற்போது புல்பேக் ரேலியில் உள்ளது. அதன் உடனடித் தடைநிலை 22800. கீழே தற்போதைய உடனடி ஆதரவு நிலை 21800 ஆகும்”

காட்டன் நாம் கொடுத்திருந்த தடைநிலை 22800-ஐ தாண்ட முடியாமல் அதன் அருகே சென்று திரும்பிக்கொண்டு இருக்கிறது. மிகக்குறுகிய பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்? பக்கவாட்டில் உள்ள காட்டன் 22650-ஐ தடைநிலையாகவும், கீழே 22150-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்டிராக்ட் நடப்பில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “சென்னா ஒரு பாட்டத்தை ஏற்படுத்தி ஏற முயற்சி செய்து வருகிறது. இதன் உடனடித் தடைநிலை 4075. கீழே இன்னமும் நாம் முன்பு கொடுத்திருந்த 3900 என்பது வலிமையான ஆதரவு ஆகும்.”

சென்னா ஒரு பலமான பாட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என்று கோடிட்டு காட்டி இருந்தோம். அந்த பலமான பாட்டத்தின், விளைவு என்பது மிக பலமான ஏற்றத்தில் முடிந்துள்ளது. சென்னா நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4075-ஐ உடைத்து ஏறி தினம் தினம் புதிய உச்சங்களைத் தோற்றுவித்து, கடைசியாக வெள்ளியன்று உச்சமாக 4559-ஐ தொட்டது. உடனடித் தடைநிலை 4630. கீழே முக்கிய ஆதரவு நிலை 4340 ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in