Published:Updated:

காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!

காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!

பங்குச் சந்தை

ந்திய பங்குச் சந்தை மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது. அதற்கான டேட்டா ரீதியான ஆதாரங்களைப் பார்ப்போம்.

1990-களின் கடைசியில் ராபர்ட் முர்டாக் இந்தியாவில் தன்னுடைய சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்கை ஆரம்பிப்பதற்காக இந்தியா வந்தார். டெல்லியில் அதற்கான அரசாங்க சந்திப்புகளை முடித்துக் கொண்டு மும்பைக்கு வந்த அவர், திருபாய் அம்பானியைச் சந்தித்தார். அம்பானி அவரிடம், ‘‘உங்கள் பிசினஸிற்காக நீங்கள் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘பிரதம மந்திரி, நிதியமைச்சர் மற்றும் பலரை சந்தித்தேன்’’ என்று சொன்னாராம். அதற்கு அம்பானியோ, ‘‘நீங்கள் சரியான நபர்களைத்தான் சந்தித்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவிற்குள் உங்கள் வியாபாரத்தை எடுத்துச் செல்ல தவறான பலரையும் சந்திக்க வேண்டும் என்றாராம்.

காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!

இதன் மூலம் அவர் சொல்ல வந்தது, பல ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைச் சந்திக்க வேண்டும் என்பதைத்தான். இதை எட்வர்ட் லூசி என்பவர், தன்னுடைய புத்தகமான ‘இன்ஸ்பைட் ஆஃப் காட்ஸ்: தி ஸ்ட்ரேஞ்ச் ரைஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய டேட்டா ஆராய்ச்சி, இந்தியா தனித்துவம் வாய்ந்ததொரு சந்தை என்றே காட்டுகிறது. கடந்த 18 ஆண்டுகளின் காலாண்டு முடிவுகளை எடுத்துக்கொண்டு, அவை ரூபாயின் மதிப்பு, ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றுடன் எவ்வாறு இசைவாகச் செயல்படுகிறது என்பதைப் புள்ளியியல் முறையான ரெக்ரஷன் அனாலிசிஸ் (Regression Analysis) மூலம் ஆராய்ந்தால், கிட்டத்தட்ட 60% தடவைகள் சந்தையின் போக்கு என்பது இவற்றைச் சார்ந்தே இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. உலக அளவில் இரண்டு பெரிய பங்குச் சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் சந்தைகளில் இதே ஆராய்ச்சியைச் செய்தால் அவை முறையே 34 மற்றும் 35 சதவிகித அளவிலேயே இருக்கிறது.

இது எதைக் காட்டுகிறது எனில், இந்த இரண்டு சந்தை களும் நிறுவனங்கள் சார்ந்த விஷயங்களே முதலீட்டாளர் களுக்கான லாபத்தைத் தீர்மானிக்கிறது என்பதையேயாகும்.

வளர்ந்துவரும் நாடுகளின் (Emerging Market) மத்தியில் பெரிய பொருளாதாரமான சீனாவில் இந்த மூன்று விஷயங்கள் (Macro Factors) 25% என்கிற அளவிலேயே பங்குகளின் விலையை நிர்ணயிப்பதாக இருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளின் சந்தைகளில் ஓரளவுக்கு இந்தியாவுடன் ஒத்துப்போகும் அளவிற்கு இருக்கும் சந்தை பிரேஸில்தான். அங்கே 53% அளவுக்கு இந்த மூன்று மேக்ரோ விஷயங்கள் பாதிக்கிறது.  பிரேசில் ஒரு கமாடிட்டி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், இது சகஜமான ஒன்று என்று எதிர்பார்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!

ஏன் இந்திய சந்தைகள் இப்படி மேக்ரோ விஷயங்களைச் சார்ந்தே பெரும்பாலும் செயல்படுகின்றன?

இதற்கு மூன்று காரணி களே பிரதானமானதாக இருக்கின்றன என நினைக்கிறேன்.

