Published:Updated:

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்

1980-ம் ஆண்டு வெளிவந்த, முரட்டுக் காளை திரைப்படத்தின் கதை நாயகன் யார்? என்னது, சினிமா விகடனில்  கேட்க வேண்டிய கேள்வியை நாணயம் விகடனில் கேட்கிறார்களே என்று குழம்ப வேண்டாம். இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி கொஞ்சம்... 

பங்குச் சந்தையை நேரடியாக எல்லா சமயங்களிலும், வெற்றி கொள்ள முடியுமா என்றால், முடியாது என்பதுதான் முதலீட்டாளர்களின் ஒரே பதில். ஏனென்றால், பங்குச் சந்தை வணிகமென்பது, இருபுறமும் கூரான ஆயுதத்தைக் கையாள்வது போன்றது. இதைக்கொண்டு பரபரப்பாக இயங்குவது வேலைக்கு ஆகாது. கவனம் கொஞ்சம் சிதறினாலும் பாதிப்பு, முதலீடு செய்தவருக்குத்தான். 

ஆனால், அதே பங்குச் சந்தையில் முதலீடு செய்து, லாபத்தைப் பெருக்கவும் சில வழிகள் உண்டு. அதில் முதன்மையானதும், ஓரளவுக்குப் பாதுகாப்பானதும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் முதலீடு செய்வதுதான்.

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், முதலீடு செய்வதற்குமுன், நான்கு விஷயங்களை நம் மனதில் சரியாக  இருத்திக்கொண்டால், நீண்ட கால முதலீட்டின் பயனை, பின்நாள்களில்  எளிதாக அடைய முடியும்
1. ஒரே ஒரு ஃபண்டில் மட்டும் தான் முதலீடு செய்வேன் என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். 2. குறைந்தது 3 - 5  ஃபண்டு களில் முதலீடு  செய்ய வேண்டும்.      3. நீங்கள் தேர்வு செய்திருக்கும் பங்குச் சார்ந்த  மியூச்சுவல் ஃபண்டுகளானது, சரிவிகிதக் கலவை  கொண்ட போர்ட் ஃபோலியோவாக இருக்குமாறு கட்டமைத்துக் கொள்ளவேண்டும்.     4. சேரும் இடம் தெரிந்தால்தான்,  செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிக்க முடியும். எனவே, முதலில் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கை அடைந்ததும், வெளியேறவும் தவறக்கூடாது. இலக்குகளுக்கான கால அளவு, குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக, அதிக ரிஸ்க்கையும், குறைந்த வருமானத்தையும் விரும்பாத நடுத்தர முதலீட்டாளர்களுக்கான (வயது வரம்பு 25  முதல் 50-க்குள்) மாதிரி போர்ட்ஃபோலியோ மேலே தரப்பட்டுள்ளது. இதேபோன்று, உங்களுக்கேற்ற போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்ளுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தை கடந்த 2013-ல் சரிவைச் சந்தித்த போதுகூட, பெரிதாக இறங்காத பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களின் நிகர சொத்து மதிப்பானது (NAV)  தற்போது, 2011-ம் ஆண்டைப் போல 15 - 30% வரை இறக்கத்தை அடைந்துள்ளன.   552 பங்குச் சார்ந்த (pure equity) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கிட்டத்தட்ட 70% ஃபண்டுகள், சென்ற 2018, அக்டோபர் 23-ம் தேதியன்று,  தனது 52 வார குறைந்த  நிகர சொத்து மதிப்பைப் பதிவு செய்துள்ளன.

இந்தச் சூழ்நிலையானது, முதன்முதலாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள்  மறுமுதலீடு செய்வதற்கும், ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருப்பதாக ஃபண்ட் மேனேஜர்களும், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களும் கருத்துத்  தெரிவித்திருக்கிறார்கள்.

இப்போது, கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்ட கேள்வியின் பதிலுக்கு வருவோம். அதற்குமுன், முரட்டுக்காளை படத்தின் கதையைச் சுருக்கமாக நினைவுபடுத்திப் பார்ப்போம். 

ஆள் பலமும், பண பலமும் கொண்ட பண்ணையாரால், வஞ்சிக்கப்படும் ஒருவன், அவரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், அவரிடமே கணக்குப்பிள்ளையாக வேலைக்குச் சேர்ந்து, வீரதீர இளைஞனான காளையன் என்பவனை வைத்தே, பண்ணையாரைப் பழிதீர்த்து, வெற்றி கண்டு, இறுதியில் அவனுடனே  சேர்ந்துகொள்வதாக படம் முடிவடையும். இப்போது சொல்லுங்கள், அந்த திரைப்படத்தின், கதை நாயகன் யார்..? சந்தேகமே இல்லாமல்,        அந்த கணக்குப்பிள்ளைதானே!

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

இந்தப் படத்தின் ஃபார்முலாவை கொஞ்சம்  பாசிட்டிவ்வாக பங்குச் சந்தைக்குப் பொருத்திப் பார்ப்போம். பக்கவாட்டில் நகருமா, மேலே பாயுமா  அல்லது கீழே இறங்குமா என்று கணிக்க முடியாத பலம் கொண்ட பங்குச் சந்தையை,  நீண்ட கால அடிப்படையில், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின், வெற்றிகரமான முதலீட்டு முறையாகக் கருதப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (STP) அல்லது அடிஷனல் பர்ச்சேஸ் எனும் மறுமுதலீடு முறையின் மூலம், தொடர்ச்சியாக முதலீடு செய்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப்பின் திரும்பிப் பார்த்தால் (குறைந்தது 7 - 12 ஆண்டுகள்) நாம் செய்திருந்த  முதலீடுகள், மிகப் பெரிய லாபத்தை நமக்குத் தந்திருக்கும்.

பங்குச் சந்தையுடன் மோதி ஜெயிப்பதற்குப் பதிலாக, அது இறங்கும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, அதனுடனேயே இருப்பதன் மூலம் நம்மால் நல்ல லாபம் பார்க்க முடியும்.  இதற்கு வேண்டியதெல்லாம் நமக்குப் பொறுமைதான்!

- ஜி.அண்ணாதுரை குமார்,  நிதி ஆலோசகர்