1. இந்தியா இன்னமுமே பிரபுத்துவம் சார்ந்த ஒரு சமூகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் அரசர் களாகவே இருக்கின்றனர். அதனால் பெரும்பாலான துறைகள் மத்திய, மாநில மற்றும் நகர்ப்புற அரசு அமைப்புகளாலேயே நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

உதாரணத்திற்கு, மும்பையில் ஒரு ஹோட்டலை ஆரம்பிக்க சுமார் 60 அனுமதிகளை அரசாங்க அலுவலகங் களிலிருந்து பெறவேண்டியுள்ளது. தற்போது கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளில் இருந்து உதாரணம் தேடினால், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC) தற்போது இருக்கும் சிக்கலான சூழ்நிலையை எடுத்துக்கொள்வோம். இந்த நிறுவனங்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கமர்ஷியல் பேப்பர்களுக்காகத் தங்களுக்குத் தேவையான நிதியை ரீ-ஃபைனான்ஸ் மூலம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகப்போகிறது என்று தெரிந்தவுடன் டெல்லியை நோக்கி படை யெடுத்துச் சென்று முறையிட்டு, அரசாங்கத்தை அதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்கவைக்க முயற்சி செய்தன. யு.பி.ஏ அரசாங்கத்தை ஆதர வாளர்களுக்கு உதவும் தேர்ச்சிபெற்ற ஒன்றாகச் செயல்பட வைக்க முடிந்தது என்பதை https://bit.ly/2JXBcoW என்ற இணையதள பக்கத்தில் உள்ள செய்தியைப் படிப்பதன் மூலம் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

2. உற்பத்திக்கான காரணிகள் ஏனைய பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளைவிட இந்தியாவில் அதிக செலவினங்களைக் கொண்ட தாகும். நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ள 2001 - 2018 வரையிலான காலகட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 11% வட்டி யிலேயே கடன் பெற முடிந்தது. அதே சமயத்தில், சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் 5 சதவிகிதத்திற் கும் குறைவான வட்டியையே செலுத்த வேண்டியிருந்தது.

மேலும், இந்தியாவில் பணியாளர்களுக்கான சம்பளம் பங்களாதேஷைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்து வந்துள்ளது (அதிலும் பங்களாதேஷ் இந்தியாவை விட நல்லதிறன் கொண்ட மற்றும் படிப்பறிவுள்ள பணியாளர்களைக் கொண்ட நாடாக இருக்கிற போதிலுமே).

3. மேலும், இந்தியாவில் பங்குச் சந்தையை தெற்கு மற்றும் வடக்கு என்ற இரண்டு பெரும்பிரிவாகவே பார்க்கவேண்டியுள்ளது. ஏனென்றால், தெற்கில் இருக்கும் நிறுவனங்களுக்கு நிறுவனம் சார்ந்த விஷயங்களே விலை மாறுதலுக்கான காரணியாக அதிக அளவில் இருக்கிறது. அதேசமயம், வடக்கில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த நிலை சற்று மாறுபடவே செய்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், வட இந்தியா (அதிலும் பாகிஸ்தான்  மற்றும் பங்களாதேஷை ஒட்டியுள்ள பகுதிகளில்) ஒரு பொருளாதார நெருக்கடியையே தொடர்ந்து சந்தித்துவருகிறது. 

 இங்கே இருக்கும் தனிநபர் வருமானம் என்பது தென் இந்தியாவில் இருக்கும் தனிநபர் வருமானத்தைவிட சரிபாதியான அளவிலேயே இருக்கிறது. இந்தப் பகுதிகளில் பெண்கள் பணிக்குச் செல்வது என்பது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை விடக் குறைவான அளவிலேயே இருக்கிறது. அதேபோல், மனித வளப்பெருக்க குறியீடுகளில் இந்தப் பகுதிகள் கடும் யுத்தங்கள் நடந்து வரும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. டெல்லியையும் அதைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர்த்து ஏனைய வட இந்தியப் பகுதிகளில் நிறுவனம் சார்ந்த விஷயங்கள் என்பது குறித்து பேசுவதில் பலனே இல்லை என்ற நிலைமையே இருக்கிறது.

காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்!

நீங்கள் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்து நிர்வகித்தீர்கள் என்றால், உங்களுக்கு இந்த மேக்ரோ விஷயங்களை அத்துப்படியாக வைத்திருக்கும் திறன் அதிகம் தேவைப்படும். உங்களால் தொழில் முதலீட்டிற்கு நிதி திரட்ட ஆகும் செலவு (கடன் மற்றும் டிவிடெண்ட் போன்ற ரிட்டர்ன் எதிர்பார்ப்பு) மற்றும் ரூபாயின் மதிப்பு எந்த விதமாக மாறுபடும் என்பதை யூகிக்க முடியாதென்றால், என்னதான் பங்குகளைத் தேர்வு செய்வதில் நீங்கள் கில்லியான நபராக இருந்தாலும், உங்களுடைய போர்ட் ஃபோலியோவை நிர்வகிப்பதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக, மேக்ரோக்கள் இந்திய பங்குகளின் விலையில் மிகவும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்து வதால், மிகவும் குறைந்த எண்ணிக்கை யிலான சிறந்த நிறுவனங்களே நீண்ட நாள் அடிப்படையில் தொடர்ந்து சிறப்பான செயல்பாடு களைக் கொண்டிருக்க முடிகிறது. நிறுவனங்களின் செயல்பாடுகளை 1990-களில் இருந்து ஆராய்ந்து அவற்றில் குறைந்தபட்சம் இரண்டு இலக்க அளவிலான வருடாந்திர வளர்ச்சி விகிதமும், 12 சதவிகித அளவிலான வரிக்கு பிந்தைய ஆர்.ஓ.சி.இ (ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாயிட்) இருக்கிற நிறுவனங்களைத் தேடினால் என்.ஐ.ஐ.டி, சிப்லா, ஹீரோ மோட்டோ, சுவராஜ் இன்ஜின்ஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி போன்ற ஐந்து நிறுவனங்களே வருகின்றன. இதில், ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்தப் பங்குகளை நீங்கள் 2000 -ம் ஆண்டில் வாங்கியிருந்தால், 2010-ல் உங்களுடைய போர்ட்ஃபோலியோவின் மதிப்பு பத்து மடங்கு உயர்ந்திருக்கும்.

இதேபோன்ற ஒரு ஆராய்ச்சியை 2018-ம் ஆண்டில் செய்தால், நமக்கு 12 நிறுவனங்களின் பட்டியல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் மேக்ரோக்களின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டபின்னரும் மேலே சொன்ன விஷயங்களின் (ஃபில்டர்) அடிப்படையில் செயல்படும் நிறுவனங்கள் நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களாகக் கருதப்படவேண்டியவையாகும். இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களால் லாபம் பார்க்கமுடியும்.

மூன்றாவதாக, சுலபமாகத் தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான கடனுக்கான வட்டி எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருப்பதும் முதலீட்டின் அடிப்படையை நன்கு மாற்றியமைக்கலாம். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் தலைசிறந்த ஸ்மால்கேப் பங்குகளின் பக்கம் முதலீட்டாளர்கள் கவனத்தைத் திருப்பி, அவற்றில் முதலீடுகளை நீண்டநாள்கள் அடிப்படையில் செய்து காத்திருப்பது சிறந்த விஷயமாக மாற வாய்ப்புள்ளது.

சிறு வயது வாரன் பஃபெட் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் எப்படி முதலீடு செய்தாரோ, அதேபோன்றதொரு நிலை என்றுகூட இதைச் சொல்லலாம்.

- செளரப் முகர்ஜி நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)

(முதலீடு வளரும்)